பந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு
விதிப்பனவுக்குரித்துடைய ஆட்கள்
- பந்தய பணம் கட்டும் வியாபாரம் அல்லது
- சூதாட்ட வியாபாரம்
ரீதியாகவோ அல்லது சட்ட ரீதியற்ற முறையிலோ இலங்கையிலுள்ள பந்தய பணம் கட்டும் வியாபாரம் அல்லது சூதாட்ட வியாபாரத்தினைக் கொண்டு நடாத்துகின்ற எவரேனும் ஆள் சட்டத்தின் அட்டவணையில் விதித்துரைக்கப்பட்டவாறான உரிய வீதங்களில் வரி விதிப்புக்குள்ளாவார். அத்தகைய வியாபாரமானது குறித்த ஆளினால் வெவ்வேறு இடங்களில் நடாத்தப்படுமாயின், அத்தகைய வெவ்வேறு இடங்களுக்கும் தனித்தனியாக விதிப்பனவினை செலுத்துமாறு அவர் கோரப்படுவார். (வரி நோக்கங்களுக்காக அத்தகைய ஒவ்வொரு இடமும் தனித்தனியான வியாபாரமாக கருதப்படுகின்றது)
“குதிரைப் பந்தய பணயக்காரர்” என்பது
-
- நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ;
- பணமாகவோ அல்லது கடனாகவோ; அல்லது
- இணையத்தினூடாகவோ,
இலங்கையில் அல்லது இலங்கைக்கு வெளியில் நடைபெறும் அல்லது நடைபெறுவதற்கு முன்மொழியப்பட்ட ஏதேனும் பந்தய நிகழ்வில் ஓடுகின்ற அல்லது ஓடுவதற்கு முன்மொழியப்பட்ட குதிரை பந்தயங்களின் மீது பந்தயத்தை பெற்றுக்கொள்ளும் அல்லது கலந்துபேசி முடிவு செய்யும் நபர் எனப் பொருள்படும்.
“சூதாட்டம்” என்பது, எந்தவொரு விளையாட்டையும் பங்குக்காக விளையாடுவதைக் குறிப்பதுடன் அது தனிநபர்களுக்கு அணுகத்தக்க எந்தவொரு இடத்திலும் பேக்கரட், புன்டோ பாங்கோ, பிக் சிக்ஸ், பிளாக் ஜாக், பவுல்கெமின் டிஃபெர், சுச்-எ-லக், கிரவுன் மற்றும் அங்கர், ஃபரோ, ஃபரோ பேங்க், ஹசார்ட், போக்கர் டைஸ், பாண்டூன், அமெரிக்கன் பர் பிரெஞ்ச் ரவுலட், டிரெண்ட் குவரண்டைன், விங்ட்-எட்-உம், ருட்ஜினோர அல்லது ஃபார்ச்சூன் என்பவற்றை விளையாடுவதையும் உள்ளடக்கும்.