සිංහලதமிழ்English
உள்நாட்டு இறைவரித் திணைக்களமானது வரி செலுத்துனர்கள் மற்றும் பொது மக்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் சேவைகளினை, சேர் சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்தை, கொழும்பு 02 எனும் முகவரியில் அமைந்துள்ள தலைமையலுவகத்தின் நிலத் தளம் மற்றும் 1 ஆவது தளத்தில் அமைந்துள்ள வாடிக்கையாளர் சேவை மற்றும் ஊக்குவிப்பு அலுகுகளினூடாக வழங்கி வருகின்றது.
வரி செலுத்துனர்கள் மற்றும் பொதுமக்கள் தமக்குத் தேவையான சேவைகளினை இத்தகைய அலகுகளினூடாக பெற்றுக் கொள்ளலாம். இங்கே இரண்டு பிரிவுகள் ஆறு அலகுகளாக பிரிக்கப்பட்டுள்ளதுடன் ஒரே கூரையின் கீழ் பல்வேறு சேவைகளும் வழங்கப்படுகின்றன.
வரி செலுத்துனர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் வரி சார்ந்த விடயங்கள் தொடர்பில் மேலதிக தகவல்கள் மற்றும் விளக்கங்களினைப் பெற்றுக் கொள்வதற்கு உள்நாட்டு இயைவரித் திணைக்களத்தின் அழைப்பு நிலையத்துடன் தொடர்பு கொள்ளலாம்.
திங்கள் முதல் வெள்ளி வரை : மு.ப.9:00 இலிருந்து பி.ப. 7:00 வரை சனிக்கிழமை : மு.ப.9:00 இலிருந்து பி.ப. 1:00 வரை
ஆரம்ப பதிவு செய்தல் அலகானது வாடிக்கையாளர்களை வரி செலுத்துனர்களாக பதிவு செய்வதற்கான அலகாகும்
வரி பதிவு செய்தல் பிரிவானது வரி வகைகளுக்கான வரி செலுத்துனர்களினைப் பதிவு செய்யும் அலகாகும்.
வாடிக்கையாளர் தகவல் இற்றைப்படுத்தல் அலகானது வரி செலுத்துனர்கள் தொடர்பான விபரங்களை இற்றைப்படுத்துகின்றது அல்லது அவற்றில் மாற்றங்களை மேற்கொள்கின்றது.
வியாபார ஆலோசனைப் அலகானது வாடிக்கையாளர்களின் வரி தொடர்பான விடயங்களுக்குத் தேவையான ஆலோசனை சேவையினை வழங்கி வருகின்றது.
வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் ஊக்குவிப்பு அலகானது வாடிக்கையாளர்களுக்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் வழங்கப்பட வேண்டிய அனைத்து இசைவாணைச் சான்றிதழ்களினையும் வழங்குவதுடன் வாடிக்கையாளர்களுக்கு திணைக்கள வெளியீடுகளினையும் விற்பனை செய்கின்றது.
மத்திய ஆவண முகாமைத்துவ அலகானது உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு வரி செலுத்துனர்களினால் அனுப்பி வைக்கப்படும் அனைத்து ஆவணங்களினையும் சேகரிக்கின்றது.