Skip Ribbon Commands
Skip to main content
Amuraghapura Kingdom
முகப்பு :: எம்மைப் பற்றி :: உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் வரலாறு :: அநுராதபுர இராஜ்ஜியம்
 

அநுராதபுர இராஜ்ஜியம்​

சிறிய ஏரிகள் மற்றும் கால்வாய்கள் போன்ற வருமானத்தினை ஈட்டும் நீர்ப்பாசன அலகுகளிலிருந்து அவர்களால் பெறப்படும் நீருக்கு வரி அறவிடப்பட்டிருந்தது. நீரானது கொண்டு வந்து விற்பனை செய்யக்கூடியதாக இருந்தது. நீர்த் தொட்டிகளின் உரிமையாளர்கள் தொட்டிகளுக்கு கிடைக்கப்பெறும் நீருக்காக கொடுப்பனவு மேற்கொள்ள வேண்டியிருந்துள்ளதுடன் அதிலிருந்து நீரினைப் பெற்று பயன்படுத்துபவர்களிடமிருந்து கட்டணம் அறவிடப்பட்டது. அரசரானவர் இக்குளங்களின் மீது அதிகளவிலான பங்கினைக் கொண்டிருந்ததுடன் பதினேழாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரையில் நீர் மீதான இவ்வரியின் பிரதான பயனாளியாகவும் அவரே இருந்துள்ளார். நீர் மீதான இவ் வரி விதிப்பனவானது “தியபெதும்” அல்லது “தகபத்” என அழைக்கப்பட்டது. இது அரசருக்கும் அவ்வாறே சிறிய கால்வாய்கள் மற்றும் ஏரிகளின் தனியார் உரிமையாளர்களுக்கும் செலுத்தப்பட்டது.

தகபத்திற்கு மேலாக, அரசரானவர் அனைத்து பயன்படுத்தப்படும் மற்றும் பயிரிடப்படும் நிலங்களிலிருந்து பெறப்படும் உற்பத்திகளிலிருந்து ஒரு பங்கினை பெற்றுள்ளார். ​​​​​

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது: 24-05-2015