Skip Ribbon Commands
Skip to main content
முகப்பு :: எம்மைப் பற்றி :: உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் வரலாறு​ :: புராதன இலங்கையின் வரி முறைமை
 

புராதன இலங்கையின் வரி மு​றைமை

வரலாற்று ஏடுகள், கல்வெட்டுக்கள் மற்றும் புராதன இலக்கியங்கள் என்பன கிறிஸ்துவுக்கு முன்னரிலிருந்து நாட்டில் நவீன வரி முறைமையின் அறிமுகம் வரையில் ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட வரி முறைமைகள் தொடர்பான ஏராளமான தகவல்களை வழங்கி வருகின்றன. கிறிஸ்துவுக்கு முன்னரான 3 ஆம் நூற்றாண்டிலிருந்த கல்வெட்டுப் பதிவுகள், விவசாய நோக்கங்களுக்கான நீர் நுகர்ச்சிக்காக செலுத்தப்பட்ட வரிகள் மற்றும் அதிகாரிகளினால் அரசாங்கத்தின் சார்பில் சேகரிக்கப்பட்ட வரிகள் (“தகபதி” “போஜகபதி") தொடர்பான அனைத்து தகவல்களையும் வழங்குகின்றன.

வரி சேகரிப்பு முறைமைக்கு அப்பால், வரி சேகரிப்புக்குப் பொறுப்பாகவுள்ள அதிகாரிகளின் பதவிப் பெயர்கள் மற்றும் சேகரிக்கப்பட்ட வரிகள் எந் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பன குறித்தும் அத்தகைய கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. (அத்தகைய இடங்களில்) “கனியா”, “கன்னிகா” மற்றும் “அதானா” ஆகிய இடங்களில் வரிகள் சேகரிக்கப்பட்டதுடன், இலங்கையில் மிகவும் புராதன காலத்திலிருந்தே (இந்தியாவிலிருந்து ஆரிய குடியேற்றவாசிகள் இலங்கைக்கு வருகை தந்த காலத்திலிருந்தே) சர்வதேச வர்த்தகமானது சிறப்புடன் செயற்பட்டு வந்துள்ளதுடன் அதிகாரிகள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மையங்களில் வரியினை அறவிட்டும் வந்துள்ளனர். அநுராதபுர ஆட்சிக் காலத்தின் போது அந்நியச் செலாவணியின் பிரதான மூலமாக காணப்பட்ட முத்துக் குளித்தல் இடம் பெறும் மஹத்திதவில் (மன்னார்) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தீர்வைகளின் சேகரிப்புக்கு “மஹாபத்துலத்த” எனும் அதிகாரிகள் பொறுப்பாகவிருந்தனர். ஹம்பாந்தோட்டையிலிருந்து கொடவாய துறைமுகமானது இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பொருட்களின் மீது வரி அறவிடப்படும் இன்னொரு மையமாக விளங்கியது.​

கிறிஸ்துவுக்கு முன் இரண்டாம் நூற்றாண்டிலிருந்து காணி வரிகள் அறவிடப்பட்டு வந்துள்ளதாக கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. விசேட நோக்கங்களுக்காக சேகரிக்கப்பட்ட வரிகளின் ஒதுக்கீடானது, புராதன கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளன. நகரத்திற்கு வழங்குவதற்காக தானியங்களை ஏற்றிவரும் வண்டில்களுக்கு நகரத்தின் நுழைவாயிலில் வைத்து வரி அறவிடப்பட்டதுடன் அத்தகைய வரி சேகரிப்புக்கள் பௌத்த துறவிகளுக்கு தானம் வழங்கும் மண்டபத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களின் ஆட்சியின் கீழ் முழு நாடும் வரும் வரையில் மலைநாட்டில் ஆட்சியிலிருந்த கண்டி இராஜ்ஜியம் இறுதியான இராஜ்ஜியமாக விளங்கியது. 1660 ஆம் ஆண்டு தனது கப்பல் மூழ்கியமையினால் இலங்கை கரையிலிறங்கிய போது சிங்கள அரசனால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட ரொபேர்ட் நொக்ஸ் இருபது வருடங்களின் பின்னர் இலங்கை சிறையிலிருந்து பிரித்தானியாவுக்கு தப்பியோடினான்.  அவன் பிரித்தானியாவுக்கு தப்பிச் சென்றதும் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்ட போது அவன் பெற்ற அநுபவங்களை பதிவு செய்திருந்தான். அவன் ஆண்டொன்றில்  மூன்று முறைகள் வரிகள் எவ்வாறு அறவிடப்படுகின்றன என்பது குறித்தும் அவ்வாறு சேகரிக்கப்படும் வரிகள் எவ்வாறு அரசனின் திறைசேரிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன என்பது குறித்தும் விபரமாக தெரிவித்திருந்தான். அதற்கிணங்க, நொக்ஸ் வேறுபட்ட வரி வீதங்களில் வரிகள் செலுத்தப்பட்டுள்ளதை பதிவு செய்திருந்தான். இரத்தினக்கற்கள், வைன், எண்ணெய், சோளம், தேன், மெழுகு, துணிவகைகள், இரும்பு, புகையிலை மற்றும் யானைத் தந்தங்கள்  என்பன (அந்த வகையீட்டினுள்) உள்ளடங்குகின்றன.​

ஒருவரின் மரணத்தின் போது அறவிடப்படும் வரியே மறள் வரியாகும் (மரண வரி). இந்நோக்கத்திற்காக தனியானதொரு உத்தியோகத்தர் இவ் வரிச் சேகரிப்புக்காக நியமிக்கப்பட்டிருந்தார். காலனித்துவ ஆட்சியின் போது பொதுமக்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்கு பாதகமாக அமைந்திருந்த வரிகள் நீக்கப்பட்டன. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தொழிற்பாட்டிலிருந்த நெல் வரியானது 1882 இல் நீக்கப்பட்டது.

நெல் வரியினை இல்லாதொழித்தலானது மாகாணங்களில் நெல் பயிரிடலினை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையாக அமைந்திருந்தது (அரசாங்க அதிபர்கள் அறிக்கை – 1882). 1893 இல் கோதுமை மா, அரிசி, சீனி, புகையிலை மற்றும் பருத்தி (அரசாங்க அதிபர்கள் அறிக்கை – 1893, கிழக்கு மாகாணத்தில்) என்பவற்றுக்கு வரி அறவிடப்பட்டது.

அநுராதபுர இராஜ்ஜியத்தின் சததிஸ்ஸ அரச வம்சத்திலிருந்து கண்டி இராஜ்ஜியத்தின் நரேந்திரசிங்க அரச வம்சத்திற்கு சில வரி வடிவங்களில் அல்லது வேறு வகைகளில் வரி விதிக்கப்பட்டமை தொடர்பில் போதுமான ஆதாரங்கள் உள்ளன. இக்காலப்பகுதிகளில் அரசினால் அவரது மக்களுக்கு அளிக்கப்பட்ட சேவைகளுக்கும் வரி விதிப்பனவுக்குமிடையில் நேரடியான தொடர்பு இருந்துள்ளது. அரசரானவர் தனது மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதனால் அவர் மக்களின் உற்பத்தி நிலங்களிலிருந்தான உற்பத்திகளில் ஒரு பகுதியினை பெறுவதற்கு உரித்துடையராவார். அத்துடன் வைத்திருக்கும் நிலத்திற்கான நிபந்தனையாக சேவை வழங்குவதற்கான கடப்பாடு இருந்துள்ளது. ​

​​​​​​​

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது: 24-05-2015