Skip Ribbon Commands
Skip to main content
முகப்பு :: வரி வகைகள்​ :: பெறுமதி சேர் வரி (VAT)
 

பெறுமதி சேர் வரி​

2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சட்டத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட பெறுமதி சேர் வரியானது (பெசேவ) 2002 ஆகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வந்தது. பெசே வரியானது பொருட்கள் மற்றும் சேவைகள் வரியை பதிலீட்டம் செய்த்துடன் பொருட்கள் மற்றும் சேவைகளின் நுகர்ச்சியின் மீதான வரியாகவும் காணப்படுகின்றது.

​இது பொருட்கள் மற்றும் சேவைகளின் உள்நாட்டு நுகர்வின் மீது விதிக்கப்படும் வரியாகும். இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் இலங்கையின் சட்ட ரீதியான எல்லைகளுக்குள் வழங்கப்படுகின்ற பொருட்கள் மற்றும் சேவைகள் என்பன இவ்வரி விடயத்திற்கு உள்ளாகின்றன. இது பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தி மற்றும் விநியோக சங்கிலியின் ஒவ்வொரு நிலையிலுமுள்ள அதிகரித்த பெறுமதியின் மீது விதிக்கப்படும் ஓர் பல்நிலை வரியாகும். இந்த வரியானது, இறுதி அல்லது பொருட்கள் மற்றும் சேவைகளின் இறுதி பயன்பாட்டாளரினால் பொறுப்பேற்கப்படுகின்றது. இது ஒரு மறைமுக வரியாகும். இறுதி பயன்பாட்டாளரினால் செலுத்தப்பட்ட தொகைக்கு சமமான தொகையினை அரசாங்கம் உற்பத்தி மற்றும் விநியோக சங்கிலியிலுள்ள அனைத்து இடைநிலை வழங்குனர்களினூடாக இறுதியில் பெற்றுக் கொள்ளும்.

பெசேவ ஆனது குறித்த சில இறக்குமதிகள் மற்றும் பொருட்களின் சில்லறை மற்றும் மொத்த வழங்கலின் மீது விதிக்கப்படுவதில்லை. பெசே வரியிலிருந்து விலக்களிப்புப் பெற்ற பொருட்கள் மற்றும் சேவைகளுமுள்ளன.​​​​​​​

​​

சட்டங்கள்

2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச் சட்டம் (2002 யூலை 26 ஆம் திகதியன்று சான்றுப்படுத்தப்பட்டது)
2003 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச்(திருத்த) சட்டம் (2003 பெப்ரவரி 27 ஆம் திகதியன்று சான்றுப்படுத்தப்பட்டது)
2004 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச்(திருத்த) சட்டம் (2004 நவம்பர் 18 ஆம் திகதியன்று சான்றுப்படுத்தப்பட்டது)
2005 ஆம் ஆண்டின் 06 ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச்(திருத்த) சட்டம் (2005 மார்ச் 30 ஆம் திகதியன்று சான்றுப்படுத்தப்பட்டது)
2006 ஆம் ஆண்டின் 08 ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச்(திருத்த) சட்டம் (2006 மார்ச் 31 ஆம் திகதியன்று சான்றுப்படுத்தப்பட்டது)
2007 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச்(திருத்த) சட்டம் (2007 ஏப்ரல் 12 ஆம் திகதியன்று சான்றுப்படுத்தப்பட்டது)
2008 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச்(திருத்த) சட்டம் (2008 பெப்ரவரி 29 ஆம் திகதியன்று சான்றுப்படுத்தப்பட்டது)
2009 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச்(திருத்த) சட்டம் (2009 மார்ச்31 ஆம் திகதியன்று சான்றுப்படுத்தப்பட்டது)
2011 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச் சட்டம் (2011 மார்ச் 31 ஆம் திகதியன்று சான்றுப்படுத்தப்பட்டது)
2012 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச் (திருத்த) சட்டம் (2011 மார்ச் 30 ஆம் திகதியன்று சான்றுப்படுத்தப்பட்டது)
2013 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச் (திருத்த) சட்டம் (2013 ஏப்ரல் 24 ஆம் திகதியன்று சான்றுப்படுத்தப்பட்டது)
2014 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச் (திருத்த) சட்டம் (2014 ஏப்ரல் 24 ஆம் திகதியன்று சான்றுப்படுத்தப்பட்டது)
2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் திரட்டிய வரைபு (2014.04.24 ஆந் திகதி வரையில் கூட்டிணைப்பு திருத்தங்கள்)
2015 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச் (திருத்த) சட்டம் (2015 ஒக்டோபர் 30 ஆம் திகதியன்று சான்றுப்படுத்தப்பட்டது)
2016 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச் (திருத்த) சட்டம் (2016 நவெம்பர் 1 ஆம் திகதியன்று சான்றுப்படுத்தப்பட்டது)
2018 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச் (திருத்த) சட்டம் (2018 ஆகஸ்ட் 16 ஆம் திகதியன்று சான்றுப்படுத்தப்பட்டது)
2019 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச் (திருத்த) சட்டம் (2019 ஒற்றௌபா் 31 ஆம் திகதியன்று சான்றுப்படுத்தப்பட்டது)
2021 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச் (திருத்த) சட்டம் (2021 மே 13 ஆம் திகதியன்று சான்றுப்படுத்தப்பட்டது)
2022 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச் (திருத்த) சட்டம் (2022 மார்ச் 31 ஆம் திகதியன்று சான்றுப்படுத்தப்பட்டது)
2022 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச் (திருத்த) சட்டம் (2022 டிசம்பர் 14 ஆம் திகதியன்று சான்றுப்படுத்தப்பட்டது)
2023 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச் (திருத்த) சட்டம் (2023 டிசம்பர் 13 ஆம் திகதியன்று சான்றுப்படுத்தப்பட்டது)
2024 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச் (திருத்த) சட்டம் (2024 மார்ச் 20 ஆம் திகதியன்று சான்றுப்படுத்தப்பட்டது)
நிதிச் சேவைகள் மீதான அறவிடத்தக்கவைகள் நீங்கலாக பெறுமதி சேர் வரிக்கான விதிப்பனவுகள்
  • தயாரிப்பாளர்கள்
  • இறக்குமதியாளர்கள்
  • சேவை வழங்குனர்கள்​
  • கேள்வி உடன்படிக்கையின் கீழான பொருட்கள் மற்றும் சேவைகளின் வழங்குனர்கள்
  • விற்பனை மற்றும் சில்லறை வர்த்தகம்
பதிவு எல்லை
  • மொத்த விற்பனை மற்றும் சில்லறை வர்த்தகம் அடங்கலாக எவரேனும் நபரினால் பண்டங்கள் அல்லது நிதி சேவைகள் தவிர்ந்த சேவைகளின் வரியிடற்பாலதான சேவையின் பெறுமதி (2022.10.01 செயல்வலுப்பெறும் வகையில்)
    • காலாண்டு ஒன்றுக்கு ரூபா 20 மில்லியனை விஞ்சின், ஆண்டொன்றுக்கு ரூபா 80 மில்லியனை விஞ்சின்
  • குறிப்பிட்ட நிறுவனம் அல்லது ஏனைய நபரினால் நிதி சேவைகளின் பெறுமதி
    • காலாண்டு ஒன்றுக்கு ரூபா 3 மில்லியனை விஞ்சின், ஆண்டொன்றுக்கு ரூபா 12 மில்லியனை விஞ்சின்
  • தன்னார்வப் பதிவு
    • வரியிடற்பாலதான வழங்கலைக் கொண்டு செல்லும் அல்லது கொண்டு நடத்தும் எவரேனும் நபர் பதிவு எல்லையை பொருட்படுத்தாது தன்னார்வப் பதிவுக்கு விண்ணப்பம் ஒன்றை மேற்கொள்ளலாம்
பெ.சே.வ வீதங்கள்
  • பூச்சிய வீதம் (0%)
    1. ஏற்றுமதி
    2. பண்டங்கள் அல்லது சேவைகளின் ஏற்றுமதி, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையுடன் பதிவு செய்யப்பட்டுள்ள உள்ளீடுகளின் மொத்த பெறுமதியில் 60% இனை உள்ளூர் வழங்குகைள்/மூலங்களில் இருந்து பெறப்பட்ட, ஹோட்டல், விருந்தினர் மனை, சிற்றுண்டிச்சாலை அல்லது அதனை ஒத்த சேவைகளை வழங்கும் ஏனைய அதனை ஒத்த வியாபாரங்களினால் வழங்கப்படும் சேவைகள். (01.12.2019 இல் இருந்து 31.05.2022 வரை)
  • நியம வீதம்
    1. 01.06.2022 இற்கு முன்னர்- 8%
    2. 01.06.2022 முதல் 31.08.2022 வரை- 12%
    3. 01.09.2022 முதல் 31.12.2023 வரை- 15%
    4. 01.01.2024 முதல் - 18%
  • நிதி சேவைகளின் வழங்குகை மீது
    1. 01.01.2022 இற்கு முன்னர் - 15%
    2. 01.01.2022 முதல் - 18%

பெறுமதி சேர் வரியினை பதிவு செய்தல்

அருகில் உள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஏதேனும் பிராந்திய காரியாலயத்தில் அல்லது தலைமையகத்தின் இரண்டாவது மாடியில் அமைந்துள்ள ஆரம்ப பதிவு செய்தல் அலகு TIN சான்றிழைப் பெற்றுக்கொண்டு வரி பதிவு செய்தல் அலகு VAT பதிவினைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும்.

பதிவு செய்தலுக்கு ஏற்புடையதான திகதியிலிருந்து பதினைந்து நாட்களினுள் வரி வகை பதிவுசெய்தல் படிவத்தினூடாக (TPR_005_T) விண்ணப்பிக்கப்படுதல் வேண்டும்.

பதிவு செய்தலுக்கு தேவையான ஆவணங்கள்
  • TIN சான்றிதழ்
  • வியாபார பதிவுச் சான்றிதழ்
  • பொறுப்பு வரையறுக்கப்பட்ட கம்பனியாக இருக்குமிடத்து,
    • அமைப்பு அகவிதிப் பத்திரம்
    • பணிப்பாளர்களின் விபரப்பட்டியல்
    • கூட்டிணைப்புச் சான்றிதழ்
  • வியாபார உரிமையாளர்கள்/பணிப்பாளர்களின் தே.அ.அட்டை போட்டோ பிரதிகள்.
  • காசுப் பெறுகையினை நிரூபிப்பதற்கான மாதாந்த வங்கி கூற்றுக்கள் மற்றும் புரள்வை நிரூபிக்கும் விற்பனைகளின் விபரங்கள்.
  • அத்தகைய ஏற்றுமதியாளரினால் தொடர்ச்சியாக ஏற்றுமதி மேற்கொள்ளப்பட்டதனை நிரூபிக்கும் ஆவணங்கள்.
  • 22 (7) பதிவுக்காக - கருத்திட்ட திட்ட வரைபு
    • முதலீட்டுச் சபை ஒப்பந்தப் பிரதி (இருப்பின்)
    • ஆதனத்தின் உறுதி அல்லது வாடகை / குத்தகை ஒப்பந்தப் பிரதி
    • முதலீட்டுச் சபை அல்லாத கருத்திட்டமாயின் கருத்திட்ட நிதி மூலத்தை உறுதிப்படுத்தல்
    • எதிர்பார்க்கப்பட்ட கொள்வனவு – உள்ளூர் - இறக்குமதி
பதிவு செய்யப்பட்ட ஆளின் கடப்பாடுகள்

வியாபார நிலையத்தில் தெளிவாக தெரியக் கூடிய இடத்தில் பதிவுச் சான்றிதழினை காட்சிக்கு வைத்தல். வரி விலைப்பட்டியல்களை வழங்குதல். (பதிவு செய்யப்பட்ட ஏனைய ஆட்களுக்கு) உரிய காலப்பகுதிகளுக்குரிய கணக்குகளைப் பேணுதல். உரிய திகதியன்று அல்லது அதற்கு முன்பாக வரிகளை செலுத்துதலும் விபரத்திரட்டுக்களைச் சமர்ப்பித்தலும்.

ஏதேனும் பின்வரும் மாற்றங்கள் குறித்து தாமதிக்காமல் திணைக்களத்திற்கு அறிவித்தல்.

  • பெயர்
  • வியாபார இடம்
  • உரிமை
  • வியாபாரத்தின் தன்மை
பெசேவ கொடுப்பனவுகள்

பொருட்கள் அல்லது சேவைகளை வழங்கும் எவரேனும் ஆள் அல்லது பங்குடமை, குறித்த மாதத்திற்கான கொடுப்பனவினை அடுத்து வரும் மாதத்தின் 20 ஆம் நாளன்று அல்லது அதற்கு முன்பாக மேற்கொள்ளுமாறு கேட்கப்படுகின்றனர்.

பெசேவ விபரத்திரட்டுக்களை சமர்ப்பித்தல்

சமர்ப்பிக்க வேண்டிய திகதி:

ஒவ்வொரு வரி விதிக்கத்தக்க காலப்பகுதி காலாவதியானதன் பின்னரான மாதத்தின் இறுதி நாளன்று அல்லது அதற்கு முன்பாக.

கையளிக்க வேண்டிய இடம்:

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது: 22-03-2024