Skip Ribbon Commands
Skip to main content
Simplified Value Added Tax (SVAT) Scheme
முகப்பு :: வரி வகைகள் :: இலகுபடுத்தப்பட்ட​ பெறுமதி சேர் வரி முறைமை (SVAT)
 

இலகுபடுத்த​ப்பட்ட பெறுமதி சேர் வரி முறைமை (SVAT)​

2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெசேவ சட்டத்தின் பிரிவு 2(2) இன் நியதிகளின்படி, 2011 ஏப்பிரல் 1ம் திகதியிலிருந்து பயனுறுதியாகும் வகையில் இலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி முறைமையானது அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் இலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி முறைமைக்கான வழிகாட்டி விநியோகிக்கப்பட்டுள்ளது.

  1. வர்த்தமானி அறிவித்தலின்படி, இலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி திட்டத்தின் கீழ் பதிவு செய்தலுக்காக விண்ணப்பத்தினைப் சமர்ப்பிப்பதன் மூலம் இபெசேவ திட்டத்தின் கிழ் பதிவு இலக்கத்தினைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது. பின்வரும் பதிவு செய்யப்பட்டு இனங்காணப்பட்ட ஆட்கள் (RIP) மற்றும் அத்தகைய பதிவு செய்யப்பட்டு இனங்காணப்பட்ட ஆட்களுக்கான ஏதேனும் பொருட்கள் சேவைகளின் வழங்குனர்கள் இபெசேவ திட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்கு உரித்துடையவர்களாவர்.
    1. மொத்த வழங்கல்களின் 50% இனை விஞ்சுகின்ற கருத்திட்டத்துடன் தொடர்புடையதாகவிருக்கின்ற அத்தகைய வழங்கல்களுக்குரிய கருத்திட்ட அமுலாக்கல் காலப்பகுதியில், பெசேவ சட்டத்தின் 22 ஆம் பிரிவின் உட்பிரிவு (6) இன் ஏற்பாடுகளின் கீழ் உள்ளீட்டு வரியினைக் கோருவதற்கு உரித்துடையவரும் 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெசேவ சட்டத்தின் (இதனகத்துப் பின்னர் “பெசேவ” சட்டம் எனக் குறிப்பீடு செய்யப்படும்) முதலாவது அட்டவணையின் பகுதி 11 இன் பந்தி (ஊ) இன் உட்பந்தி (ஐ) இல் குறிப்பீடு செய்யப்பட்டவாறு, 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க உபாய விருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் (4) உட்பிரிவின் நியதிகளின்படி தாபிக்கப்பட்ட ஏதேனும் உபாய விருத்தி கருத்திட்டதிற்கு (இதனகத்துப் பின்னர் “பெசேவ” சட்டம் எனக் குறிப்பீடு செய்யப்படும்) பொருட்கள் அல்லது சேவைகளினை வழங்குகின்ற எவரேனும் பதிவு செய்யப்பட்ட ஆள்.
    2. கருத்திட்டத்துடன் தொடர்புடைய அத்தகைய கொள்வனவுகளாக இருக்கின்ற, அத்தகைய கொள்வனவுக்குரிய கருத்திட்ட அமுலாக்கல் காலப்பகுதியில், பெசேவ சட்டத்தின் கீழ் உள்ளீட்டு வரிக் கோரிக்கைக்கு உரித்துடையவராக இருக்கின்றவரும், உபக உள்ளடங்கலாக பெசேவ சட்டத்தின் 22 ஆம் பிரிவின் (7) ஆம் உட்பிரிவின் ஏற்பாடுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட எவரேனும் ஆள்.
    3. பெசேவ சட்டத்தின் முதலாவது அட்டவணையின் பகுதி 11 இன் பந்தி (ஊ) இன் உட்பந்தி (ii) இல் குறித்துரைக்கப்பட்ட ஏதேனும் விதித்துரைத்த கருத்திட்டத்தில் ஈடுபடுகின்ற எவரேனும் பதிவு செய்யப்பட்ட ஆள்.
    4. மொத்த வழங்கல்களில் 50% இனை விஞ்சுகின்ற பூச்சிய வரி வீதமளிக்கப்பட்ட வழங்கல்களினைக் கொண்டுள்ள, பெசேவ சட்டத்தின் 7 ஆம் பிரிவில் விதித்துரைக்கப்பட்ட பூச்சிய வரி வீதமளிக்கப்பட்ட சேவைகளின் எவரேனும் ஏற்றுமதியாளர் அல்லது சேவை வழங்குனர்.
    5. அத்தகைய வழங்கல்களின் பெறுமதி, மொத்த வழங்கல்களின் ஐம்பது சதவீதத்தினை விஞ்சுகின்ற பூச்சிய வரி வீதமளிக்கப்பட்ட வழங்கல்களாக இருக்குமிடத்து, ஏற்றுமதிக்கான பொருட்களின் தயாரிப்புக்காகப் பயன்படுத்தப்படும் ஏற்றுமதியாளர்களுக்கு, இலங்கையில் அவரினால் தயாரிக்கப்பட்ட பொருட்களினை (பெசேவரிக்குப் பொறுப்பாகக்கூடிய) வழங்குகின்ற எவரேனும் தயாரிப்பாளர்.
    6. மொத்த வழங்கல்களில் ஐம்பது சதவீதத்தினை விஞ்சுகின்ற அத்தகைய சேவை வழங்கலாக இருக்குமிடத்து ஏற்றுமதிக்காக தயாரிக்கப்பட்ட ஏதேனும் பொருளின் தரம், தன்மை அல்லது பெறுமதியினை மேம்படுத்துவதற்கு காரணமாக இருக்கின்ற ஏற்றுமதியாளர்களுக்கு பெறுமதி சேர் சேவைகளினை அளிக்கின்ற எவரேனும் சேவை வழங்குனர்.
    7. பொருட்கள் அல்லது சேவைகளின் வழங்குனர்களாக இருக்கின்ற அத்தகைய பதிவு செய்யப்பட்ட ஆளின் மொத்த வழங்கல்களில் ஐம்பது சதவீதத்தினை விஞ்சுகின்ற அத்தகைய வழங்கல்களின் பெறுமதி தொடர்பில் கிடைக்கக்கூடிய தகவல்கள் குறித்து அணையாளர் நாயகம் திருப்தியடைந்திருப்பதுடன், மேலே (i),(ii),(iii),(iv),(v) அல்லது (vi) ஆம் உட்பந்திகளில் குறிப்பீடு செய்யப்பட்ட எவரேனும் பதிவு செய்யப்பட்ட ஆளுக்கான ஏதேனும் பொருட்கள் அல்லது சேவைகளினை வழங்குகின்ற எவரேனும் பதிவு செய்யப்பட்ட ஆள்.

    பெசேவ அறவிடப்படற்பாலதல்லாத அத்தகைய உபாய விருத்திக் கருத்திட்டம் குறித்து கவனத்தில் கொள்ளாது இபெசேவ திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுவதற்கு தேவைப்படுகின்ற, மேலே பந்தி (ii) இல் குறிப்பீடு செய்யப்பட்ட ஏதேனும் உபாய விருத்திக் கருத்திட்டம்.

  2. இபெசேவ பதிவு செய்தலுக்காக ஆரம்ப பதிவு செய்தல் அலகுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய விண்ணப்பத்துடன் பின்வரும் ஆவணங்களினையும் இணைத்தல் வேண்டும்.
    1. தனியுரிமை / பங்குடமை வியாபாரங்கள் எனில்,
      • வியாபாரப் பதிவுச் சான்றிதழ்
      • விண்ணப்பதாரியின் தேசிய அடையாள அட்டையின் போட்டோ பிரதி (தனியுரிமையினைப் பொறுத்த வரையில் உரிமையாளரே விண்ணப்பதாரராகவும், பங்குடமையினைப் பொறுத்த வரையில் முன்னுரிமைப் பங்காளர் விண்ணப்பதாரராகவும் இருத்தல் வேண்டும்), மற்றும்
      • o விடயம் 3 இன் கீழ் குறிப்பிடப்பட்ட ஆவணங்கள், ஏற்புடையதாயின்
    2. கம்பனிகள் எனில்,
      • கூட்டிணைப்புச் சான்றிதழ்
      • விண்ணப்பதாரியின் தேசிய அடையாள அட்டையின் போட்டோ பிரதி (பணிப்பாளர் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட பணிப்பாளர் ஒருவர் விண்ணப்பதாரியாக இருத்தல் வேண்டும். இது தொடர்பிலான அத்தகைய தீர்மானத்தின் பிரதியொன்று சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்)
      • விடயம் 3 இன் கீழ் குறிப்பிடப்பட்ட ஆவணங்கள், ஏற்புடையதாயின்.
    3. பொதுவானவை
      • இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்
        • வரி செலுத்துனர் அடையாள இலக்கச் சான்றிதழ் (TIN)
        • பெசேவ பதிவுச் சான்றிதழ் (VAT)
        • இலங்கை முதலீட்டுச் சபைச் சான்றிதழ், ஏற்புடையதாயின்
        • திணைக்களத்திலிருந்து கடன் பற்றுச்சீட்டுக்களைப் பெறுவதற்கு அதிகாரமளிக்கப்பட்ட இரண்டு ஆட்களின் தேசிய அடையாள அட்டைகளின் போட்டோ பிரதிகள், பதிவு செய்யப்பட்டு இனங்காணப்பட்ட கொள்வனவாளராக தகைமை பெற வேண்டியிருப்பின்.
        • நீங்கள், பெசேவரிச் சட்டத்தின் முதலாம் அட்டவணையின் பகுதி (II) இன் பந்தி (ஊ) இன் உப பந்தி (ii) இல் குறிப்பீடு செய்யப்பட்ட ஏதேனும் விசேட கருத்திட்டத்தில் ஈடுபடுகின்ற ஆளொருவரெனில், அதற்கான அங்கீகாரத்தின் பிரதியொன்று
        • நீங்கள், பெசேவரிச் சட்டத்தின் முதலாம் அட்டவணையின் பகுதி (II) இன் பந்தி (ஊ) இன் உப பந்தி (ii) இல் குறிப்பீடு செய்யப்பட்ட ஏதேனும் விசேட கருத்திட்டத்தில் ஈடுபடுகின்ற ஆளொருவரெனில், 2008 ஆம் ஆண்டின்14 ஆம் இலக்க உபாய விருத்தி சட்டத்தின் கீழ் வழங்கப்படும் வர்த்தமானி அறிவித்தலின் பிரதியொன்றும் மற்றும் இலங்கை முதலீட்டு சபை உடன்படிக்கையின் பிரதியொன்று.
        • நீங்கள், பெசேவரிச் சட்டத்தின் பிரிவு 22(7) இன் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஆள் எனில், தொடர்புடைய ஆவணங்கள்
        • நீங்கள், பெசேவரிச் சட்டத்தின் பிரிவு 7 (ஆ) (iv) இன் கீழான சேவை ஏற்றுமதியாளரொருவரெனில், அதனை நிரூபிப்பதற்கான ஆவணங்கள்​​​​​

  3. இ-பதிவு செய்தலானது இலகுபடுத்தப்பட்ட பெசேவ திட்டத்தின் கீழான பதிவு செய்தலுக்கு ஏற்புடையதல்ல.
  4. விண்ணப்பதாரி பதிவினைப் பெற்றுக் கொள்வதற்காக தாமாகவே சமூகமளிக்குமாறு கோரப்படுகின்றார். எவ்வாறாயினும் கம்பனியைப் பொறுத்த வரையில் விண்ணப்பதாரி அல்லது கம்பனியின் அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதி இபெசேவ பதிவு செய்தல் நோக்கத்திற்காக சமூகமளித்தல் வேண்டும். வெளிநாட்டுக் கம்பனிகளாயின், விண்ணப்பதாரி கணக்காய்வு நிறுவனமாகவோ அல்லது சட்டவாளர் நிறுவனமாகவோ இருக்கலாம்.
  5. பதிவு செய்யப்பட்டு இனங்காணப்பட்ட கொள்வனவாளர் (RIP) ஒருவரின் தகைகமையானது அவரின் வியாபார நிலையத்திற்கு வருகை தந்ததன் பின்னரே ஊர்ஜிதப்படுத்தப்படுமென்பதனை தயவு செய்து கவனத்தில் கொள்க. பதிவு செய்யப்பட்டு இனங்காணப்பட்ட வழங்குனராக (RIS) தகைமை பெறுவதாயின், கணக்குகளின் கணக்காய்வு செய்யப்பட்ட கூற்றுக்களின் பிரதிகள், வங்கிக் கணக்குகளின் பிரதிகள் அல்லது பிரதேச செயலாளரினால் சான்றுப்படுத்தப்பட்ட கிராம அலுவலரிடமிருந்தான கடிதம் என்பனவற்றினை சமர்ப்பிக்குமாறு கோரப்படலாம்.
  6. சான்றிதழினை சேகரிப்பதற்கான அனுமதியினை வழங்கும் அதிகாரபூர்வமான கடிதம். (விண்ணப்பதாரி அல்லாத வேறு எவரேனும் தனிநபருக்கு சான்றிதழானது கையளிக்கப்பட வேண்டியிருப்பின்)
  7. திணைக்களத்திலிருந்து வரவு வவுச்சர்களினைச் (CRV) சேகரிப்பதன் நோக்கம்
    இ-சேவைகளினைப் பயன்படுத்துவதற்குக் கோரிக்கையொன்று விடுக்கப்படுதல் வேண்டும். வரவு வவுச்சர்களுக்கான (CRV) அங்கீகாரம் கிடைக்கப்பெற்றதும், வரவு வவுச்சர்களினைச் சேகரிப்பதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு வருகை தருமாறு உரிய பதிவு செய்து இனங்காணப்பட்ட ஆட்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அறிவித்தலொன்று வழங்கப்படும். இதன்போது இபெசேவ சான்றிதழின் மூலப்பிரதியினையும் பயன்படுத்திய வரவு வவுச்சர் புத்தகங்களினையும் கொண்டுவரும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். வரவு வ்வுச்சர்கள் ஆணையாளர் நாயகத்திடமிருந்து வரவு வவுச்சர்களினைச் சேகரிப்பதற்கு அதிகாரமளிக்கப்பட்ட ஆட்களுக்கு மட்டும் வருவு வவுச்சர்கள் விடுவிக்கப்படுகின்றன.

SVATதொழிற்பாடுகளை மேற்கொள்ளும் அலகுகள் / கிளைகள்

கடமை / தொழிற்பாட்டின் தன்மை பொறுப்பு வாய்ந்த அலகு / கிளை
SVAT தகவல் இற்றைப்படுத்தல் அல்லது அல்லது மாற்றம் செய்தல் வாடிக்கையாளர் தகவல் இற்றைப்படுத்தல் பிரிவு
SVAT பதிவு செய்தல்(RIP)/(RIS) வரி பதிவு செய்தல் அலகு
SVAT அட்டவணை இற்றைப்படுத்தல் வாடிக்கையாளர் உதவி மற்றும் ஊக்குவிப்புப் பிரிவு
SVAT விருப்புரிமைக் கொடை நடவடிக்கைகள் MDC அலகு 1 & 2
வரவு வவுச்சர்களினை வழங்குதல் MDC அலகு 1 & 2


SVAT முறைமை நோக்கத்திற்காக கீழ்வரும் படிவங்கள் / அட்டவணைகள் குறித்துரைக்கப்பட்டுள்ளது.

இபெசேவ புதிய / திருத்தப் பதிவிற்கான விண்ணப்பம் [Form:- TPR_006_E] ​​​​​
வணிக விலைச்சிட்டை (Commercial Invoice) - NFE அடிப்படை ​​​​​
பெசேவ அறவீடு செய்யப்படாமல் வழங்கல்களுக்குப் பயன்படுத்தப்படுகின்ற இடைநிறுத்தப்பட்ட பெசேவ விலைச்சிட்டை (Suspended VAT Invoivce) - (SVAT 02) ​​​​​
இபெசேவ செயல்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு NFE வழங்குனர்களினால் பயன்படுத்தப்பட வேண்டிய இடைநிறுத்தப்பட்ட பெசேவ விலைச்சிட்டை(SVAT 02a)​​​​​
சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய சான்றிதழுக்கான விண்ணப்பம் (TIEP ird Application)​​​​​
இ - சேவைகளினைப் பயன்படுத்துவதனூடாக சமர்ப்பிக்கப்பட வேண்டிய அட்டவணைகள் [SVAT] ​​​​​

தயவுசெய்து 31 டிசம்பர் 2015ம் திகதிக்கு முற்பட்ட அட்டவணைகளை svat04@ird.gov.lk எனும் மின்னஞல் முகவரியின் ஊடாக அனுப்பி வைக்குமாறு கோரப்படுகின்றீர்கள்.

தாமதங்ளைத் தவிர்ப்பதற்கு 31 டிசம்பர் 2015ம் திகதிக்கு முன் விநியோகிக்கப்பட்ட SVAT கிரெடிட் வவுச்சர் புத்தகங்ளை உடனடியாகக் கையளிக்கவும்.

*NFE – வெளிநாட்டு நாணயமாற்றல்லா அடிப்படை
**பெசேவ – பெறுமதி சேர் வரி​​

​​​
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது: 04-10-2023