Skip Ribbon Commands
Skip to main content
முகப்பு :: வரி வகைகள்​ :: பொருளாதார சேவைக் கட்டணம் (ESC)
 

பொருளாதார சேவைக் கட்டணம் 

பொருளாதார சேவைக் கட்டணமானது, 2007 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க, 2009 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, 2011 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, 2012 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க மற்றும் 2013 ஆம் ஆண்டின் 06 ஆம் இலக்க பொருளாதார சேவை கட்டண திருத்தச் சட்டங்களினால் திருத்தப்பட்டவாறு 2006 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க பொருளாதார சேவைக் கட்டண சட்டத்தின் கீழ் 2006 ஏப்ரல் 01 ஆம் திகதியிலிருந்து நிருவகிக்கப்பட்டு வருகின்றது. இதற்கு முன்னதாக, இது 2004.04.01 இலிருந்து 2006.04.01 வரையில் 2004 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க மற்றும் 2005 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதிச் சட்டங்களின் கீழ் நிருவகிக்கப்பட்டுள்ளது. பொருளாதார சேவைக் கட்டணமானது பொருளாதார சேவைக் கட்டண பொறுப்பினை விஞ்சுகின்ற வருமான வரிக்கு ஏற்புடைய எவரேனும் ஆள் தொடர்பில் வருமான வரியின் முற்பணக் கொடுப்பனவாக தொழிற்பட்டு வருகின்றதுடன் அத்தகைய ஆள் பொருளாதார சேவைக் கட்டணத்தின் எவ்வித சுமையினையும் பொறுப்பேற்பதில்லை.

2012.04.01 இலிருந்து அமுலுக்கு வரும் வகையில் பொருளாதார சேவைக் கட்டணமானது, எவரேனும் ஆள் அல்லது பங்குடமையானது வரி விலக்களிப்பினை அல்லது வரி விதிக்கத்தக்க நட்டங்களைக் கொண்டிருக்கின்ற எவரேனும் ஆள் அல்லது பங்குடமையினால் மாத்திரம் செலுத்தத்தக்கதாகும்.  ​ ​​​​

​​​​

சட்டங்கள்

2006 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க பொருளாதார சேவைக் கட்டண சட்டம் (2006 மார்ச் 31 ஆம் திகதியன்று சான்றுப்படுத்தப்பட்டது)
2007 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பொருளாதார சேவைக் விதிப்பனவு (திருத்த) சட்டம் (2007 ஏப்ரல் 12 ஆம் திகதியன்று சான்றுப்படுத்தப்பட்டது)
2008 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க பொருளாதார சேவைக் விதிப்பனவு (திருத்த) சட்டம் (2008 பெப்ரவரி 29 ஆம் திகதியன்று சான்றுப்படுத்தப்பட்டது)
2009 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பொருளாதாரச் சேவை விதிப்பனவு (திருத்த) சட்டம் (2009 மார்ச் 31 ஆம் திகதியன்று சான்றுப்படுத்தப்பட்டது)
2011 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க பொருளாதாரச் சேவை விதிப்பனவு (திருத்த) சட்டம் (2011 மார்ச் 31 ஆம் திகதியன்று சான்றுப்படுத்தப்பட்டது)
2012 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க பொருளாதாரச் சேவை விதிப்பனவு (திருத்த) சட்டம் (2012 மார்ச் 30 ஆம் திகதியன்று சான்றுப்படுத்தப்பட்டது)
2006 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க பொருளாதார சேவைக் கட்டணச் சட்டத்தின் திரட்டிய வரைபு
2013 ஆம் ஆண்டின் 06 ஆம் இலக்க பொருளாதார சேவைக் கட்டண (திருத்த) சட்டம் (2013 மார்ச் 22 ஆம் திகதியன்று சான்றுப்படுத்தப்பட்டது)
2014 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க பொருளாதார சேவைக் கட்டண (திருத்த) சட்டம் (திருத்த) சட்டம் (2014 ஏப்ரல் 24 ஆம் திகதியன்று சான்றுப்படுத்தப்பட்டது)
2015 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க பொருளாதார சேவைக் கட்டண (திருத்த) சட்டம் (2015 ஒக்டோபர் 30 ஆம் திகதியன்று சான்றுப்படுத்தப்பட்டது)
2017ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க பொருளாதார சேவைக் கட்டண (திருத்த) சட்டம் (2017 மே 17 ஆம் திகதியன்று சான்றுப்படுத்தப்பட்டது)
வரிப் பொறுப்பு

கூட்டுறவு சங்கங்கள், வதிவல்லா வான் போக்குவரத்து மற்றும் கப்பல் கம்பனிகள், உள்ளுராட்சி அமைப்புக்கள் மற்றும் அரசாங்க திணைக்களங்கள், எவரேனும் விநியோகஸ்தர், எவரேனும் லொத்தர் வியாபாரி, பரஸ்பர நிதியத்தின் அல்லது இலங்கை மத்திய வங்கியின் ஏதேனும் நம்பிக்கைப் பொறுப்பு பிரிவு என்பவை தவிர்ந்த வர்த்தகம், வியாபாரம், உயர்தொழில் அல்லது வாழ்க்கைத் தொழில்  என்பவற்றினைக் கொண்டு நடாத்துகின்ற ஒவ்வொரு​ ஆள் அல்லது பங்குடமை,  அத்தகைய ஆள் அல்லது பங்குடமையானது வருமான வரியை செலுத்துவதற்கான பொறுப்பினைக் கொண்டிருக்காவிடில் பொருளாதார சேவைக் கட்டணத்தினைச் செலுத்துதல் வேண்டும். உரிய புரள்வுக்கான பிரயோகத்தகு வரி வீதம் 0.25% ஆகும்.​​

அடிப்படை

2011.04.01 இலிருந்து ஆரம்பமாகும் காலாண்டொன்றின் புரள்வானது ரூபா 50 மில்லியன் அல்லது மேலாக காணப்படின் பொருளாதார சேவைக் கட்டணத்திற்காக பதிவு செய்தல் வேண்டும். காலாண்டொன்றுக்கு செலுத்தப்பட வேண்டிய ஆகக் கூடிய பொருளாதார சேவைக் கட்டணம் ரூபா 30 மில்லியனுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 

புரள்வு

உண்மையில் கிடைக்கப்பெற்றிருப்பினும் அல்லது கிடைக்கப்பெறாவிடினும்,​ ஒவ்வொரு கொடுக்கல் வாங்கல் தொகை புரள்வு ஆகும். ஆனால், ஏற்புடைய புரள்வில் பின்வருவன உள்ளடக்கப்படுவதில்லை 

  • பெசேவ (பதிவு செய்யப்பட்டவராயின்)​​
  • மூலதன சொத்துக்களின் விற்பனையிலிருந்தான சம்பாத்தியங்கள்
  • ​அறவிடமுடியாக் கடன்கள்
வரிக் கொடுப்பனவு

பொருளாதார சேவைக் கட்டணமானது நான்கு காலாண்டுகளில் சுய வரி மதிப்பீட்டடிப்படையில் செலுத்தத்தக்கதாகும். கொடுப்பனவுகள் அதற்குரிய படிவங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுவதுடன் வரிக் காலப்பகுதியானது சரியாக குறிப்பிடப்படுதல் வேண்டும். (உ- ம்; 2015/06/30 காலாண்டு 15161)​

காலாண்டு கொடுப்பனவுத்​ திகதி
1 ஆவது காலாண்டு – ஜூலை 20 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்பாக
2 ஆவது காலாண்டு – ஒக்டோபர் 20 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்பாக
3 ஆவது காலாண்டு – ஜனவரி 20 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்பாக
4 ஆவது காலாண்டு – ஏப்ரல் 20 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்பாக
வரிகளை எதிரீடு செய்தல்

கொடுப்பனவு செய்யப்பட்ட பொருளாதார சேவைக் கட்டணமானது, உரிய வரி மதிப்பீட்டாண்டுக்காக செலுத்தத்தக்க வருமான வரிக்கெதிராக எதிரீடு செய்யப்பட முடியும். மீதி ஏதேனுமிருப்பின், அது முன் கொண்டு வரப்பட முடியுமென்பதுடன் அதனைத் தொடர்ந்து வரும் நான்கு மதிப்பீட்டாண்டுகளுக்கெதிராக அவற்றினை எதிரீடு செய்யவும் முடியும். ​

விபரத்திரட்டுக்களை சமர்ப்பித்தல்
  • ​சமர்ப்பிக்க வேண்டிய திகதி :

    பொருளாதார சேவைக் கட்டண விபரத்திரட்டுக்கள் குறித்த வரி மதிப்பீட்டாண்டின் இறுதியில் அதனை உடனடுத்து வரும் மாதத்தின் 20 ஆம் நாளன்று அல்லது அதற்கு முன்பாக.

  • சமர்ப்பிக்க வேண்டிய இடம் :
    • உரிய கிளை​.​​​​​​​​​​ ​​
    • ​​​​​​
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது: 28-04-2016