Skip Ribbon Commands
Skip to main content
முகப்பு :: வெளியீடுகள் :: பகிரங்க விதிப்புக்கள்

ஆணையாளர் நாயகத்தின் பகிரங்க விதிப்புக்கள

பகிரங்க விதிப்புக்கள், பொது மக்கள் மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அலுவலர்களுக்கு வழிகாட்டுதல்களினை வழங்கும் நோக்குடன், 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 104 ஆம் பிரிவின் கீழ் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தினால் வழங்கப்படுகின்றன.

இது அமுல்படுத்தப்பட வேண்டிய வரிச் சட்டம் மற்றும் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளின் உரிய ஏற்பாடுகள் தொடர்பான ஆணையாளர் நாயகத்தின் பொருள்கோடலினை தொகுத்து வழங்குகின்றது. பகிரங்க விதிப்பானது மீளப் பெறும் அறிவித்தலொன்றின் மூலம் அல்லது புதிய விதிப்பொன்றினை வெளியீடு செய்வதன் மூலம் ஒன்றில் முழுமையாவோ அல்லது பகுதியளவிலோ மீளப் பெற்றுக் கொள்ளப்படலாம்.

வருமான வரி (IT)

இலங்கைக்கு வெளியே எவரேனும் நபர் ஒருவரினால் திரைசேரி உண்டியல் அல்லது திரைசேரி முறிகள் மீதான முதலீட்டிலிருந்து திறட்டப்பட்ட அல்லது பெறப்பட்ட வட்டி வருமானத்திற்கு 2021ஆம் ஆண்டில் 10ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரயோகம் தொடர்பிலான வழிகாட்டி - (PR/IT/2022/01)
ஏதேனும் வருடத்தின் ஏப்பிரல் முதலாம் திகதி ஆரம்பித்து உடன் தொடர்ந்து வரும் வருடத்தில் மார்ச் முப்பத்தியோராம் திகதி முடிவடையும் பன்னிரண்டு மாத காலப்பகுதி தவிர்ந்த மாற்று காலப்பகுதி ஒன்றுக்கு கணக்குகளை சமர்ப்பிக்கும் ஆளொருவருக்கு 2021 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டத்தினால் (திருத்தப்பட்டச் சட்டம்) திருத்தப்பட்டவாறு 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் (உ.இ. சட்டம்) ஏற்பாடுகளின் பொருத்தப்பாட்டு தன்மை தொடர்பிலான வழிகாட்டி - (PR/IT/2021/01)
ஊழியத்திலிருந்தான தனிநபர் வருமானத்தை கணிப்பிடுவதில்இ 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 5 ஆம் பிரிவின் (3) ஆம் உப பிரிவின் (இ) பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விலக்களிக்கப்பட்ட விடயத்தின் பிரயோகம் தொடர்பிலான வழிகாட்டி (PR/IT/2019/02_E)
வரி மதிப்பீட்டாண்டு தவிர்ந்த பிறிதொரு காலப்பகுதிக்கு அவர்களது கணக்குகளை மேற்கொள்ளஇ ஆணையாளர் நாயகத்திடம் ஏலவே அனுமதி பெற்றுள்ள வரிச்செலுத்துநர் தொடர்பில் உள்நாட்டு இறைவரிச் சட்ட ஏற்பாடுகளை பிரயோகித்தல் (PR/IT/2019/01_E)
ஆளொருவரினால் வழங்கப்பட்டசேவைகளுக்கு 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 85 ஆம் பிரிவின் (1) ஆம் உப பிரிவின் (அ) பந்திபிரகாரம் நிறுத்திவைத்தல் வரியை கழிப்பனவூசெய்யூம் விடயத்தில் உள்நாட்டு இறைவரி ஏற்பாடுகளின் பிரயோகம் தொடர்பிலான வழிக (PR/IT/2018/02_E)
2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ் கணக்கீட்டுக் காலப்பகுதியினை மாற்றுவதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள வரி செலுத்துனர்களுக்கான, 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ் செலுத்தத்தக்க வரித் தவணைக் கொட (PR/IT/2018/01_T)
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது: 12-08-2021