සිංහලதமிழ்English
கொடுப்பனவு திகதி:
காலாண்டு ஆரம்பமாவதற்கு முன்னதாக – (வருடாந்த விதிப்பனவின் 4 சம தவணைக் கட்டணங்களில்)
மொத்த சேகரிப்பு மீதான விதிப்பனவு
பந்தய பணம் கட்டும் மற்றும் சூதாட்டம் தொடர்பான வியாபாரத்தின் மொத்த சேகரிப்பின் 10% இல் அறவிடப்படுகின்ற விதிப்பனவானது மாதாந்த அடிப்படையில் செலுத்தப்படுதல் வேண்டும். எவ்வாறாயினும், மாதமொன்றுக்கு ஒரு மில்லியன் ரூபாவினை விஞ்சாத மொத்த சேகரிப்புக்களாக இருக்குமிடத்து, இவ்விதிப்பனவுக்கு ஏற்புடையதாகாது. மொத்த சேகரிப்பு மீது இந்த விதிப்பனவுக்குட்படுகின்ற ஏதேனும் வியாபாரமானது பெறுமதி சேர் வரி அல்லது தேசக் கட்டுமான வரியினைச் செலுத்துவதற்கான பொறுப்பினைக் கொண்டிருப்பதில்லை.
கொடுப்பனவு
மொத்த சேகரிப்பு மீதான செலுத்தத்தக்க விதிப்பனவானது குறித்த மாதத்தினை உடனடுத்து வரும் மாதத்தின் முதலாவது வாரத்துக்கு அல்லது அதற்கு முன்பாக செலுத்தப்படுதல் வேண்டும்.