Skip Ribbon Commands
Skip to main content
முகப்பு :: எம்மைப் பற்றி :: உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் வரலாறு​ :: கொள்கை மாற்றங்கள் ஏற்பட்ட ஆண்டுகள்
 

கொள்கை மாற்றங்கள் ஏற்பட்ட ஆண்டுக​ள்

ஆண்டு கொள்கை மாற்றங்கள்
1941 ஆம் ஆண்டு மிகை இலாபங்கள் தீர்வையானது தொழிற்பாட்டுக்கு வந்தது.
1948 ஆம் ஆண்டு
மிகை இலாபங்கள் தீர்வை நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக இலாபங்கள் வரி அறிமுகப்படுத்தப்பட்டது
1950 ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது இரட்டை வரி (நிவாரண)​ ஒப்பந்தத்தம் ஐக்கிய இராச்சியத்துடன் கைச்சாத்திட்டது.​
1958 ஆம் ஆண்டு கல்டோர் ஆணைக்குழு முன்மொழிவுகள்
  • மூலதன நன்மைகள் வரி விதிப்பனவு
  • செல்வ வரி விதிப்பு
  • செலவின வரி விதிப்பு
  • அன்பளிப்பு வரி விதிப்பு
உள்நாட்டு இறைவரித் திணைக்களமாக பெயரிடப்பட்டது.
1961 ஆம் ஆண்டு வருமான வரி மீதான மிகைக் கட்டண அறிமுகம்,
தேசிய அபிவிருத்தி வரி, அரிசி உதவு தொகை வரி
வியாபார, உயர்தொழில் பதிவு செய்தல் மீதான வரி மற்றும் விற்பனை வரி மீதான மிகை கட்டணம் (இறுதி 2 நாட்களுக்கு மட்டும்.)
1963 ஆம் ஆண்டு 
  • யாழ்ப்பாணத்தில் முதலாவது பிராந்திய அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
  • 1963 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழ் வியாபார புரள்வு வரி அறிமுகம்
1964 ஆம் ஆண்டு முதலாவது வரி மன்னிப்பு
1971 ஆம் ஆண்டு
  • கட்டாய சேமிப்பு விதிப்பனவு தொழிற்பாட்டுக்கு வந்தது.
  • உழைக்கும் போது செலுத்தும் வரி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது
  • மூலதன விதிப்பனவு அறிமுகப்படுத்தப்பட்டது
1972 ஆம் ஆண்டு சுய மதிப்பீட்டு முறைமையின் அறிமுகம்
1974 ஆம் ஆண்டு
  • உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மறுசீரமைக்கப்பட்டது
  • உள்நாட்டு இறைவரிச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது
1979 ஆம் ஆண்டு 1979 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம் , நடைமுறை ஆண்டின் அடிப்படையிலான வரி விதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. (79/80)
1983 ஆம் ஆண்டு புனர்வாழ்வு வி​​திப்பனவு அறிமுகப்படுத்தப்பட்டது.
1985 ஆம் ஆண்டு ஆதன தீர்வை மற்றும் அன்பளிப்பு வரி என்பன இல்லாதொழிக்கப்பட்டன
1986 ஆம் ஆண்டு வட்டி மீதான நிறுத்தி வைத்தல் வரி அறிமுகப்படுத்தப்பட்டது.
1988 ஆம் ஆண்டு
  • கம்பனி வரி விதித்தலின் “இயைபாக்க முறைமை” அறிமுகப்படுத்தப்பட்டது.
  • பந்தய மற்றும் சூதாட்ட வரி விதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
1991 ஆம் ஆண்டு மொத்த மற்றும் சில்லறை விற்பனை புரள்வு வரியினை மாகாண சபைகளுக்கு பராதீனப்படுத்தல்.
1992 ஆம் ஆண்டு
  • குறித்துரைக்கப்பட்ட கட்டணங்கள் மீதான நிறுத்தி வைத்தல் வரி அறிமுகப்படுத்தப்பட்டது.
  • தன்னியக்க முறை ஆரம்பிக்கப்பட்டது
  • தேசிய பாதுகாப்பு அறவீடு அறிமுகப்படுத்தப்பட்டது.
1998 ஆம் ஆண்டு  பொருட்கள், சேவைகள் வரிச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. (விற்பனை புரள்வு வரிக்குப் பதிலாக) 1998.01.01 இலிருந்து பதிவு செய்தலுக்கான குறுமட்டம் காலாண்டொன்றுக்கு ரூபா 500,000 அல்லது ஆண்டொன்றுக்கு 1,800,000 – வரி வீதம் 12.5%
2000 ஆம் ஆண்டு 2000 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம்
2002 ஆம் ஆண்டு
  • பெறுமதி சேர் வரி  அறிமுகப்படுத்தப்பட்டது. (பண்டங்கள், சேவைகள் வரி மற்றும் தேசிய பாதுகாப்பு அறவீடு என்பவற்றை இல்லாதொழிப்பதன் மூலம்) – பதிவு செய்தலுக்கான குறுமட்டம் காலாண்டொன்றுக்கு ரூபா 500,000 அல்லது ஆண்டொன்றுக்கு 1,800,000, அத்துடன் அட்டவணையில் குறித்துரைக்கப்பட்ட பொருட்கள் பூச்சியம் 10% மற்றும் 20% எனும் மூன்று வகையான வீதங்களில் அறவீடு செய்யப்பட்டது.
  • முத்திரைத் தீர்வையானது நீக்கப்பட்டு பற்று வரியானது அறிமுகப்படுத்தப்பட்டது.​​​
2003 ஆம் ஆண்டு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் புத்தக இலாபத்தின் மீது நிதிச் சேவைகள் மீதான பெசேவ அறிமுகப்படுத்தப்பட்டது.
2004 ஆம் ஆண்டு 2004 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதார சேவைக் கட்டணமானது 2004.01.01 இலிருந்து நியம பெசேவ வீதமானது 15% இற்கு மாற்றப்பட்டதுடன் அடிப்படை வீதமானது 2004.11.19 இலிருந்து பயனுறுதியாகும் வகையில் 5% இல் பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் மீது விதிக்கப்பட்டது.
2005 ஆம் ஆண்டு
  • ஒவ்வொரு கொள்வனவாளர் மற்றும் விற்பனையாளரினால் செலுத்தப்படற்பா​லதான வரியின் 0.2% வீதத்தில் பங்குப் பரிமாற்ற வரி அறிமுகப்படுத்தப்பட்டது.
  • செலுத்தத்தக்க வருமான வரியின் 0.25% சமூகப் பொறுப்புடமை வரி அறிமுகப்படுத்தப்பட்டது.
  • அரச சார்பற்ற நிறுவன வரி –பெறப்பட்ட தொகையின் 30% இல் 3%
  • ஆடம்பர பெசேவ விதமானது இரண்டு முறை மாற்றியமைக்கப்பட்டது 2005.01.01 இலிருந்து 2005.08.01 வரையில் 18 சதவீதமும் 2005.08.02 இலிருந்து – 20%
  • 2005.11.02 இலிருந்து சிறந்த வரி செலுத்துனர்களுக்கு சிறப்புரிமை அட்டைகள் வழங்கும் முறை ஆரம்பிக்கப்பட்டது.
2006 ஆம் ஆண்டு 2006 ஆம் ஆண்டின் 10 இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம் 2006 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க பொருளாதார சேவைக் கட்டணம் – இச்சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட பொருளாதார சேவைக் கட்டணமானது 2006 ஏப்ரல் 1 ஆம் திகதியன்று ஆரம்பமாகும் காலாண்டிலிருந்து பயன்வலுப் பெறும். 2006/07 இலிருந்து பயனுறுதியாகும் வகையில் சமூகப் பொறுப்புடமை வரி 1% இற்கு அதிகரிக்கப்பட்டது.
  • விலை மாற்றல் மற்றும் நலிவுற்ற முதலாக்கம் என்பவற்றிற்கான வருமான வரிச் சட்டத்தினைக் கூட்டிணைத்தல்
  • முத்திரைத் தீர்வையானது மீளவும் அறிமுகப்படுத்தப்பட்டது
2007 ஆம் ஆண்டு கம்பனிகள் அவற்றின் பகிரத்தக்க இலாபத்தின் 25% இற்குக் குறைந்த பங்குலாபத்தினை பகிர்ந்தளித்தகம்பனிகள் மீது 15% கருதப்பட்ட பங்கிலாப வரி அறிமுகம்.
ரூபா 600,000 இற்கு மேற்பட்ட பகிரத்தகு இலாபத்தினைக் கொண்டிருக்கும் பங்குடமைகள் மீது விதிக்கப்படுகின்ற பங்குடமை வரியின் 10% விதிப்பு.
  • 2007.01.01 இலிருந்து வெளிப்படுத்தப்பட்ட வெளியீட்டு பெ.சே.வரியின் 85% இற்கு பெசேவரிக்கான அனுமதிக்கத்தக்க உள்ளீட்டு வரி செலவுயை மட்டுப்படுத்தல்.
  • பெசேவ நிறுத்தி வைத்தல் வரி அறிமுகப்படுத்தப்பட்டது – எவரேனும் ஒப்பந்ததாரர் அல்லது ஏதேனும் அரசாங்க முகவராண்மைகளினால் செலுத்தத்தக்க பெசேவரியின் 1/3.
  • ஆண்டொன்றுக்கு ரூபா 1.8 – 2.5 மில்லியன்கள் வழங்கள் பெறுமதியைக் கொண்டவர் மீது “தேர்வு பெ.சே.வ” வரி முறைமையின் அறிமுகம்.
2008 ஆம் ஆண்டு சமூகப் பொறுப்புடமை வரியானது 2008.04.01 இலிருந்து 1.5% இற்கு அதிகரிக்கப்பட்டதுடன் அது தனிநபர் வருமான வரியின் மீது விதிப்பிலிருந்து மீளப் பெறப்பட்டது.
2009 ஆம் ஆண்டு தேசக் கட்டுமான வரி அறிமுகப்படுத்தப்பட்டது. 2009.02.01 இலிருந்து 1% வீதமாகவும் 2009.05.01 இலிருந்து 3% வீதமாகவும் அதிகரிக்கப்பட்டது.
  • நியம பெசேவ விதமானது 12% இற்கு குறைக்கப்பட்டுள்ளதுடன் அடிப்படை வீதமானது நீக்கப்பட்டது.
  • பெறுமதி சேர் வரிக்கான பதிவு செய்தல் எல்லையானது காலாண்டொன்றுக்கு ரூபா 650,000 இற்கு அல்லது ஆண்டொன்றுக்கு ரூபா 2.5 மில்லியனுக்கு அதிகரிக்கப்பட்டது.
  • பதிவு செய்தலுக்கான தெரிவு பெறுமதி சேர் வரியானது ரூபா 3 மில்லியனுக்கு அதிகரிக்கப்பட்டது.
2011 ஆம் ஆண்டு
  • வரி மீளாய்வு ஆணைக்குழுவானது 2011.04.01 இலிருந்து ஆரம்பமாகும் வகையில் தாபிக்கப்பட்டது.
  • தனிநபர் வரி விடுதொகையானது ரூபா 500,000 இற்கு அதிகரிக்கப்பட்டது.
  • 2011.04.01 இலிருந்து பயனுறுதியாகும் வகையில் இபெசேவ முறைமையின் அறிமுகம்
  • 2011.01.01 இலிருந்து பயனுறுதியாகும் வகையில் பங்குப் பரிமாற்று வீதமானது 0.3% இற்கு அதிகரிக்கப்பட்டது.
  • பெசேவ வீதத்தின் 20%, 2011.11.23 ஆம் திகதியிலிருந்து பயனுறுதியாகும் வகையில் 12% இற்கு குறைக்கப்பட்டது.
  • 2011.01.01 இலிருந்து நிதிசார் பெ.சே வரி வீதமும் 12% இற்கு குறைக்கப்பட்டது.
  • பெசேவ உள்ளீட்டு உரிமைக் கோரிக்கைகளுக்கான வெளியீட்டின் 85% மட்டுப்படுத்தலானது நீக்கப்பட்டுள்ளது.
  • தேகவ வீதமானது 2% இற்கு குறைக்கப்பட்டதுடன், மொத்த விற்பனை மற்றும் சில்லறை வியாபாரங்கள் மீதான அறவீடானது விரிவாக்கப்பட்டுள்ளது.
  • பொசேக பதிவு செய்தலுக்கான குறுமட்டமானது காலாண்டொன்றுக்கு ரூபா 25 மில்லியனுக்கு அதிகரிக்கப்பட்டது.
  • 2011.04.01 இலிருந்து பற்று வரி நீக்கப்பட்டுள்ளது.
  • விதித்துரைக்கப்பட்ட கட்டணங்கள் மற்றும் வர்த்தக வாடகைகள் மீதான நிறுத்தி வைத்தல் வரியின் நீக்கம் (2011.04.01)
  • பெசேவ முற்பணக் கொடுப்பனவுகளின் நீக்கம் – (2011 ஜனவரி 01)
  • சமூகப் பொறுப்புடமை வரியின் நீக்கம் (2011.04.01 இல் வருமான வரியுடன் தொடர்புடையது)
  • பிராந்திய உள்ளக கட்டமைப்பு அபிவிருத்தி வரி நீக்கம் (2011 ஜனவரி 01)
  • மாகாண சபைகளினால் சேகரிக்கப்படும் விற்பனைப் புரள்வு வரி நீக்கம் (2011.01.01)
2012 ஆம் ஆண்டு
  • பொசேக மீதான குறுமட்டமானது காலாண்டொன்றுக்கு ரூபா 50 மில்லியனுக்கு அதிகரிக்கப்பட்டதுடன், வரி விதிக்கத்தகு வருமானத்தினைக் கொண்டிராதவர்களுக்கு ஏற்புடைய வகையில் மேற்கொள்ளப்பட்டது.
  • பந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவானது அதிகரிக்கப்பட்டதுடன் பதிவுத் தேவைப்படுத்தலுடன் மொத்த சேகரிப்பின் மீதான 5% விதிப்பனவானது அறிமுகப்படுத்தப்பட்டது. ​
2013 ஆம் ஆண்டு
  • பெறுமதி சேர் வரி மற்றும் தேசக் கட்டுமான வரி மீதான பதிவுக் குறுமட்டமானது வருடமொன்றுக்கு ரூபா 12 மில்லியனுக்கு அதிகரிக்கப்பட்டது.
  • மொத்த விற்பனை மற்றும் சில்லறை வியாபாரம் மீதான பெசேவ அறிமுகம் மற்றும் குறித்த ஆண்டில் உடனடுத்துவரும் ஏதேனும் மூன்று மாதங்களுக்கு ரூபா 500 மில்லியனுக்கு குறையாத பதிவு செய்தலுக்கு ஏற்புடைய குறுமட்டம். (விலக்களிப்புப் பெற்ற வழங்கல்கள் உள்ளடங்கலாக) ​
  • பங்குடமையுடன் தொடர்புடைய குறுமட்டமானது ரூபா 1000,00 இற்கு அதிகரிக்கப்பட்டது.
2014 ஆம் ஆண்டு
  • தகைமை வாய்ந்த உயர் தொழிலர்களின் ஊழிய வருமானம் மீது ஏற்புடைய ஆகக் கூடிய வருமான வரி வீதம் 16%
  • பெறுமதி சேர் வரி தொடர்பில் மொத்த விற்பனை மற்றும் சில்லறை வியாபார பதிவு செய்தலுக்கு ஏற்புடைய குறுமட்டம் ரூபா 250 மில்லியனுக்கு குறைக்கப்பட்டது. ​
2015 ஆம் ஆண்டு
  • பெறுமதி சேர் வரி மற்றும் தேசக் கட்டுமான வரி தொடர்பில் மொத்த விற்பனை மற்றும் சில்லறை வியாபார பதிவு செய்தலுக்கு ஏற்புடைய குறுமட்டம் வருடமொன்றுக்கு ரூபா 15 மில்லியனுக்கு அதிகரிக்கப்பட்டதுடன் பெசேவ வீதமானது 11% இற்கு குறைக்கப்பட்டது.
  • பெறுமதி சேர் வரி தொடர்பில் மொத்த விற்பனை மற்றும் சில்லறை வியாபார பதிவு செய்தலுக்கு ஏற்புடைய குறுமட்டம் ரூபா 100 மில்லியனுக்கு குறைக்கப்பட்டது.
  • ஊழியர்களுக்கான நிலையான தகைமைவாய்ந்த கொடுப்பனவானது ரூபா 250,000 வரையில் அதிகரிக்கப்பட்டது.
  • ஒவ்வொரு ஊழியருக்குமான ஏற்புடைய ஆகக் கூடிய வருமான வரி வீதமானது 16% இற்கு மட்டுப்படுத்தப்பட்டது.
  • பந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு சட்டத்தின் கீழ் செலுத்தத்தக்க வருடாந்த விதிப்பனவானது 10% வரையில் அதிகரிக்கப்பட்டது.
  • ஆளொருவருக்கான சூதாட்ட விடுதிக்கான நுழைவுக் கட்டணம் 100 அமெரிக்க டொலருக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
  • பெசேவ மற்றும் தேகவ என்பவற்றிற்குப் பதிலாக மோட்டார் வாகன உற்பத்தி / இறக்குமதி மீது விசேட தீர்வையும், மதுபானம், சிகரட் உற்பத்தி / இறக்குமதி மீது விசேட வரியும் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • 2013/2014 வரி ஆண்டில் ரூபா 2,000 மில்லியனுக்கு மேற்பட்ட இலாபத்தினை உழைக்கின்ற எவரேனும் தனிநபர், கம்பனி அல்லது கம்பனி குழுமத்திற்கான ஒரெ தடவை வரியாக அறிமுகப்படுத்தப்பட்ட “உயர் இலாப வரியானது அவற்றின் இலாபத்தில் 25% ற்கு விதிக்கப்படல். ​​​​​​​​​​​​​​​​​
2017 ஆம் ஆண்டு
  • 2017 ஆம் ஆண்டின் 24 இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம்
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது: 13-12-2019