Skip Ribbon Commands
Skip to main content
Polonnaruwa Kingdom
முகப்பு :: எம்மைப் பற்றி :: உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் வரலாறு​​ :: பொலன​றுவை இராஜ்ஜியம்
 

பொல​றுவை இராஜ்ஜியம்​

பொலறுவை இராஜ்ஜிய ஆட்சிக் காலத்தின் போது, அரசர்களின் பிரதான வருமான மூலமாக நெல் வரியுடனான காணி வரி விளங்கியுள்ளது. நீர்ப்பாசன கால்வாய்களிலிருந்து பயன்படுத்தப்படும் நீருக்கும் (தியபெதும்) வரி செலுத்த வேண்டியிருந்தது. இரத்தினக்கற்கள், முத்துக்கள், கறுவா மற்றும் யானைத் தந்தங்கள் போன்றவற்றின் மீது வெளிநாட்டு வர்த்தகத்தில் வரி அறவிடப்பட்டுள்ளது.

இத்தகைய வரிகள் உயர்மட்ட அதிகாரிகளினால் சேகரிக்கப்பட்டன. உரிய கிராமங்களிலிருந்து அரசருக்கு சேரவேண்டிய வரிகளினை சேகரிப்பதற்கான முதன்மைப் பொறுப்பு கிராமத் தலைவரிடமிருந்தது.

வரிகள் பகுதிய​வில் தானியமாகவோ அல்லது ஏனைய விவசாய உற்பத்திகளாகவோ செலுத்தப்பட்டன. காணி வரியானது உற்பத்திகளின் ஆறில் ஒரு பங்காக அறவிடப்பட்டது. இக்காலப்பகுதிக்குரிய இன்னொரு குறிப்பிடத்தக்க பண்பாக வியாபார போக்குவரத்துப் பாதைகளினால் இணைக்கப்பட்ட சந்தை நகரங்களின் வளர்ச்சிக்காக​ அமையப் பெற்றிருந்தது. கட்டணங்களும் ஏனைய விதிப்பனவுகளும் அரசாங்கத்தினால் அறவீடு செய்யப்பட்டன. இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பொருட்களின் மீதும் வரிகள் விதிக்கப்பட்டன. ​​​

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது: 24-05-2015