வருமான வரி
வருமான வரியானது, 2007 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, 2008 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, 2009 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க , 2011 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க, 2013 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க மற்றும் 2014 ஆம் ஆண்டின் 08 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்ட திருத்தங்களுக்கு அமைவாக, 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் அடிப்படையில் அறவீடு செய்யப்படுகின்றது.
உள்நாட்டு இறைவரிச் சட்டமானது 2006 ஏப்ரல் 1 ஆம் திகதியன்று அல்லது அதன் பின்னர் ஆரம்பமாகும் ஒவ்வொரு வரி மதிப்பீட்டாண்டுக்கும் அத்தகைய ஆளுக்கு எழுகின்ற அல்லது எழுந்த ஒவ்வொரு ஆளின் அல்லது பங்குடமையின் இலாபங்கள் மற்றும் வருமானத்தின் மீது வருமான வரியினை அறவிடுவதற்கு, விதிப்பதற்கு மற்றும் சேகரிப்பதற்கான சட்ட அதிகாரத்தினை வழங்குகின்றது.
இலாபம் மற்றும் வருமான மூலம்:
- வர்த்தகம், வியாபாரம், உயர் தொழில் அல்லது வாழ்க்கைத் தொழில் என்பவற்றில் இருந்து பெறப்படும் இலாபங்கள்
- ஊழியத்தில் இருந்து பெறப்படும் இலாபங்கள்
- தேறிய ஆண்டுப் பெறுமதி
- பங்கிலாபங்கள், வட்டி அல்லது தள்ளுபடிகள்
- விதிப்பனவுகள் அல்லது ஆண்டுத் தொகைகள்
- வாடகைகள், அரசுரிமைப் பணங்கள் அல்லது கட்டுப்பணங்கள்
- லொத்தர், பந்தயம் அல்லது சூதாட்டம் என்பவற்றில் இருந்தான வெற்றிகள்
- அரச சார்பற்ற நிறுவனமெரன்றின் விடயத்தில் மானியக்கொடைகள், நன்கொடைகள் அல்லது உதவுதொகைகள் என்ற வகையில் அல்லது வேறேதும் வகையில் பெறுப்படும் ஏதேனும் பணத்தொகை
- எத்தகையதுமான வேறேதும் மூலத்தில் இருந்து பெறப்படுபவையும் அமைய அடிப்படையிலானவையும் மீண்டு வராத்தன்மையினவுமான இலாபங்களை உள்ளடக்காத வருமானம்
இலங்கையில் வதிவினைக் கொண்டிருக்க வேண்டியவரென கருதப்படக் கூடிய ஆளொருவர் தொடர்பில் இலங்கையிலிருந்து மற்றும் இலங்கைக்கு வெளியிலிருந்து அவரினால் பெற்றுக் கொள்ளப்படும் வருமானம் தொடர்பில் வருமானவரி அறவிடத்தக்கதாகும். வருமான வரிக்கான அவரின்பொறுப்பானது அவரின் உலகளாவிய வருமானத்திற்கும் விரிவுபடுத்தப்படுகின்றது. இலங்கையில் வதிவினைக் கொண்டிராதவர் எனக் கருதப்படும் ஆளொருவர் தொடர்பில் அவரினால் இலங்கையிலிருந்து பெறப்படும் அல்லது எழுகின்ற இலாபங்கள் மற்றும் வருமானம் தொடர்பில் மாத்திரம் வருமான வரி அறவிடத்தக்கதாகும்.
வதிவுள்ளோர் அல்லது வதிவற்ற இலங்கைப் பிரஜைக்கான வரி விடுதொகை – ரூ.500,000