வரி அடிப்படையும் மூலதன ஈட்டுகை வரிக் கணிப்பீடும்
மூலதன ஈட்டுகை வரி என்பது, மூலதனச் சொத்தொன்றின் விற்பனை, பரிமாற்றம், மாற்றீடு, விநியோகம், இரத்துச் செய்தல், கழிப்பனவு செய்தல், அழிவடைதல், நட்டம், காலாவதியாகுதல், சுவீகரித்தல் அல்லது கையளித்தல் தொடர்பில் தேறிய இலாபங்கள் மீதான வரியாகும். மூலதன ஈட்டுகை வரிக்கு ஏற்புடையதாக வேண்டிய இலாபங்கள் மட்டும் முதலீட்டுச் சொத்தொன்றின் தேறுகை மீதான இலாபமாக இருக்கும்.
மூலதன இலாபமானது,
தீர்மானிக்கப்பட்ட தொகைக்கும் தேறுதலின் போதான முதலீட்டுச் சொத்தின் கொள்விலைக்கும் இடையிலான வேறுபாடாக கணிப்பீடு செய்யப்படுகின்றது.
“முதலீட்டுச் சொத்து”
(பிரிவு.195)
- முதலீடொன்றின் பாகமாக வைக்கப்பட்டுள்ள மூலதனச் சொத்து எனப் பொருள்படும், ஆனால் –
- தனியாள் ஒருவரின் பிரதான வதிவடத்தை உள்ளடக்காது; ஆயின் கையுதிர்ப்புக்கு முன்னர் தொடர்ச்சியாக மூன்றாண்டுகளுக்கு தனியாளுக்கு சொந்தமானதாகவும், அம்மூன்று ஆண்டுகளில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் அதில் வசித்திருத்தல் வேண்டும். (நாளாந்த அடிப்படையில் கணிப்பீடு செய்யப்பட்டது);
“மூலதனச் சொத்து” (பிரிவு.195)
- பின்வரும் ஒவ்வொரு சொத்தும் எனப் பொருளாகும்: -
- காணி அல்லது கட்டிடங்கள்;
- கம்பனி, பங்குடமை அல்லது நம்பிக்கைப் பொறுப்பொன்றில் உறுப்பாண்மை அக்கறையொன்று;
- பிணையம் அல்லது வேறு ஏதேனும் நிதிசார் சொத்து;
- மேற்போந்த பந்திகளில் குறித்துரைக்கப்பட்ட சொத்தொன்றில் விருப்பத் தேர்வு, உரிமை அல்லது வேறு அக்கறை; ஆனால்
- வர்த்தகக் கையிருப்பு அல்லது பெறுமானத்திற்குட்படற்பாலதான சொத்தொன்றை உள்ளடக்காது;
மூலதன ஈட்டுகை வரியிலிருந்து விலக்களிப்புப் பெறும் முதலீட்டுச் சொத்துக்கள்;
- பிரதான வதிவிடம் (மேலே குறிப்பிடப்பட்டவாறு)
- கொழும்பு பங்குச் சந்தையில் நிரலிடப்பட்ட விலைகூறப்பட்ட பங்குகள்
மூலதன ஈட்ட வரியிலிருந்து விலக்களிக்கப்படும் தொகை;
முதலீட்டுச் சொத்தொன்றின் தேறுகையிலிருந்தான வதிவுள்ள தனிநபரொருவரின் இலாபம் ரூபா. 50,000/- இனை விஞ்சாதவிடத்து மற்றும் வரி மதிப்பாண்டொன்றில் உள்ள மொத்த இலாபங்கள் ரூபா.600,000/- இனை விஞ்சாது இருக்குமிடத்து.
முதலீட்டுச் சொத்தின் கொள்விலை
2017.09.30 ஆம் திகதி உள்ளபடியாக தனியாளொருவரினால் வைத்திருக்கப்படும் முதலீட்டுச் சொத்தின் கொள்விலையானது அதே நேரத்தில் குறித்த சொத்திற்கு காணப்படும் சந்தைப் பெறுமதிக்குச் சமமானதாகும்.
மூலதன ஈட்ட வரி வீதம் - 10%
மூலதன நட்டம்
முதலீட்டுச் சொத்தின் தேறுகையிலிருந்தான நட்டமானது முதலீட்டுச் சொத்தின் தேறுகையிலிருநதான ஏதேனும் இலாபத்திற்கெதிராக கழிப்பனவு செய்யப்பட மாட்டாது.
மூலதன ஈட்டுகை வரி விபரத்திரட்டுக்களினைச் சமர்ப்பித்தலும் வரிக் கொடுப்பனவினை மேற்கொள்ளுதலும்
ஒவ்வொரு பொறுப்புடைய ஆளும் மூலதன ஈட்டுகை வரி விபரத்திரட்டினைச் சமர்ப்பித்தல் வேண்டும் என்பதுடன் முதலீட்டுச் சொத்து தேறியதன் பின்னர் கொடுப்பனவினை மேற்கொள்ளுதலும் வேண்டும்.
-
வரிக் கொடுப்பனவினை மேற்கொள்ள வேண்டிய திகதி :
- முதலீட்டு சொத்தின் தேறிய திகதியின் பின்னரான ஒரு மாத காலத்திற்குப் பிந்தாமல்.
-
விபரத்திரட்டுக்களினைச் சமர்ப்பிக்க வேண்டிய திகதி :
- முதலீட்டு சொத்தின் தேறிய திகதியின் பின்னரான ஒரு மாத காலத்திற்குப் பிந்தாமல்.
-
சமர்ப்பிக்க வேண்டிய இடம் :
- அண்மையிலுள்ள உள்நாட்டு இறைவரி உரிய நகர / பிராந்திய அலுவலகம்.
- உள்நாட்டு இறைவரி தலைமை அலுவலக கட்டிடத்தின் 7 ஆவது மாடியில் (வடக்குப் பிரிவு) அமைந்துள்ள மத்திய ஆவணப்படுத்தல் முகாமைத்துவ அலகு (CDMU)