முகப்பு ::
கேள்வியும் பதில்களும்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
பொது
1..வரி செலுத்துனர் ஒருவர் அடையாள இலக்கத்தினை எவ்வாறு பெற்றுக்கொள்ள முடி ம் (TIN)?
பதிவிறக்கங்கள்
தகைமை வருமான வரி, பெறுமதி சேர் வரி (பெசேவ), நாட்டினைக் கட்டியெழுப்பும் வரி (நாகவ) மற்றும் பொருளாதார சேவைக் கட்டணம் (பொசேக) போன்ற வரிகளை செலுத்துவதற்கு பொறுப்பாகக்கூடியவர்கள். உழைக்கும் பொழுது செலுத்தும் வரித் திட்டம் அல்லது / மற்றும் முத்திரைத் தீர்வை அல்லது இறக்குமதியாளர் / ஏற்றுமதியாளர் மற்றும் கேழ்வு அனுப்புனர்கள் மற்றும் வெளியகற்றும் முகவர்கள்
விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்கள் வரி செலுத்துனர் சேவைப் பிரிவு (வசேபி): 1 ஆவது மாடி, தென் பிரிவு, உள்நாட்டு இறைவரித் திணைக்களம், சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்தை, கொழும்பு 02. அல்லது பிராந்திய அலுவலகங்கள்.
விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய இடங்கள் வரி செலுத்துனர் சேவைப் பிரிவு (வசேபி), 1 ஆவது மாடி, தென் பிரிவு, உள்நாட்டு இறைவரித் திணைக்களம், சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்தை, கொழும்பு 02. வரி செலுத்துனர் சேவைப் பிரிவானது பொது விடுமுறை நாட்கள் தவிர்ந்த திங்கள் முதல் வெள்ளி வரையிலான வார நாட்களில் மு.ப.8.30 இலிருந்து பி.ப.4.15 வரை திறந்திருக்கும்.
விண்ணப்ப படிவங்களை / சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக ஏதேனும் கட்டணங்களை செலுத்த வேண்டுமா? இல்லை
சேவை வழங்கலுக்காக தேவைப்படும் நேரம் (சாதாரண சேவை மற்றும் முன்னுரிமை சேவை) தேவையான ஆவணங்களுடன் முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படின், சான்றிதழானது 40 நிமிடங்களினுள் வழங்கப்படும். பி.ப. 3.00 மணிக்கு முன்னதாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கான சான்றிதழ் குறித்த அதே தினத்திலேயே வழங்கப்படும். அதற்குப் பின்னதாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கான சான்றிதழ்கள் அடுத்த
தினத்திலேயே வழங்கப்படும்.
தேவையான துணை ஆவணங்கள்: -
தனிநபர் வியாபாரங்கள் / பங்குடமைகளைப் பொறுத்த வரையில்
- வியாபாரப் பதிவுச் சான்றிதழ்,
- உரிமையாளர் / பங்காளர்களின் தேசிய அடையாள அட்டைகளின் (NIC) போட்டோ பிரதிகள்.
இறக்குமதிக்காக : வர்த்தகசார் கூறுவிலை மற்றும் கப்பலில் ஏற்றிச் செல்லப்படும் சரக்கு விபரப்பட்டியல் / விமானத்தில் எடுத்துச் செல்லப்படும் சரக்கு விபரப்பட்டியல்
ஏற்றமதிக்காக:
- ஏற்றுமதி அபிவிருத்திச் சபை(EDB) பதிவுச் சான்றிதழ்
- ஏனைய ஏற்றுமதியுடன் தொடர்புடைய ஆவணங்கள்,
- தேயிலைச் சபை, தெங்கு பயிரிடல் சபை, இரத்தினக்கற்கள் மற்றும் ஆபணரங்கள் அதிகாரசபை ஆகயவற்றின் பதிவுச் சான்றிதழ் (ஏதேனும் இருப்பின்)
-
பொறுப்பு வரையறுக்கப்பட்ட கம்பனியாயின்:
- 1982 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டவை (2007/05/03 இற்கு முன்னதாக பதிவு செய்யப்பட்டவை)
- தற்போதிருக்கின்ற கம்பனியினைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பம் (படிவம் 40)
(கம்பனிகள் பதிவாளரினால் வழங்கப்பட்ட சான்றுப்படுத்திய பிரதி) - கூட்டிணைப்புச் சான்றிதழ் (மீள் பதிவு) (படிவம் 41)
- பணிப்பாளர்கள் மற்றும் பிரசித்த நொத்தாரிசுவின் கையொப்பங்களுடன் அமைப்பு அகவிதி / அமைப்பு புறவிதிகள்.
- பணிப்பாளர்களின் தேசிய அடையாள அட்டையின் பிரதி
- 2007 ஆம்ஆண்டின் 7 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டவை. ( 2007/05/03 ஆம் திகதியின் பின்னர் பதிவு செய்யப்பட்டவை)
- கூட்டிணைப்புச் சான்றிதழ் (படிவம் 2அ)
- கம்பனியொன்றின் பதிவுக்கான விண்ணப்பம் (படிவம்1) (கம்பனிகள் பதிவாளரினால் வழங்கப்பட்ட சான்றுப்படுத்திய பிரதி)
- பணிப்பாளர்களின் கையொப்பங்களுடனான அமைப்பு அகவிதி
- பணிப்பாளர்களின் தேசிய அடையாள அட்டைகளின் பிரதிகள்
- இலங்கை முதலிட்டுச சபையின் சான்றிதழ் மற்றும் இலங்கை முதலீட்டுச் சபை உடன்படிக்கை (இலங்கை முதலீட்டுச் சபை கம்பனிகளுக்காக)
-
இலங்கைக்கு வெளியே கூட்டிணைக்கப்ப்பட்ட கம்பனிகளாயின்:
- 1982 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டவை (2007/05/03 இற்கு முன்னதாக பதிவு செய்யப்பட்டவை)
- முகவரி (படிவம் 56)
- பணிப்பாளர்கள் (படிவம் 57)
- அதிகாரமளிக்கப்பட்ட ஆள் (படிவம் 58)
- கூட்டிணைப்புச் சான்றிதழ் (படிவம் 75)
- பங்குதாரர்களின் கையொப்பங்களுடனான அமைப்பு அகவிதி
- பணிப்பாளர்களின் வலிதான கடவுச்சீட்டின் போட்டோ பிரதிகள்
- 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டவை ( 2007/05/03 இன் பின்னர் பதிவு செய்யப்பட்டவை)
- முகவரி (படிவம் 44)
- பணிப்பாளர்கள் (படிவம் 45)
- அதிகாரமளிக்கப்பட்ட ஆள் (படிவம் 46)
- கூட்டிணைப்புச் சான்றிதழ் (படிவம் 42)
- பங்குதாரர்களின் கையொப்பங்களுடனான அமைப்பு புறவிதிகள்
- பணிப்பாளர்களின் வலிதான கடவுச்சீட்டின் பிரதிகள்
(அனைத்து ஆவணங்களும் மூலப்பிரதிகளாக இருத்தல் வேண்டும் அல்லது கம்பனிகள் பதிவாளர் நாயகத்தினால் வழங்கப்பட்ட சான்றுப்படுத்திய பிரதிகளாக இருத்தல் வேண்டும்.)
-
வேறு ஏதேனும் கருத்திட்டங்களாயின்:
- கருத்திட்டப் பணிப்பாளரின் கோரிக்கைக் கடிதம்
- கருத்திட்டப் உடன்படிக்கை
- பணிப்பாளர்களின் தேசிய அடையாள அட்டைகள் அல்லது கடவுச்சீட்டுக்களின் போட்டோ பிரதிகள்
- உரிய அரசாங்க அதிகாரியினால் வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழின் பிரதி
குறிப்பு: - மேற்குறித்த ஆவணங்களின் மூலப்பிரதிகளுடன் போட்டோ பிரதிகளையும் சமர்ப்பிக்குமாறு கேட்கப்படுகின்றனர். மூலப் பிரதிகள் திருப்பி அனுப்பி வைக்கப்படும்.
- வரி செலுத்துனர் அடையாள இலக்கச் சான்றிதழாயின்:
- தனிநபர்களுக்கானவைக்கு, உரிமையாளர் நேரடியாக சமூகமளித்து விண்ணப்பத்தில் கையொப்பமிடுதல் வேண்டும்.
- பங்குடமை வியாபாரங்களுக்கு, பங்காளர் நேரடியாக சமூகமளித்து விண்ணப்பத்தில் கையொப்பமிடுதல் வேண்டும்
- கம்பனிகளுக்கு, பணிப்பாளர் நேரடியாக சமூகமளித்து விண்ணப்பத்தில் கையொப்பமிடுதல் வேண்டும்.
- சான்றிதழினைப் பெற்றுக் கொள்வதற்காக அதிகாரமளிக்கப்பட்ட ஆளொருவர் வருவாரெனில், அதற்குரிய ஆளிடமிருந்தான அதிகாரமளிக்கப்பட்ட கடிதத்துடன் குறித்த நபரின் அடையாள அட்டையின் போட்டோ பிரதியினையும் சமர்ப்பித்தல் வேண்டும்.
- வரி செலுத்துனர் அடையாள இலக்க சான்றிதழானது ஒன்று மட்டுமே வழங்கப்படும்.
2.ஏற்கனவே வழங்கப்பட்ட வரி செலுத்துனர் அடையாள இலக்கச் சான்றிதழில் பெயர் அல்லது முகவரியினை மாற்றம் செய்தல்
தகைமை தமது வியாபார நிலையத்தின் பெயர் அல்லது முகவரியினை மாற்றம் செய்ய விரும்பும் ஏற்கனவே வரி செலுத்துனர் அடையாள இலக்கச் சான்றிதழினைப் பெற்றுள்ளவர்கள்.
விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்கள் வரி செலுத்துனர் சேவைப் பிரிவு (வசேபி): 1 ஆவது மாடி, தென் பிரிவு, உள்நாட்டு இறைவரித் திணைக்களம், சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்தை, கொழும்பு 02. அல்லது பிராந்திய அலுவலகங்கள்.
பதிவிறக்கங்கள்
வரி செலுத்துனர் அடையாள இலக்கச் சான்றிதழில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்த கோரிக்கையினை சமர்ப்பிக்க வேண்டிய இடங்கள். வரி செலுத்துனர் சேவைப் பிரிவு (வசேபி), 1 ஆவது மாடி, தென் பிரிவு, உள்நாட்டு இறைவரித் திணைக்களம், சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்தை, கொழும்பு 02. வரி செலுத்துனர் சேவைப் பிரிவானது பொது விடுமுறை நாட்கள் தவிர்ந்த திங்கள் முதல் வெள்ளி வரையிலான வார நாட்களில் மு.ப.8.30 இலிருந்து பி.ப.4.15 வரை திறந்திருக்கும்.
விண்ணப்ப படிவங்களை / சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக ஏதேனும் கட்டணங்களை செலுத்த வேண்டுமா? இல்லை
தேவையான துணை ஆவணங்கள்: - வரி செலுத்துனர் அடையாள இலக்கச் சான்றிதழின் மூலப்பிரதி,
- கம்பனியின் முகவரியினை மாற்றுதல் / திருத்துதல் தொடர்பில் கம்பனிக்ள பதிவாளரினால் சான்றுப்படுத்தப்பட்ட படிவம் 13,
- கம்பனியின் பெயரினை மாற்றுவது தொடர்பில், கம்பனிகள் பதிவாளரினால் வழங்கப்பட்ட படிவம் (போட்டோ பிரதிகளுடன்),
- தனிநபர் அல்லது பங்குடமை வியாபாரமெனில், திருத்தியமைக்கப்பட்ட வியாபாரப் பதிவுச் சான்றிதழ் (போட்டோ பிரதிகளுடன்),
- வியாபார உரிமையாளரினால் அல்லது கம்பனியின் பொறுப்பு வாய்ந்த பணிப்பாளரினால் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்களுக்கு, எழுத்து மூலமான கோரிக்கை,
- கம்பனிகள் பதிவாளரினால் சான்றுப்படுத்திய படிவம் 1, படிவம் 20, படிவம் 40 இன் போட்டோ பிரதி
குறிப்பு: - வரி செலுத்துனர் அடையாள இலக்கச் சான்றிதழானது விண்ணப்பதாரி அல்லது அதிகாரமளிக்கப்பட்ட ஆளுக்கு மட்டுமே வழங்கப்படும்,
- வரி செலுத்துனர் அடையாள இலக்கச் சான்றிதழானது தொலைந்து போயிருந்தால் அல்லது தவறாக எங்கேயும் வைத்திருந்தால் சத்தியக் கடதாசியொன்றினைச் சமர்ப்பிப்பதன் மூலம் நகல் பிரதியொன்று வழங்கப்படும்.
மேற்குறித்த ஆவணங்களின் மூலப்பிரதிகளுடன் போட்டோ பிரதிகளையும் சமர்ப்பிக்குமாறு கேட்கப்படுகின்றனர். மூலப் பிரதிகள் திருப்பி அனுப்பி வைக்கப்படும். 3.தற்காலிக பெறுமதி சேர் வரிச் சான்றிதழொன்றினைப் பெற்றுக் கொள்ளுதல்
பதிவிறக்கம்
தகைமை
- காலாண்டொன்றுக்கு ரூபா.3,750,000 இனை விஞ்சாததும் ஆண்டொன்றிற்கு ரூபா.15,000,000 இனை விஞ்சாததுமான பெறுமதியினைக் கொண்ட பொருட்களை இறக்குமதி செய்வோர்.
- பெறுமதி சேர் வரியிலிருந்து விலக்களிப்புப் பெற்ற பொருட்களை இறக்குமதி செய்வோர்.
- வியாபார நோக்கங்களுக்குல்லாமல் பொருட்களை இறக்குமதி செய்வோர்.
- ரூபா.3,750,000 இற்குக் குறைவான தரகினைப் பெறுகின்ற கேழ்வு அனுப்புனர்கள்/ வெளியகற்றும் முகவர்கள் / துரித தபால் சேவை வழங்குனர்கள் விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்கள்
வரி செலுத்துனர் சேவைப் பிரிவு (வசேபி): 1 ஆவது மாடி, தென் பிரிவு, உள்நாட்டு இறைவரித் திணைக்களம், சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்தை, கொழும்பு 02. அல்லது பிராந்திய அலுவலகங்களிலிருந்து.
விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய இடங்கள்
வரி செலுத்துனர் சேவைப் பிரிவு (வசேபி), 1 ஆவது மாடி, தென் பிரிவு, உள்நாட்டு இறைவரித் திணைக்களம், சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்தை, கொழும்பு 02. வரி செலுத்துனர் சேவைப் பிரிவானது பொது விடுமுறை நாட்கள் தவிர்ந்த திங்கள் முதல் வெள்ளி வரையிலான வார நாட்களில் மு.ப.8.30 இலிருந்து பி.ப.4.15 வரை திறந்திருக்கும்.
விண்ணப்ப படிவங்களை / சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக ஏதேனும் கட்டணங்களை செலுத்த வேண்டுமா?
இல்லை
சேவை வழங்கலுக்காக தேவைப்படும் நேரம் (சாதாரண சேவை மற்றும் முன்னுரிமை சேவை)
தேவையான ஆவணங்களுடன் முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படின், சான்றிதழானது 40 நிமிடங்களினுள் வழங்கப்படும். பி.ப. 3.00 மணிக்கு முன்பாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு குறித்த அதே தினத்திலேயே சான்றிதழ் வழங்கப்படும். அதற்குப் பின்பாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு அடுத்த நாளிலேயே வழங்கப்படும்.
தேவையான துணை ஆவணங்கள்:
- வரி செலுத்துனர் அடையாள இலக்க மூலச் சான்றிதழ்
- இறக்குமதி நோக்கங்கள் தொடர்பில், வர்த்தகசார் கூறுவிலைக் கடிதம் மற்றும் கப்பலில் ஏற்றிய சரக்கு விபரப் பட்டியல்,
- ஏற்றுமதி நோக்கங்கள் தொடர்பில், ஏற்றுமதி அபிவிருத்திச சபை அல்லது ஏனைய ஏற்றுமதிகளுடன் தொடர்புடைய ஆவணங்கள் (உதாரணம். தேயிலைச் சபை, தெங்கு பயிரிடல் சபை, இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள் அதிகாரசபை),
- வருமானவரி செலுத்துனர்கள் தொடர்பில், இறுதி கொடுப்பனவின் பற்றுச் சீட்டு,
- வியாபாரங்கள் தொடர்பில், வியாபார பதிவுச் சான்றிதழ்,
- விண்ணப்பதாரியின் தேசிய அடையாள அட்டை
- வரையறுக்கப்பட்ட கம்பனியொன்றினைப் பொறுத்த வரையில் கூட்டிணைப்புச் சான்றிதழ் (படிவம் 2அ/41), கம்பனிப் பதிவுக்கான விண்ணப்பம் (படிவம் 01/40)
குறிப்பு: - மேற்குறித்த அனைத்து ஆவணங்களும் போட்டோ பிரதிகளுடன் சமர்ப்பித்தல் வேண்டும்.
- பெசேவ விண்ணப்பமானது பணிப்பாளர்/பங்காளர் அல்லது இறக்குமதியாளரினால் கையொப்பமிடப்படுதல் வேண்டும்.
- சான்றிதழினைப் பெற்றுக் கொள்வதற்காக அதிகாரமளிக்கப்பட்ட ஆளொருவர் வருவாரெனில், அதற்குரிய ஆளிடமிருந்தான அதிகாரமளிக்கப்பட்ட கடிதத்துடன் குறித்த நபரின் அடையாள அட்டையின் போட்டோ பிரதியினையும் சமர்ப்பித்தல் வேண்டும்.
4.வருமான வரிக் கோவையினை வைத்திருக்காதவர்கள் வருமானவரி விடுவிப்புச் சான்றிதழினைப் பெற்றுக் கொள்ளுதல்
தகைமை
மொத்த அனுப்புதல்கள் ரூபா. 1,000,000 இனை விஞ்சுமாயின். (நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள்)
விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்கள்
வரி செலுத்துனர் சேவைப் பிரிவு (வசேபி): 1 ஆவது மாடி, தென் பிரிவு, உள்நாட்டு இறைவரித் திணைக்களம், சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்தை, கொழும்பு 02. அல்லது பிராந்திய அலுவலகங்களிலிருந்து.
விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய இடங்கள்
வரி செலுத்துனர் சேவைப் பிரிவு (வசேபி), 1 ஆவது மாடி, தென் பிரிவு, உள்நாட்டு இறைவரித் திணைக்களம், சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்தை, கொழும்பு 02. வரி செலுத்துனர் சேவைப் பிரிவானது பொது விடுமுறை நாட்கள் தவிர்ந்த திங்கள் முதல் வெள்ளி வரையிலான வார நாட்களில் மு.ப.8.30 இலிருந்து பி.ப.4.15 வரை திறந்திருக்கும்.
விண்ணப்ப படிவங்களை / சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக ஏதேனும் கட்டணங்களை செலுத்த வேண்டுமா?
இல்லை
தேவையான துணை ஆவணங்கள்:
- தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டின் போட்டோ பிரதி
- வர்த்தகம், வியாபாரம் அல்லது உயர் தொழிலினை ஆரம்பித்த மற்றும் இடைநிறுத்திய திகதிக்கான ஆவண ரீதியிலான சான்று, ஏதேனுமிருப்பின்.
-
தேவைப்படும் விடுவிப்பு தொகை தொடர்பில் ஆவண ரீதியிலான சான்றுப்படுத்தல், இத்தகைய ஆவணங்கள் பின்வருவனவற்றினையும் உள்ளடக்கலாம்.
-
பின்வருவனவற்றின் போட்டோ பிரதிகள்:
- நிலையான வைப்புச் சான்றிதழ்கள்
- வங்கி சேமிப்பு வைப்புப் புத்தகங்கள்
- வங்கி கூற்றுக்கள்
- உரிய அதிகாரிகளிடமிருந்தான ஊசேநி மற்றும் ஊநநி ஆவணங்கள்
- கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடைய அசையும் மற்றும் அசையா ஆதனங்களின் விற்பனையுடன் தொடர்புடைய கொடுக்கல் வாங்கல் ஆவணங்கள்
- அசையா ஆதனங்களைப் பொறுத்த வரையில் , விற்பனை உடன்படிக்கை. மோட்டார் வாகன்ஙகளுக்கான எம்ரி - 6, பதிவுச் சான்றிதழின் பிரதி
- கொடையாளிகளிடமிருந்தான பரிசுக் கடிதங்கள்
- நன்கொடையாளிகளிடமிருந்து அவர்களின் வருமானவரிக் கோவை இலக்கங்கள் உள்ளடங்கலான கடன்களின் கடிதங்கள்
- ஏனைய மூலங்கள்
|
|
|
|
|
|
|
|