Skip Ribbon Commands
Skip to main content
முகப்பு :: வரி வகைகள்​ :: முத்திரைத் தீர்வை (SD)
 

முத்திரைத் தீர்வை

முத்திரைத் தீர்வை கட்ட​ளைச் சட்டமானது, 1909 இல் இலங்கையில் சட்டமாக்கப்பட்டது. அதன் பின்னர், சாதனங்கள் மற்றும் ஆவணங்களில் முத்திரைத் தீர்வைக்கான விதிப்பனவினை அமுல்படுத்துவதற்காக முத்திரைத் தீர்வை சட்டத்தின் 43 ஆம் பிரிவு பாராளுமன்றத்தில் சட்டமாக்கப்பட்டது.

அசையா ஆதனங்கள் மற்றும் குறித்த சில ஆதனங்கள் மீதான முத்திரைத் தீர்வையானது அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு உரித்தளிக்கப்பட்டன. அத்துடன் மத்திய அரசாங்கத்தினால் நிருவகிக்கப்படும் முத்திரைத் தீர்வைகள் 2002 மே 01 ஆந் திகதியிலிருந்து அமுலுக்குவரும் வகையில் இடைநிறுத்தப்பட்டது. அரசாங்கமானது, முத்திரைத் தீர்வையினை 2006 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க முத்திரை தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தினூடாக மீள-அறிமுகப்படுத்தியதுடன், குறித்த பத்து ஆவணங்களுக்கு மட்டுமே ஏற்புடையதாக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு விதித்துரைக்கப்பட்ட ஆவணங்கள் பின்வருமாறு;

  • சத்தியக் கடதாசி
  • காப்புறுதிக் கொள்கை
  • பிரசித்த நொத்தாரிசு ஆக கடமையாற்றுவதற்கான ஆணைப்பத்திரம்
  • வர்த்தகம், வியாபாரம், உயர்தொழில் அல்லது வாழ்க்கைத் தொழிலினை கொண்டு நடாத்துவதற்கான குறித்துரைக்கப்பட்ட காலப்பகுதியொன்றிற்கான உரிமம்
  • கடன் அட்டைப் பயன்பாட்டின் போதான கடன் கோரிக்கை அல்லது கேள்வி
  • புதிய/அல்லது மேலதிக வழங்குகையின் மீதான அல்லது கைமாற்றத்தின் அல்லது சாட்டுதலின் மீதான பங்குச்சான்றிதழொன்று
  • ஓர் ஆதனத்தைப் பாதிக்கும் திட்டவட்டமான பணத்தொகையொன்றிற்கான முறியொன்று
  • வாக்குறுதிச் சீட்டு
  • ஏதேனும் ஆதனமொன்றின் குத்தகை அல்லது வாடகை
  • ஏதேனும் பணத்துக்காக அல்லது வேறு ஆதனத்திற்காக வழங்கப்பட்ட பற்றுச்சீட்டு அல்லது பொறுப்பு விடுவிப்பொன்று.
அறவிடக்கூடிய தன்மை

முத்திரைத் தீர்வையானது, 2008 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்கச் சட்டத்தினால் (திருத்தச்) திருத்தியமைக்கப்பட்டவாறு 2006 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ், இலங்கையில் எழுதி நிறைவேற்றப்படும், வரையப்படும் அல்லது முன்வைக்கப்படும் அல்லது சாதனமொன்று வரையப்படுகின்ற அல்லது வழங்கப்படுகின்ற ஒவ்வொரு விதித்துரைக்கப்பட்ட ஆவணங்களின் மீதும், இலங்கையிலுள்ள ஆதனத்துடன் தொடர்புடையதும் இலங்கைக்கு வெளியே நிறைவேற்றப்படுகின்றதுமானதும், இலங்கையில் வழங்கப்படுகின்றதும் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதுமான விலக்களிப்புக்களுக்குட்பட்டு அறவீடு செய்யப்படுகின்றது.

வரி வீதங்களுடன் தொடர்புடைய விலக்களிப்புக்களுடன் தொடர்புடைய
அதி விசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டவை
  • 2006.04.03ஆம் திகதிய 1439/3ஆம் இல
  • 2006.10.05ஆம் திகதிய 1465/19ஆம் இல
  • 2008.01.01ஆம் திகதிய 1530/13ஆம் இல
  • 2012.12.17ஆம் திகதிய 1789/9ஆம் இல
  • 2013.05.10ஆம் திகதிய 1809/19ஆம் இல
  • 2014.11.21ஆம் திகதிய 1889/48ஆம் இல
  • 2014.09.01ஆம் திகதிய 1878/08ஆம் இல
  • 2014.05.26ஆம் திகதிய 1864/02ஆம் இல
அதி விசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டவை
  • 2006.10.05ஆம் திகதிய 1465/20ஆம் இலக்கம்
  • 2007.01.01ஆம் திகதிய 1478/07ஆம் இலக்கம்
  • 2008.04.22ஆம் திகதிய 1456/07ஆம் இலக்கம்
  • 2012.04.04ஆம் திகதிய1752/17ஆம் இலக்கம்
  • 2012.05.09ஆம் திகதிய 1757/9ஆம் இலக்கம்
  • 2012.05.10ஆம் திகதிய 1809/19ஆம் இலக்கம்
  • 2012.10.04ஆம் திகதிய 1778/32ஆம் இலக்கம்
  • 2012.12.18ஆம் திகதிய 1789/15ஆம் இலக்கம்
சாதனம், வரி வீதங்கள், விலக்களிப்புக்கள் மற்றும் ஏனைய விபரங்களைக் கொண்டிருக்கின்ற முத்திரைத் தீர்வை அட்டவணை.

குழுவின் அதிகாரமானது, உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தின் நோக்கெல்லையின் கீழ் தற்போது நிருவகிக்கப்பட்டு வருகின்ற பின்வரும் சட்டவாக்கங்களிலிருந்து எழுகின்ற (அவற்றின் அனைத்து திருத்தச் சட்டங்களும் உள்ளடங்கலாக) விடயங்களை உள்ளடக்குகின்றது.

சாதனம் வீதம் (ரூபா)
1. சத்தியக் கடதாசி 50/-
2. காப்புறுதிக் கொள்கை ஒவ்வொரு 1,000 இற்கும் அல்லது அதன் பகுதிக்கும் 1/-
3. பிரசித்த நொத்தாரிசாக   கடமையாற்றுவதற்கான ஆணைப் பத்திரம் 2,000/-
4. ஏதேனும் வியாபாரம், உயர்தொழில் அல்லது   வாழ்க்கைத் தொழிலினை நடாத்துவதற்கான     குறித்த காலப்பகுதிக்குரிய உரிமம் மதுபானங்களை விற்பனை செய்வதற்கான உரிமம் 20,000 ஏனையவை,
2,000 அல்லது உரிமக் கட்டணத்தின் 10% - கூடியது
5. கடன் அட்டைக் கொடுப்பனவுகள் ஒவ்வொரு 1,000 இற்கும் அல்லது அதன் பகுதிக்கும் 15/-
6. ஏதேனும் கம்பனியொன்றின் ஏதேனும்       பங்குகளின் எண்ணிக்கையின் வழங்கல்,     மாற்றல் அல்லது ஒப்படையினைத்           தொடர்ந்து வழங்கப்பட்ட ஏதேனும் பங்குச்       சான்றிதழ் அத்தகைய வழங்கல், மாற்றல் அல்லது ஒப்படைப்புத் திகதியன்று உதவி ஆணையாளர்/ பிரதி ஆணையாளர்/ ​ஆணையாளர் திறந்த சந்தையில் விற்க்கக்கூடிய பெறுமதி எனக் கருதப்படுகின்ற, அத்தகைய பங்குகளின் திரண்ட பெறுமதியின் மீது ஒவ்வொரு ரூபா 1,000/- அல்லது அதன் பகுதிக்கு ரூபா 5/-.
7. ஏதேனும் ஆதனத்தினைப் பாதிக்கின்ற ஈடு ஒவ்வொரு ரூபா1,000 அல்லது அதன் பகுதிக்கு 1/-
8. வாக்குறுதிச் சீட்டு ஒவ்வொரு ரூபா1,000 அல்லது அதன் பகுதிக்கு 1/-
9. ஏதேனும் ஆதனத்தின் குத்தகை அல்லது வாடகையுடன் தொடர்புடைய ஏதேனும் சாதனம் வாடகை அல்லது குத்தகை வழங்கப்பட்ட காலப்பகுதியானது இருபது வருடங்களை விஞ்சுமாயின், குத்தகையில் உள்ளடங்குகின்ற மொத்த காலப் பகுதிக்கும் செலுத்தப்படற்பாலதான மொத்த வாடகை அல்லது குத்தகையானது, அத்தகைய காலப்பகுதியின் முதல் இருபது வருடங்களுக்கு செலுத்தத்தக்க வாடகை அல்லது குத்தகையின் மொத்தத் தொகையானதாக இருத்தல் வேண்டுமென கருதப்படுதல் வேண்டும்.
ஒவ்வொரு ரூபா 1,000/- இற்கும் அல்லது 1982 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க பாவனையாளர் கடன் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் வாடகை கொள்வனவு உடன்படிக்கையொன்றின் கீழ் செலுத்தப்படற்பாலதான திரண்ட தொகையின் பகுதிக்கும்
திரண்ட வாடகை அல்லது குத்தகையின் பகுதி அல்லது ஒவ்வொரு ரூபா 1,000/- இற்கும் (இருபது வருடங்களை விஞ்சுமிடத்து, குத்தகை காலப்பகுதியின் முதல் 20 வருடங்களுக்கான தொகையினை விஞ்சாத) ரூபா 10/-.
10. ஏதேனும் பணத் தொகை அல்லது ஏதேனும்      ஆதனத்திற்காக வழங்கப்படும் பற்றுச் சீட்டு        அல்​து அறவீடு ரூபா 25/- (ரூபா 25,000/- இனை விஞ்சுகின்ற தொகை)
முத்திரைத் தீர்வையின் சேர்க்கை

ஒன்று திரட்டும் நோக்கத்திற்காக, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும். பின்வரும் ஆட்கள் பதிவினைப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

  • காப்புறுதிப் கொள்கையினை வழங்குகின்ற எவரேனும் ஆள்
  • உரிமங்களை வழங்குகின்ற எவரேனும் அதிகாரி
  • கடனட்டை சேவையினை வழங்கும் எவரேனும் சேவை வழங்குனர்
  • 100 மேற்பட்ட தொழிலார்களுக்கு தொழிலை வழங்கும் எவரேனும் தொழில் வழங்குனர்
  • அந்நேரத்தில் விதித்துரைக்கப்பட்டவாறு, அத்தகைய சாதனத்தை முத்திரையிடலில் செயன்முறைப்படுத்த முடியாமை அல்லது அடைய முடியாமைக்கு உட்பட்ட ஏனைய சாதனத்தை வழங்கும் யாரேனும் வேறு ஆள்.

ஒன்று திரட்டும் அதிகாரியானவர் உரிய முத்திரை தீர்வையினை சேகரிக்குமாறு தேவைப்படுத்தப்படுவதுடன், காலாண்டின் இறுதி திகதியிலிருந்து 15 நாட்களினுள் காலாண்டுக்குரிய அனுப்புதல்களை உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பி வைப்பார்.

கொடுப்பனவு முறை

முத்திரைத் தீர்வையானது, முத்திரைகளை ஒட்டுவதன் மூலம், விதித்துரைக்கப்பட்ட வங்கிக்கு செலுத்துவதன் மூலம் அல்லது அதிகாரமளிக்கப்பட்ட ஆட்களினால் முத்திரைத் தீர்வையினை ஒன்று திரட்டுவதன் மூலம் முத்திரைத் தீர்வையினைச் செலுத்தலாம்.

கொடுப்பனவுகள் இலங்கை வங்கியின் தப்ரபேன் கிளையிலுள்ள உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தின் முத்திரைத் தீர்வை கணக்கு இலக்கமான 4153842 இற்கு மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.

கம்பனி பங்குகளின் வழங்கல்/மாற்றல் அல்லது ஒப்படை மீதான முத்திரைத் தீர்வைக் கொடுப்பனவு
பங்கு வழங்கல்
  • பங்கு வழங்கல் விண்ணப்பத்தினை மூன்று பிரதிகளில் பூர்த்தி செய்தல் வேண்டும்
  • வருமான வரி கோவையிலிருந்து பங்கொன்றுக்கான பெறுமதியினைப் பெறுதல்
  • முத்திரைத் தீர்வை கிளையின் உரிய வரி மதிப்பாளரிடமிருந்து சரியான முத்திரைத் தீர்வையினைப் பெறுதல்
  • முத்திரைத் தீர்வைக் கொடுப்பனவானது முத்திரைத் தீர்வை பிரிவிலுள்ள விதித்துரைக்கப்பட்ட கொடுப்பனவு சிட்டைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.
  • கொடுப்பனவை காசாக மக்கள் வங்கியின் கணக்கு இலக்கம் 204-1-001-0-0085127 இன் ஊடாக ஹைட் பார்க் கிளையில் திணைக்கள கொடுப்பனவு நறுக்கான படிவ இலக்கம்.102 S/D இனைப் பயன்படுத்தி மேற்கொள்ள முடியும்.

அல்லது;

வழங்குதல்: அங்கீகாரம் வழங்குவதற்கு தேவையான இயைபான ஆவணங்களுடன் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தின் பெயரில் கொடுப்பனவு கட்டளை / வங்கி வரைபினை வழங்குதல்.

குறிப்பு :

  • சந்தாதாரர் / ஆரம்ப பங்கு வழங்கல் எனில் விண்ணப்பம் இரண்டு பிரதிகளில் பூரணப்படுத்தப்படல் வேண்டும்,
  • வருமான வரிக் கோவையிலிருந்து பெறுமதி மதிப்பீட்டினைப் பெறத் தேவையில்லை
  • புதிய கம்பனி சட்டத்திற்கிணங்க, பங்கொன்றின் பெறுமதியானது பணிப்பாளர்களினால் தீர்மானிக்கப்பட வேண்டியிருப்பதால், தீர்மானமானது பணிப்பாளர்களின் கையொப்பத்துடன் அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும். (செயலாளரின் உண்மைப் பிரதி ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது)
  • வரி செலுத்துனர் அடையாள இலக்க சான்றிதழின் பிரதி.
பங்கு மாற்றல்
  • பங்கு மாற்றல் விண்ணப்பத்தினை மூன்று பிரதிகளில் பூரணப்படுத்துதல்
  • முறையே பங்கு வழங்கல் தொடர்பான குறிப்பு இல.2, 3, 4, 5 இலுள்ளவாறான அதே நடைமுறைகளைப் பின்பற்றுதல்
ஈட்டுப் பிணை முறிகள், குத்தகை/வாடகை/வாடகை உடன்படிக்கைகள் மீதான முத்திரைத் தீர்வை கொடுப்பனவு
  • முத்திரைத் தீர்வையானது, சாதனமொன்று நிறைவேற்றப்படுகின்ற அதே நேரத்தில் அல்லது அதற்கு முன்பாக செலுத்தப்படுதல் வேண்டும்.
  • அசையா ஆதனங்களின் குத்தகை மற்றும் ஈடு நிறைவேற்றப்பட்ட திகதியிலிருந்து 7 நாட்களினுள் செலுத்தப்படுதல் வேண்டும்.
  • கொடுப்பனவுகள், உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தின் பெயரில் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.
    • முத்திரைத் தீர்வை கணக்கு இல. 204-1-001-0-0085127, மக்கள் வங்கி, வங்கி வரைபு / கொடுப்பனவு கட்டளை அல்லது காசு மூலம் திணைக்கள கொடுப்பனவு நறுக்கான படிவ இலக்கம்.102 S/D இனைப் பயன்படுத்தி மேற்கொள்ள முடியும்.
  • காசாக மேற்கொள்ளப்பட்ட கொடுப்பனவாயின், சாதனத்தின் மூலப் பிரதி மற்றும் போட்டோ பிரதியினை முத்திரைத் தீர்வை பிரிவின் கொடுப்பனவு சிட்டையின் பிரதியுடன் அனுப்பி வைக்குக.
  • முத்திரைத் தீர்வை பிரிவானது அந்த சாதனத்தின் மீது தேவையான உறுதிப்படுத்தலினை மேற்கொள்ளும்.
வடமாகாணத்திலுள்ள அசையா ஆதனங்களின் (அன்பளிப்புக்கள் உள்ளடங்கலாக) மாற்றல்கள்
  • வட மாகாணத்திலுள்ள மேற்குறித்த அசையா ஆதனங்கள் (அன்பளிப்புக்கள் உள்ளடங்கலாக) தொடர்பான முத்திரைத் தீர்வையானது, உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திற்கு செலுத்தத்தக்கதாகும்.
  • பங்கு வழங்கல் தொடர்பான குறிப்பு இலக்கம் 2, 3, 4, 5 என்பவற்றிலுள்ளவாறான அதே நடைமுறைகளையே பின்பற்றுக.
பதிவிறக்கங்கள்

​​​​​​​​​

 

படிவங்கள்​

விண்ணப்ப படிவங்கள்​​​​​​​​​​​
​​
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது: 19-09-2017