முத்திரைத் தீர்வை
முத்திரை தீர்வைக் கட்டளைச் சட்டம் இலஙகையில் 1909 ஆம் ஆண்டில் சட்டமாக்கப்பட்டது. அதன் பின்னர் 1982 ஆம் ஆண்டு சாதனங்கள் மற்றும் ஆதனங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அல்லது இடைநேர்விளைவானவற்றுக்கு முத்திரைத் தீர்வைக்கான விதிப்பனவினை அமுல்படுத்துவதற்காக முத்திரைத் தீர்வை சட்டத்தின் 43 ஆம் பிரிவு பாராளுமன்றத்தில் சட்டமாக்கப்பட்டது.
அசையா ஆதனங்கள் மற்றும் குறித்த சில ஆதனங்கள் மீதான முத்திரைத் தீர்வையானது அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு உரித்தளிக்கப்பட்டன. அத்துடன் மத்திய அரசாங்கத்தினால் நிருவகிக்கப்படும் முத்திரைத் தீர்வைகள் 2002 மே 01 ஆந் திகதியிலிருந்து அமுலுக்குவரும் வகையில் இடைநிறுத்தப்பட்டது. அரசாங்கமானது, முத்திரைத் தீர்வையினை 2006 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க முத்திரை தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தினூடாக மீள-அறிமுகப்படுத்தியதுடன், குறித்த பத்து ஆவணங்களுக்கு மட்டுமே ஏற்புடையதாக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு விதித்துரைக்கப்பட்ட ஆவணங்கள் பின்வருமாறு;
- சத்தியக் கடதாசி
- காப்புறுதிக் கொள்கை
- பிரசித்த நொத்தாரிசு ஆக கடமையாற்றுவதற்கான ஆணைப்பத்திரம்
- வர்த்தகம், வியாபாரம், உயர்தொழில் அல்லது வாழ்க்கைத் தொழிலினை கொண்டு நடாத்துவதற்கான குறித்துரைக்கப்பட்ட காலப்பகுதியொன்றிற்கான உரிமம்
- கடன் அட்டையை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை காரணமாக, குறிப்பிடப்பட்ட பணத் தொகைக்கான கொடுப்பனவுக்கு கடன் அட்டையை வைத்திருப்பவரிடமிருந்தான கடன் கோரிக்கை, கேள்வி அல்லது கோரிக்கை
- ஓர் ஆதனத்தைப் பாதிக்கும் திட்டவட்டமான பணத்தொகையொன்றிற்கான முறியொன்று அல்லது ஈடு
- வாக்குறுதிச் சீட்டு
- ஏதேனும் ஆதனமொன்றின் குத்தகை அல்லது வாடகை
- ஏதேனும் பணத்துக்காக அல்லது வேறு ஆதனத்திற்காக வழங்கப்பட்ட பற்றுச்சீட்டு அல்லது பொறுப்பு விடுவிப்பொன்று.
அறவிடக்கூடிய தன்மை
முத்திரைத் தீர்வையானது, 2008 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்கச் சட்டத்தினால் (திருத்தச்) திருத்தியமைக்கப்பட்டவாறு 2006 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ், ஒவ்வொரு குறிப்பிட்ட சாதனத்திற்கும் முத்திரைத் தீர்வை அறவிடப்படும்.
- இலங்கையில் எழுதி நிறைவேற்றப்படும், வரையப்படும் அல்லது
- இலங்கையில் அமைந்துள்ள ஆதனத்துடன் தொடர்புடைய சாதனமொன்று இலங்கைக்கு வெளியே நிறைவேற்றப்பட்டு, அச்சாதனம் இலங்கையில் முன்வைக்கப்படும் போது (இலங்கையில் முன்வைக்கப்டும் போது பொறுப்பு எழுகின்றது)
வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட விலக்களிப்புகளுக்கு உட்பட்டு.
வீதங்கள் |
விலக்களிப்புகள் |
அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டவாறு .
|
அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டவாறு
|
முத்திரை தீர்வை சாதனங்கள் மற்றும் வீதங்களின் அட்டவணை
No. |
சாதனம் |
வீதம் (ரூபா) |
1. |
சத்தியகடதாசி |
ரூபா 50/- |
2. |
காப்புறுதிக் கொளகை |
ஒவ்வொரு 1,000 இற்கும் அல்லது அதன் பகுதிக்கும் 1/- |
3. |
பிரசித்த நொத்தாரிசாக கடமையாற்றுவதற்கான ஆணைப் பத்திரம் |
ரூபா 2,000/- |
4 |
i. |
ஒரு கலண்டர் வருடத்திற்கு அல்லது கலண்டர் வருடத்திற்கு குறைந்த காலமொன்றுக்கு வழங்கப்பட்ட ஏதேனும் வெளிநாட்டு மதுபானத்திற்கான உரிமம் |
ரூபா. 20,000/- |
ii. |
AFL 1, AFL 2, AFL 3 மற்றும் AFL 4 ஆகிய சாராய உரிமங்களினுள் ஏதேனும் சாராய உரிமம் அல்லது ஏதேனும் வெளிநாட்டு மதுபான உரிமத்துடன் வழங்கப்படுபவை |
உரிமம் ஒன்றுக்கு ரூபா. 2,000/- அல்லது உரிமக் கட்டணத்தின் 10% என்பவற்றுள் அதிகமானது
|
iii. |
போத்தலில் அடைக்கப்பட்ட கள்ளு விற்பனைக்கு வழங்கப்பட்ட ஏதேனும் உரிமம் |
உரிமம் ஒன்றுக்கு ரூபா. 2,000/- அல்லது உரிமக் கட்டணத்தின் 10% என்பவற்றுள் அதிகமானது |
iv. |
மதுபான விற்னை வர்த்தகம் அல்லது வியாபாரம் தவிர்ந்த ஏதேனும் வியாபாரம், உயர்தொழில் அல்லது வாழ்க்கைத் தொழிலினை நடாத்துவதற்கான குறித்த காலப்பகுதிக்குரிய ஏதேனம் உரிமம் |
உரிமம் ஒன்றுக்கு ரூபா. 2,000/- அல்லது உரிமக் கட்டணத்தின் 10% என்பவற்றுள் குறைவானது |
5. |
வெளிநாடுகளில் கடன் அட்டைக் கொடுப்பனவுகள் |
ஒவ்வொரு 1,000 இற்கும் அல்லது அதன் பகுதிக்கும் 25/- |
6. |
ஏதேனும் திட்டவட்டமானதும் நிச்சயமானதும் மற்றும் ஏதேனும் ஆதனம் தொடர்பான ஏதேனும் முறிகள் அல்லது ஈடு |
ஒவ்வொரு ரூபா 1,000/- அல்லது அதன் பகுதி ஒன்றுக்கு ரூபா 1/- |
7. |
வாக்குறுதிப் பத்திரம் ஒன்று |
ஒவ்வொரு ரூபா 1,000/- அல்லது அதன் பகுதி ஒன்றுக்கு ரூபா 1/- |
8. |
ஏதேனும் ஆதனத்தின் ஏதேனும் குத்தகை அல்லது வாடகை சாதனம்
|
மொத்த வாடகை அல்லது குத்தகையின் ஒவ்வொரு ரூபா 1,000/- அல்லது அதன் பகுதி ஒன்றுக்கு ரூபா 10/- (20 வருடங்களுக்கு அதிகம் எனில், குத்தகை காலப்பகுதியின் முதல் 20 வருடத்திற்கு விஞ்சாத தொகை) |
9. |
ஏதேனும் பணம் அல்லது ஏனைய ஆதனத்திற்கு வழங்கப்பட்ட ஏதேனும் பெறுகை அல்லது கொடுப்பனவு |
ரூபா 25/- (ரூபா 25,000/- இற்கு மேல்) |
முத்திரைத் தீர்வையின் சேர்க்கை
ஒன்று திரட்டும் நோக்கத்திற்காக, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும். பின்வரும் ஆட்கள் பதிவினைப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
- காப்புறுதிப் கொள்கையினை வழங்குகின்ற எவரேனும் ஆள்
- உரிமங்களை வழங்குகின்ற எவரேனும் அதிகாரி
- கடனட்டை சேவையினை வழங்கும் எவரேனும் சேவை வழங்குனர்
- 100 மேற்பட்ட தொழிலார்களுக்கு தொழிலை வழங்கும் எவரேனும் தொழில் வழங்குனர்
- அந்நேரத்தில் விதித்துரைக்கப்பட்டவாறு, அத்தகைய சாதனத்தை முத்திரையிடலில் செயன்முறைப்படுத்த முடியாமை அல்லது அடைய முடியாமைக்கு உட்பட்ட ஏனைய சாதனத்தை வழங்கும் யாரேனும் வேறு ஆள்.
ஒன்று திரட்டும் அதிகாரியானவர் உரிய முத்திரை தீர்வையினை சேகரிக்குமாறு தேவைப்படுத்தப்படுவதுடன், காலாண்டின் இறுதி திகதியிலிருந்து 15 நாட்களினுள் காலாண்டுக்குரிய அனுப்புதல்களை உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பி வைப்பார். பின்வரும் ஒவ்வொரு சாதன வகைக்கும் தனித்தனியான அட்டவணைகள் பராமரிக்கப்பட வேண்டும்
முத்திரைத் தீர்வைக் காலப்பகுதி : ……… (வெவ்வேறு காலப்பகுதிகளுக்கு தனிதனித்தனியான அட்டவணைகள் பராமரிக்கப்படுதல் வேண்டும்) .
சாதனத்தின் பெயர்:
((காப்புறுதிக் கொள்கைகள், உரிமம், மதுபான உரிமம், நொத்தாரிசு உரிமம். ஏனைய உரிமங்கள், கடன் அட்டை பரிவர்த்தனை, சம்பள பெறுகைகள்,பெறுகைகள் மற்றும் கொடுத்து தீரத்தல்கள், ஒப்பந்தங்கள் மற்றும் ஈடுகள், வாக்குறுதிப் பத்திரங்கள் மற்றும் குத்தகை மற்றும வாடகை ) .
தொடர் இலக்கம்
|
சாதனத்தின் குறிப்பு இலக்கம்
|
வழங்கப்பட்ட திகதி
|
சாதனம் வழங்கப்பட்ட நபரின் பெயர்
|
சாதனத்தின் பெறுமதி
|
திரட்டப்பட்ட முத்திரைத்தீர்வையின் பெறுமதி
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கொடுப்பனவு முறை
Sமுத்திரைத் தீர்வையானது, பின்வருமாறு செலுத்தப்படலாம் -
- முத்திரைகளை ஒட்டுவதன் மூலம்,
- ஏதேனும் அசையாச் சொத்தின் ஈடு அல்லது குத்தகை தொடர்பிலான ஏதேனும் குறிப்பிடப்பட்ட சாதனத்தின் முத்திரைத் தீர்வையானது இலங்கை வங்கியின் தப்ரபேன் கிளையிலுள்ள உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தின் கணக்கு இலக்கம் 7041555 இற்கு வைப்பு செய்தல் வேண்டும். வங்கியானது கொடுப்பனவுக்கான சான்றிதழ் ஒன்றை வழங்குதல் வேண்டும் என்பதுடன் அச்சான்றிதழானது அந்த சாதனத்தில் ஒட்டப்படுதல் வேண்டும்.
- அதிகாரமளிக்கப்பட்ட ஆட்களினால் முத்திரைத் தீர்வையை ஒன்று திரட்டுதல் .
கொடுப்பனவுகள் இலங்கை வங்கியின் தப்ரபேன் கிளையிலுள்ள உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தின் முத்திரைத் தீர்வை கணக்கு இலக்கமான 4153842 இற்கு மேற்கொள்ளப்படுதல் வேண்டும்
அந்தந்த காலாண்டு பகுதிகளின் முத்திரைத் தீர்வைப் பொறுப்பினை கொடுத்து தீர்ப்பதற்கு, ஒவ்வொரு காலாண்டுக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட முறைமையால் பிரசுரிக்கப்பட்ட கொடுப்பனவுச் சிட்டைகளைப் பயன்படுத்தவும். முறைமையினால் பிரசுரிக்கப்பட்ட கொடுப்பனவுச் சிட்டைகள் இல்லாத போது கையினால் நிரப்பும் கொடுப்பனவுச் சிட்டைகளில் கொடுப்பனவுக் காலப்பகுதியின் குறியீட்டைய சரியாக பதிய வழியுறுத்தப்படுகின்றீர்கள்
உதாரணம்
|
காலப்பகுதிக்கான குறியீடு
|
2020/09/30 முடிவடைந்த காலாண்டுக்கு |
20090
|
2021/12/31 முடிவடைந்த காலாண்டுக்கு
|
21120
|
பதிவிறக்கங்கள்