Skip Ribbon Commands
Skip to main content
முகப்பு :: துரித இணைப்புக்கள் :: அந்தரங்கமும் பாதுகாப்பும்

அந்தரங்கமும் பாதுகாப்பும்

நீங்கள்தங்களின் தனிப்பட்ட விபரங்கள் எதனையும் வழங்காமல் இந்த இணையத்தளத்தில் உள்ள தகவல்களை தேடவும் அணுகவும் முடியும். நீங்கள் தங்களின் விபரங்கைள சுயமாக வழங்கியிருக்குமிடத்து, (உதாரணம் – இணையமூலமாக படிவங்கள் அல்லது மின்னஞ்சல் கோரிக்கைகளினூடாக) நெறிமுறைப்படுத்தப்பட்டவாறான தங்களின் தனிப்பட்ட தகவல்களை வைத்திருக்குமாறு நாம் மிகவும் குறைந்தளவிலேயே கேட்கின்றோம்.

எவ்வாறாயினும், தள தேடுதல் வடிவமைப்புக்கள் போன்ற சில தகவல்கள் எமது தளத்தினைப் பார்வையிடும் போதே தன்னியக்கமாக தகவல்களைப் பெற்றுக் கொள்கின்றன. ஏதேனும் சந்தர்ப்பத்தில் ஏதேனுமொரு தனிப்பட்ட தகவலானது பெறப்படுவதானது மொத்த படிவத்தில் இத்தகைய தகவலைப் பயன்படுத்தவதற்காகவேயன்றி தனிப்பட்ட முறையில் வருகையாளர்களினை அடையாளங் காண்பதற்காகவல்ல என்பதை உறுதிப்படுத்துகிறோம்.

அந்தரங்க வெளிப்படுத்துகை
  • இது ஒரு இலங்கை இறைவரித் திணைக்களத்தின் இணையத்தளமாகும். எமது அந்தரங்க வெளிப்படுத்துகையினை ஆய்வு செய்தமைக்கு நன்றி.
  • நீங்கள் இந்த இணைய தளத்தில் தேடுதலினை மட்டும் மேற்கொள்வீர்களாயின், தங்களை தனிப்பட்ட முறையில் அடையாளங் காண்பதற்கு எமக்கு அனுமதியளிக்கின்ற தரவுகளை நாம் பெற்றுக் கொள்ளமாட்டோம்.
  • இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களமானது, கொள்கைகளை திட்டமிடுதல் மற்றும் நிருவகிக்கும் நோக்கத்திற்காக தனிப்பட்ட தரவுகளை பெறுகின்றது அல்லது சேகரிக்கின்றது. தனிப்பட்ட ரீதியில் அடையாளப்படுத்தத்தகு தரவுகளை நீங்கள் எமக்குத்தரத்தகு மின்னஞ்சல் ஒன்றை எமக்கு அனுப்பினால் அல்லது விண்ணப்பம் ஒன்றை தெரிவு செய்வீர்களாயின் சட்டத்தில் தடை செய்யப்பட்டாதவிடத்து, உங்களுக்கு திறன் மிக்கதும் காத்திரமானதுமான சேவைகளை வழங்கும் நோக்கில் நாம் அவசியமான தரவுகளை ஏனைய அரச முகவர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடும்.
  • விதித்துரைக்கப்பட்ட அரசாங்க சேவைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அதிகாரமளிக்கப்பட்ட அத்தகைய அமைப்புக்கள் தவிர்ந்த அரச சார்பற்ற அமைப்புக்களுடன் தங்களின் தனிப்பட்ட தரவுகளை நாம் பகிர்ந்து கொள்ள மாட்டோம்.
  • தங்களின் சௌகரியத்திற்காக எங்களுக்கு அல்லது ஏனைய அரசாங்க முகவராண்மைகளுக்கு நீங்கள் முன்னதாக வழங்கிய தரவுகளை வெளிப்படுத்தவும் முடியும். இது கொடுக்கல் வாங்கலினை விரைவுபடுத்துவதுடன் முன்னைய சமர்ப்பித்தல்கள் தொடர்பில் மீளவும் தோன்றும் பிரச்சனைகளிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும். தரவுகள் உரிய திகதியிலானதாக இருத்தல் வேண்டும். தயவுசெய்து எமக்கு இறுதியான தரவுகளை வழங்கவும். தங்களுக்கு வினைத்திறன் வாய்ந்த பொதுச் சேவையினை வழங்குவதற்குத் தேவையெனில் மட்டுமே நாம் தங்களின் தனிப்பட்ட தரவுகளை நம்வசம் வைத்திருப்போம். தாங்கள் எங்களுக்கு முன்னதாக வழங்கியுள்ள தங்களின் தனிப்பட்ட தரவுகளை அணுகுவதற்கு அல்லது புதுப்பித்துக் கொள்வதற்கு தயவுசெய்து எமது இணையத்தள நிறுவனத்தினை தொடர்பு கொள்ளவும்.
  • தனிப்பட்ட தரவுகளை பொருத்தமான பாதுகாப்பு தொழில்நுட்பங்களுடன் கூடிய அனைத்து இலத்திரனியலில் சேமித்து வைத்தல் மற்றும் தனிப்பட்ட விபரங்களின் பரிமாற்றத்துடன் பாதுகாத்தல்.
  • இந்த இணையத்தளமானது எங்களுடையவற்றிலிருந்து வேறுபடக் கூடிய தரவுப் பாதுகாப்பு மற்றும் அந்தரங்க செயற்பாடுகளைக் கொண்டிருக்கின்ற அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைய தளங்களுக்கான இணைப்புக்களையும் கொண்டிருக்கலாம். நாம் இவ்வாறான ஏனைய இணையத்தளங்களின் உள்ளடக்கம் மற்றும் அந்தரங்க செயற்பாடுகளுக்கு எவ்விதத்திலும் பொறுப்பேற்கமாட்டோம் என்பதுடன் நீங்கள் அத்தகைய தளங்களின் அந்தரங்க அறிவுறுத்தல்கள் தொடர்பில் ஆராயுமாறு தங்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.
  • நீங்கள் இத்தகைய தரவுப் பாதுகாப்பு மற்றும் அந்தரங்க கொள்கை தொடர்பில் ஏதேனும் ஐயப்பாடுகள் அல்லது அக்கறைகளைக் கொண்டிருப்பின், தயவுசெய்து தொடர்பு கொள்க.​​​​
​​
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது: 09-05-2015