Skip Ribbon Commands
Skip to main content
Employer responsibilities (PAYE)
முகப்பு :: பயனுள்ள தகவல் :: தொழில் வழங்கு​ரின் கடப்பாடுகள் (உ.பொ.செ)​    

தொழில் வழங்குனரி​ன்​ கடப்பாடுகள் (உ.பொ.செ)

தொழில் ​​ ​வழங்குனர் ​பின்வருவன தொடர்பில் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்
  • ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு கொடுக்கல் வாங்கல் தொடர்பான ஆவணங்களையும் பாதுகாப்பாக பேணி வருதல் வேண்டும். ஆணையாளர் நாயகத்தினால் அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர்கள் அத்தகைய ஆவணங்களைப் பரிசீலிப்பதற்கென கோரும் போதெல்லாம் அவை சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும். (பிரிவு 119)
  • மாதாந்தம் மேற்கொண்ட ஒவ்வொரு உ.பொ.செ. வரிக் கழிப்பனவினையும் அடுத்து வரும் மாதத்தின் 15 ஆம் நாளுக்கு முன்னதாக ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும். (பிரிவு 120) (அ)
  • சகல ஊழியர்களுக்கும் ஏப்பிரல் 30ஆம் திகதிக்கு முன்னர் ரி 10 படிவத்தில் வரிக் கழிப்பனவுச் சான்றிதழ்கள் வழங்கப்படுதல் வேண்டும். (பிரிவு 120) (ஆ)
  • வருடாந்த விபரத்திரட்டினை ஒவ்வொரு ஆண்டும் ஏப்பிரல் 30 திகதிக்கு முன்னதாக ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பி வைத்தல் வேண்டும். (பிரிவு 120) (ஈ)
  • வரிகளை அறவிடுவதற்கு அல்லது அனுப்பி வைப்பதற்கு தொழில் வழங்குன​ர் பொறுப்பாக இருப்பார். இவ்வாறு செய்யத் தவறும் தொழில தருநர்கள் அத்தகைய தொகையினை தனிப்பட்ட முறையில் செலுத்துவதற்குப் பொறுப்பாவார்கள். (பிரிவு 124) (1). 
  • வரியினை அறவிடுவதற்கு / அனுப்புவதற்கு தவறுமிடத்து வரியின் 50% விஞ்சாத தொகையினை தண்டமாக வரிக்கு மேலதிகமாகச் செலுத்துதல் வேண்டும்.
  • ஊழியர் சார்பில் தொழில் வழங்குனரால் உ.பொ.செ. வரி செலுத்தப்படும் போது 1,2,4,5 மற்றும் 7 ஆம் வரிச் சூத்திரங்களில் காட்டப்பட்டுள்ள வரிக்கு மேலதிகமாக 6 வரிச் சூத்திரத்தில் காட்டப்படும் பின்வரும் வரியினையும் செலுத்துதல் வேண்டும் என்பதனையும் தயவு செய்து கவனத்தில் கொள்க.
    • ஊழியரின் சம்பளத்தில் கழிக்கப்படாது ஊழியர் ஒருவரின் வருமானவரியினைச் செலுத்தும் தொழில் தருநர் அல்லது வேறு எவரெனும் ஆளொருவர், அல்லது
    • ஊழியர் சம்பளத்திலிருந்து வருமான வரியினைக் கழிப்பனவு செய்து அதனை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னர் தொழில் தருநர் ஒருவரினால் அத்தொகை மீளளிப்பு செய்யப்படுதல்.​
  • எவரேனும் ஊழியர் ஒருவருக்கு செய்யப்படும் கொடுப்பனவுகள் தொடர்பில் வரி அட்டவணைகளில் குறித்துரைக்கப்பட்டுள்ள வரிச் சூத்திரங்கள் ஏற்புடையதாகாது, எனத் தென்படும் சந்தர்ப்பங்களில் அல்லது வரிச்சூத்திரங்கள் பற்றி தெளிவில்லாத சந்தர்ப்பத்தில் உ.பொ.செ. பிரிவின் ஆணையாளரிடம் அல்லது செயலகத்தில் அது பற்றி அறிவித்து, தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவும்​
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது: 29-05-2015