Skip Ribbon Commands
Skip to main content
முகப்பு :: வரி வகைகள்​ :: உழைக்கும் போது செலுத்தும் வரி (PAYE)
 

உழைக்கும் போது செ​​லுத்தும் வரி 

2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 114 ஆம் அல்லது 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 83 ஆம் பிரிவின் நியதிகளின்படி (2018 ஏப்ரல் 1, இருந்து) தொழில் வழங்குனர்கள் உழைப்பூதிய கொடுப்பனவு மேற் கொள்ளப்படும் வேளையில் ஊழியர்களின் ஊழிய வருமானத்தின் மீது வருமான வரியினைக் கழிப்பனவு செய்யுமாறு கேட்கப்படுகின்றனர்.

இந்நோக்கத்திற்காக, உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தினால் அத்தகைய வரிக் கழிப்பனவுகள் மேற்கொள்ளப்படுகையில் பயன்படுத்தப்பட வேண்டிய வரி அட்டவணைகள்​ குறித்துரைக்கப்பட்டுள்ளது. உழைப்பூதியம் சம்பாதிக்கப்படுகின்ற வேளையில் செலுத்தப்படும வரி என்பதால், இந்த முறைமையானது உழைக்கும் போது செலுத்தும் முறைமை (PAYE) என அழைக்கப்படுகின்றது.

​​​​

வரிக் கொடுப்பனவு
  • ஒவ்வொரு தொழில்வழங்குனரும் உழைக்கும்போது செலுத்தும் வரி           முறைமையின்படி ஊழியரிடமிருந்து உழைக்கும்போது செலுத்தும் வரியினை கழிப்பனவு செய்வதற்கான கடப்பாட்டினைக் கொண்டுள்ளதுடன் கழிப்பனவு செய்யப்பட்ட மொத்த தொகையானது தொடர்ந்து வரும் மாதத்தின் 15 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்பாக திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும்.

உழைக்கும்போது செலுத்தும் வரி வருடாந்த பிரகடனத்தினைச் சமர்ப்பித்தல்
  • சமர்ப்பிக்க வேண்டிய திகதி:
    • உரிய வரி மதிப்பீட்டாண்டுக்கான உழைக்கும்போது செலுத்தும் வரி (PAYE) வருடாந்த பிரகடனத்தினைச்​ அடுத்துவரும் வரி மதிப்பீட்டாண்டின் ஏப்ரல் மாதத்தின் 30 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்பாக சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
  • சமர்ப்பிக்க வேண்டிய இடம்:
    • உள்நாட்டு இறைவரி திணைக்களக் கட்டிடத்தின் 1 ஆவது மாடியிலுள்ள மத்திய ஆவணப்படுத்தல் முகாமைத்துவ பிரிவில் (வடக்கு பிரிவு) கையளிக்கப்படுதல் வேண்டும்
பதிவிறக்கங்கள்:​​​​​​

உபொசெவரி அட்டவணை 

உபொசெவரி அட்டவணை – 2018/2019, 2019/2020 - 31 டிசம்பர் 2019 வரை​​​​​
உபொசெவரி வரிக் கணிப்பீடு – 2018/2019​​​​​
உபொசெவரி அட்டவணை – 2019/2020 - 2020 ஜனவரி 01 முதல் 2020 மார்ச் 31 வரை​​​​​​
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது: 30-03-2021