සිංහලதமிழ்English
2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சட்டத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட பெறுமதி சேர் வரியானது (பெசேவ) 2002 ஆகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வந்தது. பெசே வரியானது பொருட்கள் மற்றும் சேவைகள் வரியை பதிலீட்டம் செய்த்துடன் பொருட்கள் மற்றும் சேவைகளின் நுகர்ச்சியின் மீதான வரியாகவும் காணப்படுகின்றது.
இது பொருட்கள் மற்றும் சேவைகளின் உள்நாட்டு நுகர்வின் மீது விதிக்கப்படும் வரியாகும். இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் இலங்கையின் சட்ட ரீதியான எல்லைகளுக்குள் வழங்கப்படுகின்ற பொருட்கள் மற்றும் சேவைகள் என்பன இவ்வரி விடயத்திற்கு உள்ளாகின்றன. இது பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தி மற்றும் விநியோக சங்கிலியின் ஒவ்வொரு நிலையிலுமுள்ள அதிகரித்த பெறுமதியின் மீது விதிக்கப்படும் ஓர் பல்நிலை வரியாகும். இந்த வரியானது, இறுதி அல்லது பொருட்கள் மற்றும் சேவைகளின் இறுதி பயன்பாட்டாளரினால் பொறுப்பேற்கப்படுகின்றது. இது ஒரு மறைமுக வரியாகும். இறுதி பயன்பாட்டாளரினால் செலுத்தப்பட்ட தொகைக்கு சமமான தொகையினை அரசாங்கம் உற்பத்தி மற்றும் விநியோக சங்கிலியிலுள்ள அனைத்து இடைநிலை வழங்குனர்களினூடாக இறுதியில் பெற்றுக் கொள்ளும்.
பெசேவ ஆனது குறித்த சில இறக்குமதிகள் மற்றும் பொருட்களின் சில்லறை மற்றும் மொத்த வழங்கலின் மீது விதிக்கப்படுவதில்லை. பெசே வரியிலிருந்து விலக்களிப்புப் பெற்ற பொருட்கள் மற்றும் சேவைகளுமுள்ளன.
அருகில் உள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஏதேனும் பிராந்திய காரியாலயத்தில் அல்லது தலைமையகத்தின் இரண்டாவது மாடியில் அமைந்துள்ள ஆரம்ப பதிவு செய்தல் அலகு TIN சான்றிழைப் பெற்றுக்கொண்டு வரி பதிவு செய்தல் அலகு VAT பதிவினைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும்.
பதிவு செய்தலுக்கு ஏற்புடையதான திகதியிலிருந்து பதினைந்து நாட்களினுள் வரி வகை பதிவுசெய்தல் படிவத்தினூடாக (TPR_005_T) விண்ணப்பிக்கப்படுதல் வேண்டும்.
வியாபார நிலையத்தில் தெளிவாக தெரியக் கூடிய இடத்தில் பதிவுச் சான்றிதழினை காட்சிக்கு வைத்தல். வரி விலைப்பட்டியல்களை வழங்குதல். (பதிவு செய்யப்பட்ட ஏனைய ஆட்களுக்கு) உரிய காலப்பகுதிகளுக்குரிய கணக்குகளைப் பேணுதல். உரிய திகதியன்று அல்லது அதற்கு முன்பாக வரிகளை செலுத்துதலும் விபரத்திரட்டுக்களைச் சமர்ப்பித்தலும்.
ஏதேனும் பின்வரும் மாற்றங்கள் குறித்து தாமதிக்காமல் திணைக்களத்திற்கு அறிவித்தல்.
பொருட்கள் அல்லது சேவைகளை வழங்கும் எவரேனும் ஆள் அல்லது பங்குடமை, குறித்த மாதத்திற்கான கொடுப்பனவினை அடுத்து வரும் மாதத்தின் 20 ஆம் நாளன்று அல்லது அதற்கு முன்பாக மேற்கொள்ளுமாறு கேட்கப்படுகின்றனர்.
சமர்ப்பிக்க வேண்டிய திகதி:
ஒவ்வொரு வரி விதிக்கத்தக்க காலப்பகுதி காலாவதியானதன் பின்னரான மாதத்தின் இறுதி நாளன்று அல்லது அதற்கு முன்பாக.
கையளிக்க வேண்டிய இடம்: