Skip Ribbon Commands
Skip to main content
முகப்பு :: வரி வகைகள் :: நிருமாண கைத்தொழில் உத்தரவாத​​ நிதிய விதிப்பனவு (CIGFL)
 

நிருமாண கைத்தொழில் உத்தரவாத நிதிய விதிப்பனவு 

நிருமாண கைத்தொழில் உத்தரவாத நிதிய விதிப்ப​னவானது, 2005 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் பகுதி III இல் முதன்மையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

விதிப்பனவு

நிருமாண கைத்தொழில் உத்தரவாத நிதிய விதிப்பனவானது, விதித்துரைக்கப்பட்ட ஏற்புடைய வீதத்தில் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட (2005 ஜனவரி 1 ஆம் திகதியன்று அல்லது அதன் பின்னர்) ஏதேனும் “நிருமாண ஒப்பந்தத்தின் பெறுமதி” இன் மீது ஏதேனும் “நிருமாண ஒப்பந்ததாரர்” அல்லது “உப ஒப்பந்ததாரர்” இனால் செலுத்தத்தக்கதாகும்.

எவ்வாறாயினும், 2011 ஜனவரி 1 ஆம் திகதியிலிருந்து மற்றும் அதன் பின்னர் மேற்கொள்ளப்படும் நிதி அமைச்சரினால் அங்கீகரிக்கப்பட்ட விதித்துரைக்கப்பட்ட கருத்திட்டங்களின் அமுலாக்கத்திற்கான ஒப்பந்தங்கள் தொடர்பில் அவர்களின் ஒப்பந்த பெறுமதி மீது எவரேனும் நிருமாண ஒப்பந்ததாரரினால் இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ளதும் மேற்கொள்ளப்பட்டதுமான ஏதேனும் நிருமாண ஒப்பந்தம் மீது நிருமாண கைத்தொழில் உத்தரவாத நிதிய விதிப்பனவு விதிக்கப்படுதலாகாது. (2011 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் (திருத்த) பகுதி IV)

பதிவு செய்தல்
  • ​நிருமாண ஒப்பந்ததாரர்கள் அல்லது உப ஒப்பந்ததாரர்கள் - விதிப்பனவினை செலுத்துவதற்கு பொறுப்புடையதாயின், திணைக்களத்தின் நிறுத்தி வைத்தல் வரி கிளையிலிருந்து பதிவு இலக்கத்தினைப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
  • ஒப்பந்ததாரர்கள் அல்லது உப ஒப்பந்ததாரர்களுக்கான கொடுப்பனவாளர்கள் – அத்தகைய ஆட்கள் அல்லது பங்குடமைகள், அத்தகைய நிறுத்தி வைத்தல் வரிக் கழிப்பனவினை மேற்கொள்வதற்கு முன்னதாக திணைக்களத்தின் நிறுத்து வைத்தல் வரிக் கிளையிலிருந்து பதிவினைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்கப்படுகின்றனர்.
வீதங்கள்
ஒப்பந்த பெறுமதி வீதங்கள்
ரூபா 15 மில்லியனுக்கும் குறைந்தவை இல்லை
ரூபா 15 மில்லியனுக்கு குறையாததும் ரூபா 50 மில்லியனுக்கு குறைந்ததும் 0.25%
ரூபா 50 மில்லியனுக்கு குறையாததும் ரூபா 150 மில்லியனுக்கு குறைந்ததும் 0.5%
ரூபா 150 மில்லியன் அல்லது அதற்கு மேல் 1%
கொடுப்பனவுகள்
ஒப்பந்த கொடுப்பனவாளரினால் நிறுத்தி வைக்கப்படும் விதிப்பனவு

கொடுப்பனவாளரினால் கழிப்பனவு செய்யப்பட்ட நிருமாண கைத்தொழில் உத்தரவாத நிதிய விதிப்பனவானது, அத்தகைய விதிப்பனவு மேற்கொள்ளப்பட்ட மாதத்தினைத் தொடர்ந்து வரும் 15 ஆம் நாளன்று அல்லது அதற்கு முன்பாக உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும்.

ஒப்பந்ததாரர்கள் அல்லது உப ஒப்பந்ததாரர்களினால் செலுத்தத்தக்க வரி

நிருமாண கைத்தொழில் உத்தரவாத நிதிய விதிப்பனவுக்கான பொறுப்பானது அத்தகைய கொடுப்பனவு நேரத்திலேயே எழுகின்றது. ஒவ்வொரு மாதத்துடன் தொடர்புடைய ஏதேனும் கொடுப்பனவுகள் இருப்பின், அவை நிருமாண கைத்தொழில் உத்தரவாத நிதிய விதிப்பனவின் கழிப்பனவு சான்றிதழில் சான்றுப்படுத்தப்பட்டவாறு கொடுப்பனவாளரினால் கழிக்கப்பட்ட நிருமாண கைத்தொழில் உத்தரவாத நிதிய விதிப்பனவினை பதிவழிப்பு செய்ததன் பின்னர் தொடர்ந்து வரும் மாதத்தின் 15 ஆம் நாளன்று அல்லது அதற்கு முன்னதாக மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.

சேகரிப்பு முறை

​2009.04.01 இலிருந்து பயனுறுதியாகும்

  • நிறுத்தி வைத்தல் வரி முறைமையானது, நிருமாண கைத்தொழில் உத்தரவாத நிதிய விதிப்பனவுடன் கூட்டிணைக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, 2009.04.01 இலிருந்து பயனுறுதியாகும் வகையில் ரூபா 15 மில்லியனுக்கு குறையாத ஏதேனும் நிருமாணத்திற்காக எவரேனும் ஒப்பந்ததாரர் அல்லது உப ஒப்பந்ததாரருக்கு ஏதேனும் கொடுப்பனவினை மேற்கொள்கின்ற எவரேனும் ஆள் அல்லது பங்குடமையானது அத்தகைய பெறுமதியின் அடிப்படையில் விசேட வீதத்தில் நிருமாண கைத்தொழிலில் உத்தரவாத நிதிய விதிப்பனவினை அத்தகைய கொடுப்பனவுகளிலிருந்து கழிப்பனவு செய்யுமாறு கேட்கப்படுகின்றனர்.
வரைவிலக்கணம்

“நிருமாண ஒப்பந்ததாரர்” என்பது, கேள்வி மனுவில் ஒப்பந்ததாரராக பெயரிடப்பட்ட ஆள் அல்லது ஆட்கள் அல்லது நிறுவனம் அல்லது நிறுவனங்களையும் அல்லது அத்தகைய ஒப்பந்தமொன்றின் நியதிகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிருமாணப் பணிகளின் அமுலாக்கம், பூர்த்தி செய்தல் மற்றும் பேணுதல் என்பவற்றிற்கும் பொறுப்பு வாய்ந்த ஆள் அல்லது நிறுவனமாக தொழில் வழங்குனரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆளினையும் குறிக்கின்றது.

“ஒப்பந்த பெறுமதி” என்பது, ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளுக்கமைவாக சீராக்கப்பட்டதன் பின்னர் ஏற்றுக் கொள்ளப்படும் கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை அல்லது தொகைகளைக் குறிப்பிடுகின்றது. மேற்குறித்த ஒப்பந்த பெறுமதியானது கருத்திட்ட நிருமாணமொன்றின் நடைமுறைப்படுத்தல் தொடர்பில் செய்து கொள்ளப்பட்டுள்ள தனிப்பட்ட ஒப்பந்தங்கள் அல்லது பல்வேறு ஒப்பந்தங்களின் மொத்தத் தொகையாக இருக்கும் என்பதுடன் உப ஒப்பந்த பெறுமதிகள், வழங்கல் ஒப்பந்த பெறுமதிகள் மற்றும் நிருமாணப் பணியினை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படக் கூடிய அத்தகைய ஏனைய நிருமாண செலவுகள் என்பவற்றினையும் உள்ளடக்குகின்றது. ​​​​​​​​​​​​​

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது: 24-05-2015