முகப்பு :: வரி வகைகள் ::
வருமான வரி (IT)
வருமான வரி
வருமான வரியானது, 2021 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டத்தினால் திருத்தப்பட்ட 2017 ஆம் ஆண்டின் உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் அடிப்படையில் அறவீடு செய்யப்படுகின்றது. உள்நாட்டு இறைவரிச் சட்டமானது 2018 ஏப்ரல் 1 ஆம் திகதியன்று அல்லது அதன் பின்னர் ஆரம்பமாகும் ஒவ்வொரு வரி மதிப்பாண்டுக்கும் அத்தகைய ஆளுக்கு எழுகின்ற அல்லது எழுந்த ஒவ்வொரு ஆளின் அல்லது பங்குடமையின் இலாபங்கள் மற்றும் வருமானத்தின் மீது வருமான வரியினை அறவிடுவதற்கு, விதிப்பதற்கு மற்றும் சேகரிப்பதற்கான சட்ட அதிகாரத்தினை வழங்குகின்றது.
வருமான மூலங்கள்:
-
ஊழிய வருமானம்
- வரி மதிப்பாண்டொன்றிற்கான ஊழியமொன்றிலிருந்தான ஆளொருவரின் வருமானங்கள் மற்றும் இலாபங்களின் கணிப்பீடு
-
வியாபார வருமானம்
- குறித்த வரி மதிப்பாண்டொன்றிற்கான வியாபாரமொன்றிலிருந்தான ஆளொருவரின் வருமானமானது குறித்த ஆண்டில் நடாத்தப்படுகின்ற வியாபாரத்திலிருந்தான ஆளொருவரின் வருமானங்கள் மற்றும் இலாபங்களாகும்.
-
முதலீட்டு வருமானம்
- குறித்த வரி மதிப்பாண்டொன்றிற்கான முதலீட்டிலிருந்தான ஆளொருவரின வருமானமானது குறித்த ஆண்டில் மேற்கொள்ளப்படுகின்ற முதலீட்டிலிருந்தான ஆளொருவரின் வருமானங்கள் மற்றும் இலாபங்களாகும்.
-
ஏனைய வருமானம்
- குறித்த வரி மதிப்பாண்டொன்றிற்கான ஏனைய மூலங்களிலிருந்தான ஆளொருவரின் வருமானம் என்பது, ஏதேனுமொரு வகையிலான ஏதேனுமொரு மூலத்திலிருந்தான ஆளொருவரின் வருமானம் மற்றும் இலாபத்தினைக் குறிப்பிடுகின்றது. எவ்வாறாயினும், அமைய மற்றும் மீண்டெழாத தன்மையினைக் கொண்டதான இலாபங்களை உள்ளடக்காது.
இலங்கையில் வதிவினைக் கொண்டிருக்க வேண்டியவரென கருதப்படக் கூடிய ஆளொருவர் தொடர்பில் இலங்கையிலிருந்து மற்றும் இலங்கைக்கு வெளியிலிருந்து அவரினால் பெற்றுக் கொள்ளப்படும் வருமானம் தொடர்பில் வருமானவரி அறவிடத்தக்கதாகும். வருமான வரிக்கான அவரின் பொறுப்பானது அவரின் உலகளாவிய வருமானத்திற்கும் விரிவாக்கப்படுகின்றது. இலங்கையில் வதிவினைக் கொண்டிராதவர் எனக் கருதப்படும் ஆளொருவர் தொடர்பில் அவரினால் இலங்கையிலிருந்து பெறப்படும் அல்லது எழுகின்ற இலாபங்கள் மற்றும் வருமானம் தொடர்பில் மாத்திரம் வருமான வரி அறவிடத்தக்கதாகும்.
வரி மதிப்பாண்டொன்றில்
இலங்கையில் வதிவினைக் கொண்டுள்ள அல்லது வரி மதிப்பாண்டொன்றில்
இலங்கையில் வதிவினைக் கொண்டிராத, ஆனால் இலங்கைப் பிரஜையாக இருக்கின்ற ஆளொருவர், குறமொத்த நிவாரணமாக
- 2020 சனவரி 1 ஆம் திகதிக்கு முன்னர் ஒவ்வொரு வரி மதிப்பீட்டாண்டிற்கும் ரூபா.500,000 இனை மொத்த வரி விடுதொகையாகப் பெறுவார். பெறுவார்
- 2020 சனவரி 1 ஆம் திகதி அன்றோ அதன் பின்னர் ஒவ்வொரு வரி மதிப்பீட்டாண்டிற்கும் ரூபா 3,000,000 பெறுவார்
நம்பிக்கை பொறுப்பாளர், பெறுநர், நிறைவேற்றுநர் அல்லது ஒழிப்போன் ஒருவராகவுள்ள தனியாள் ஒருவர் நம்பிக்கை பொறுப்பாளர், பெறுநர் நிறைவேற்றுநர் அல்லது ஒழிப்போனாக இந்த தனிப்பட்ட நிவாரணத்தை கழிக்க உரித்துடையவராக மாட்டார் என்பதுடன் அந் நிவாரணமானது முதலீட்டு ஆதணங்களின் தேறிப்பெறுகையில் இருந்தான ஈட்டங்களுக்கு எதிராக கழிக்கப்படுதல் ஆகாது.
வரிக் கொடுப்பனவு
வருமான வரியானது, சுய வரி மதிப்பீட்டு அடிப்படையில் செலுத்தத்தக்கதாகும். “தவணைக் கொடுப்பனவாளர்” ஒருவராக இருக்கின்ற ஆளொருவர் வரியினைக், காலாண்டு தவணக் கட்டணங்களாகச் செலுத்தலாம்.
தவணைக்கட்டணம் |
கொடுப்பனவுத் திகதி |
1 ஆவது தவணைக் கட்டணம் |
வரி மதிப்பாண்டின் ஆகஸ்ட் மாதத்திற்குரியது, 15 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்பாக |
2 ஆவது தவணைக் கட்டணம் |
வரி மதிப்பாண்டின் நவம்பர் மாதத்திற்குரியது, 15 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்பாக |
3 ஆவது தவணைக் கட்டணம் |
வரி மதிப்பாண்டின் பெப்ரவரி மாதத்திற்குரியது, 15 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்பாக |
4 ஆவது தவணைக் கட்டணம் |
உடனடுத்து வரும் வரி மதிப்பாண்டின் மே மாதத்திற்குரியது, 15 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்பாக |
இறுதித் தவணைக் கட்டணம் |
வரி மதிப்பாண்டின் இறுதி ஆறு மாதங்கள் முடிவடைகின்ற திகதியன்று அல்லது அதற்கு முன்பாக |
வருமான வரி (IT) விபரத்திரட்டுக்க/ செலுத்தப்படற்பாலதான மதிப்பிடப்பட்ட வரிக் கூற்றினை ளினைச் சமர்ப்பித்தல்
-
செலுத்தப்படற்பாலதான மதிப்பிடப்பட்ட வரிக் கூற்றினை சமர்ப்பிப்பதற்கான திகதி :
- நடப்பு வரிமதிப்பீட்டாண்டின் ஓகஸ்ட் மாதத்தின் 15 ஆம் திகதி அன்றோ அதற்கு முன்னர்
-
விபரத்திரட்டுக்களினைச் சமர்ப்பிக்க வேண்டிய திகதி :
- உடனடுத்து வரும் வரி மதிப்பாண்டின் நவம்பர் மாதத்தின் 30 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்பாக
-
பின்வருமாறு சமர்ப்பிக்கலாம் :
|
|
|
|
|
|
|
|