ஆண்டு |
கொள்கை மாற்றங்கள் |
1941 ஆம் ஆண்டு |
மிகை இலாபங்கள் தீர்வையானது தொழிற்பாட்டுக்கு வந்தது. |
1948 ஆம் ஆண்டு |
மிகை இலாபங்கள் தீர்வை நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக இலாபங்கள் வரி அறிமுகப்படுத்தப்பட்டது
|
1950 ஆம் ஆண்டு |
இலங்கையின் முதலாவது இரட்டை வரி
(நிவாரண) ஒப்பந்தத்தம் ஐக்கிய இராச்சியத்துடன் கைச்சாத்திட்டது. |
1958 ஆம் ஆண்டு |
கல்டோர் ஆணைக்குழு முன்மொழிவுகள்
- மூலதன நன்மைகள் வரி விதிப்பனவு
- செல்வ வரி விதிப்பு
- செலவின வரி விதிப்பு
- அன்பளிப்பு வரி விதிப்பு
உள்நாட்டு இறைவரித் திணைக்களமாக பெயரிடப்பட்டது. |
1961 ஆம் ஆண்டு |
வருமான வரி மீதான மிகைக் கட்டண அறிமுகம்,
தேசிய அபிவிருத்தி வரி, அரிசி உதவு தொகை வரி
வியாபார, உயர்தொழில் பதிவு செய்தல் மீதான வரி மற்றும் விற்பனை வரி மீதான மிகை கட்டணம் (இறுதி 2 நாட்களுக்கு மட்டும்.) |
1963 ஆம் ஆண்டு |
- யாழ்ப்பாணத்தில் முதலாவது பிராந்திய அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
- 1963 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழ் வியாபார புரள்வு வரி அறிமுகம்
|
1964 ஆம் ஆண்டு |
முதலாவது வரி மன்னிப்பு |
1971 ஆம் ஆண்டு |
- கட்டாய சேமிப்பு விதிப்பனவு தொழிற்பாட்டுக்கு வந்தது.
- உழைக்கும் போது செலுத்தும் வரி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது
- மூலதன விதிப்பனவு அறிமுகப்படுத்தப்பட்டது
|
1972 ஆம் ஆண்டு |
சுய மதிப்பீட்டு முறைமையின் அறிமுகம் |
1974 ஆம் ஆண்டு |
- உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மறுசீரமைக்கப்பட்டது
- உள்நாட்டு இறைவரிச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது
|
1979 ஆம் ஆண்டு |
1979 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம் , நடைமுறை ஆண்டின் அடிப்படையிலான வரி விதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. (79/80) |
1983 ஆம் ஆண்டு |
புனர்வாழ்வு விதிப்பனவு அறிமுகப்படுத்தப்பட்டது. |
1985 ஆம் ஆண்டு |
ஆதன தீர்வை மற்றும் அன்பளிப்பு வரி என்பன இல்லாதொழிக்கப்பட்டன |
1986 ஆம் ஆண்டு |
வட்டி மீதான நிறுத்தி வைத்தல் வரி அறிமுகப்படுத்தப்பட்டது. |
1988 ஆம் ஆண்டு |
- கம்பனி வரி விதித்தலின் “இயைபாக்க முறைமை” அறிமுகப்படுத்தப்பட்டது.
- பந்தய மற்றும் சூதாட்ட வரி விதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
|
1991 ஆம் ஆண்டு |
மொத்த மற்றும் சில்லறை விற்பனை புரள்வு வரியினை மாகாண சபைகளுக்கு பராதீனப்படுத்தல். |
1992 ஆம் ஆண்டு |
- குறித்துரைக்கப்பட்ட கட்டணங்கள் மீதான நிறுத்தி வைத்தல் வரி அறிமுகப்படுத்தப்பட்டது.
- தன்னியக்க முறை ஆரம்பிக்கப்பட்டது
- தேசிய பாதுகாப்பு அறவீடு அறிமுகப்படுத்தப்பட்டது.
|
1998 ஆம் ஆண்டு |
பொருட்கள், சேவைகள் வரிச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. (விற்பனை புரள்வு வரிக்குப் பதிலாக) 1998.01.01 இலிருந்து பதிவு செய்தலுக்கான குறுமட்டம் காலாண்டொன்றுக்கு ரூபா 500,000 அல்லது ஆண்டொன்றுக்கு 1,800,000 – வரி வீதம் 12.5% |
2000 ஆம் ஆண்டு |
2000 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம் |
2002 ஆம் ஆண்டு |
- பெறுமதி சேர் வரி அறிமுகப்படுத்தப்பட்டது. (பண்டங்கள், சேவைகள் வரி மற்றும் தேசிய பாதுகாப்பு அறவீடு என்பவற்றை இல்லாதொழிப்பதன் மூலம்) – பதிவு செய்தலுக்கான குறுமட்டம் காலாண்டொன்றுக்கு ரூபா 500,000 அல்லது ஆண்டொன்றுக்கு 1,800,000, அத்துடன் அட்டவணையில் குறித்துரைக்கப்பட்ட பொருட்கள் பூச்சியம் 10% மற்றும் 20% எனும் மூன்று வகையான வீதங்களில் அறவீடு செய்யப்பட்டது.
-
முத்திரைத் தீர்வையானது நீக்கப்பட்டு பற்று வரியானது அறிமுகப்படுத்தப்பட்டது.
|
2003 ஆம் ஆண்டு |
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் புத்தக இலாபத்தின் மீது நிதிச் சேவைகள் மீதான பெசேவ அறிமுகப்படுத்தப்பட்டது. |
2004 ஆம் ஆண்டு |
2004 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதார சேவைக் கட்டணமானது 2004.01.01 இலிருந்து நியம பெசேவ வீதமானது 15% இற்கு மாற்றப்பட்டதுடன் அடிப்படை வீதமானது 2004.11.19 இலிருந்து பயனுறுதியாகும் வகையில் 5% இல் பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் மீது விதிக்கப்பட்டது. |
2005 ஆம் ஆண்டு |
- ஒவ்வொரு கொள்வனவாளர் மற்றும் விற்பனையாளரினால் செலுத்தப்படற்பாலதான வரியின் 0.2% வீதத்தில் பங்குப் பரிமாற்ற வரி அறிமுகப்படுத்தப்பட்டது.
- செலுத்தத்தக்க வருமான வரியின் 0.25% சமூகப் பொறுப்புடமை வரி அறிமுகப்படுத்தப்பட்டது.
- அரச சார்பற்ற நிறுவன வரி –பெறப்பட்ட தொகையின் 30% இல் 3%
- ஆடம்பர பெசேவ விதமானது இரண்டு முறை மாற்றியமைக்கப்பட்டது 2005.01.01 இலிருந்து 2005.08.01 வரையில் 18 சதவீதமும் 2005.08.02 இலிருந்து – 20%
- 2005.11.02 இலிருந்து சிறந்த வரி செலுத்துனர்களுக்கு சிறப்புரிமை அட்டைகள் வழங்கும் முறை ஆரம்பிக்கப்பட்டது.
|
2006 ஆம் ஆண்டு |
2006 ஆம் ஆண்டின் 10 இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம் 2006 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க பொருளாதார சேவைக் கட்டணம் – இச்சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட பொருளாதார சேவைக் கட்டணமானது 2006 ஏப்ரல் 1 ஆம் திகதியன்று ஆரம்பமாகும் காலாண்டிலிருந்து பயன்வலுப் பெறும். 2006/07 இலிருந்து பயனுறுதியாகும் வகையில் சமூகப் பொறுப்புடமை வரி 1% இற்கு அதிகரிக்கப்பட்டது.
- விலை மாற்றல் மற்றும் நலிவுற்ற முதலாக்கம் என்பவற்றிற்கான வருமான வரிச் சட்டத்தினைக் கூட்டிணைத்தல்
- முத்திரைத் தீர்வையானது மீளவும் அறிமுகப்படுத்தப்பட்டது
|
2007 ஆம் ஆண்டு |
கம்பனிகள் அவற்றின் பகிரத்தக்க இலாபத்தின் 25% இற்குக் குறைந்த பங்குலாபத்தினை பகிர்ந்தளித்தகம்பனிகள் மீது 15% கருதப்பட்ட பங்கிலாப வரி அறிமுகம்.
ரூபா 600,000 இற்கு மேற்பட்ட பகிரத்தகு இலாபத்தினைக் கொண்டிருக்கும் பங்குடமைகள் மீது விதிக்கப்படுகின்ற பங்குடமை வரியின் 10% விதிப்பு.
- 2007.01.01 இலிருந்து வெளிப்படுத்தப்பட்ட வெளியீட்டு பெ.சே.வரியின் 85% இற்கு பெசேவரிக்கான அனுமதிக்கத்தக்க உள்ளீட்டு வரி செலவுயை மட்டுப்படுத்தல்.
- பெசேவ நிறுத்தி வைத்தல் வரி அறிமுகப்படுத்தப்பட்டது – எவரேனும் ஒப்பந்ததாரர் அல்லது ஏதேனும் அரசாங்க முகவராண்மைகளினால் செலுத்தத்தக்க பெசேவரியின் 1/3.
- ஆண்டொன்றுக்கு ரூபா 1.8 – 2.5 மில்லியன்கள் வழங்கள் பெறுமதியைக் கொண்டவர் மீது “தேர்வு பெ.சே.வ” வரி முறைமையின் அறிமுகம்.
|
2008 ஆம் ஆண்டு |
சமூகப் பொறுப்புடமை வரியானது 2008.04.01 இலிருந்து 1.5% இற்கு அதிகரிக்கப்பட்டதுடன் அது தனிநபர் வருமான வரியின் மீது விதிப்பிலிருந்து மீளப் பெறப்பட்டது. |
2009 ஆம் ஆண்டு |
தேசக் கட்டுமான வரி அறிமுகப்படுத்தப்பட்டது. 2009.02.01 இலிருந்து 1% வீதமாகவும் 2009.05.01 இலிருந்து 3% வீதமாகவும் அதிகரிக்கப்பட்டது.
- நியம பெசேவ விதமானது 12% இற்கு குறைக்கப்பட்டுள்ளதுடன் அடிப்படை வீதமானது நீக்கப்பட்டது.
- பெறுமதி சேர் வரிக்கான பதிவு செய்தல் எல்லையானது காலாண்டொன்றுக்கு ரூபா 650,000 இற்கு அல்லது ஆண்டொன்றுக்கு ரூபா 2.5 மில்லியனுக்கு அதிகரிக்கப்பட்டது.
- பதிவு செய்தலுக்கான தெரிவு பெறுமதி சேர் வரியானது ரூபா 3 மில்லியனுக்கு அதிகரிக்கப்பட்டது.
|
2011 ஆம் ஆண்டு |
- வரி மீளாய்வு ஆணைக்குழுவானது 2011.04.01 இலிருந்து ஆரம்பமாகும் வகையில் தாபிக்கப்பட்டது.
- தனிநபர் வரி விடுதொகையானது ரூபா 500,000 இற்கு அதிகரிக்கப்பட்டது.
- 2011.04.01 இலிருந்து பயனுறுதியாகும் வகையில் இபெசேவ முறைமையின் அறிமுகம்
- 2011.01.01 இலிருந்து பயனுறுதியாகும் வகையில் பங்குப் பரிமாற்று வீதமானது 0.3% இற்கு அதிகரிக்கப்பட்டது.
- பெசேவ வீதத்தின் 20%, 2011.11.23 ஆம் திகதியிலிருந்து பயனுறுதியாகும் வகையில் 12% இற்கு குறைக்கப்பட்டது.
- 2011.01.01 இலிருந்து நிதிசார் பெ.சே வரி வீதமும் 12% இற்கு குறைக்கப்பட்டது.
- பெசேவ உள்ளீட்டு உரிமைக் கோரிக்கைகளுக்கான வெளியீட்டின் 85% மட்டுப்படுத்தலானது நீக்கப்பட்டுள்ளது.
- தேகவ வீதமானது 2% இற்கு குறைக்கப்பட்டதுடன், மொத்த விற்பனை மற்றும் சில்லறை வியாபாரங்கள் மீதான அறவீடானது விரிவாக்கப்பட்டுள்ளது.
- பொசேக பதிவு செய்தலுக்கான குறுமட்டமானது காலாண்டொன்றுக்கு ரூபா 25 மில்லியனுக்கு அதிகரிக்கப்பட்டது.
- 2011.04.01 இலிருந்து பற்று வரி நீக்கப்பட்டுள்ளது.
- விதித்துரைக்கப்பட்ட கட்டணங்கள் மற்றும் வர்த்தக வாடகைகள் மீதான நிறுத்தி வைத்தல் வரியின் நீக்கம் (2011.04.01)
- பெசேவ முற்பணக் கொடுப்பனவுகளின் நீக்கம் – (2011 ஜனவரி 01)
- சமூகப் பொறுப்புடமை வரியின் நீக்கம் (2011.04.01 இல் வருமான வரியுடன் தொடர்புடையது)
- பிராந்திய உள்ளக கட்டமைப்பு அபிவிருத்தி வரி நீக்கம் (2011 ஜனவரி 01)
- மாகாண சபைகளினால் சேகரிக்கப்படும் விற்பனைப் புரள்வு வரி நீக்கம் (2011.01.01)
|
2012 ஆம் ஆண்டு |
- பொசேக மீதான குறுமட்டமானது காலாண்டொன்றுக்கு ரூபா 50 மில்லியனுக்கு அதிகரிக்கப்பட்டதுடன், வரி விதிக்கத்தகு வருமானத்தினைக் கொண்டிராதவர்களுக்கு ஏற்புடைய வகையில் மேற்கொள்ளப்பட்டது.
- பந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவானது அதிகரிக்கப்பட்டதுடன் பதிவுத் தேவைப்படுத்தலுடன் மொத்த சேகரிப்பின் மீதான 5% விதிப்பனவானது அறிமுகப்படுத்தப்பட்டது.
|
2013 ஆம் ஆண்டு |
- பெறுமதி சேர் வரி மற்றும் தேசக் கட்டுமான வரி மீதான பதிவுக் குறுமட்டமானது வருடமொன்றுக்கு ரூபா 12 மில்லியனுக்கு அதிகரிக்கப்பட்டது.
- மொத்த விற்பனை மற்றும் சில்லறை வியாபாரம் மீதான பெசேவ அறிமுகம் மற்றும் குறித்த ஆண்டில் உடனடுத்துவரும் ஏதேனும் மூன்று மாதங்களுக்கு ரூபா 500 மில்லியனுக்கு குறையாத பதிவு செய்தலுக்கு ஏற்புடைய குறுமட்டம். (விலக்களிப்புப் பெற்ற வழங்கல்கள் உள்ளடங்கலாக)
- பங்குடமையுடன் தொடர்புடைய குறுமட்டமானது ரூபா 1000,00 இற்கு அதிகரிக்கப்பட்டது.
|
2014 ஆம் ஆண்டு |
- தகைமை வாய்ந்த உயர் தொழிலர்களின் ஊழிய வருமானம் மீது ஏற்புடைய ஆகக் கூடிய வருமான வரி வீதம் 16%
- பெறுமதி சேர் வரி தொடர்பில் மொத்த விற்பனை மற்றும் சில்லறை வியாபார பதிவு செய்தலுக்கு ஏற்புடைய குறுமட்டம் ரூபா 250 மில்லியனுக்கு குறைக்கப்பட்டது.
|
2015 ஆம் ஆண்டு |
- பெறுமதி சேர் வரி மற்றும் தேசக் கட்டுமான வரி தொடர்பில் மொத்த விற்பனை மற்றும் சில்லறை வியாபார பதிவு செய்தலுக்கு ஏற்புடைய குறுமட்டம் வருடமொன்றுக்கு ரூபா 15 மில்லியனுக்கு அதிகரிக்கப்பட்டதுடன் பெசேவ வீதமானது 11% இற்கு குறைக்கப்பட்டது.
- பெறுமதி சேர் வரி தொடர்பில் மொத்த விற்பனை மற்றும் சில்லறை வியாபார பதிவு செய்தலுக்கு ஏற்புடைய குறுமட்டம் ரூபா 100 மில்லியனுக்கு குறைக்கப்பட்டது.
- ஊழியர்களுக்கான நிலையான தகைமைவாய்ந்த கொடுப்பனவானது ரூபா 250,000 வரையில் அதிகரிக்கப்பட்டது.
- ஒவ்வொரு ஊழியருக்குமான ஏற்புடைய ஆகக் கூடிய வருமான வரி வீதமானது 16% இற்கு மட்டுப்படுத்தப்பட்டது.
- பந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு சட்டத்தின் கீழ் செலுத்தத்தக்க வருடாந்த விதிப்பனவானது 10% வரையில் அதிகரிக்கப்பட்டது.
- ஆளொருவருக்கான சூதாட்ட விடுதிக்கான நுழைவுக் கட்டணம் 100 அமெரிக்க டொலருக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
- பெசேவ மற்றும் தேகவ என்பவற்றிற்குப் பதிலாக மோட்டார் வாகன உற்பத்தி / இறக்குமதி மீது விசேட தீர்வையும், மதுபானம், சிகரட் உற்பத்தி / இறக்குமதி மீது விசேட வரியும் அறிமுகப்படுத்தப்பட்டது.
- 2013/2014 வரி ஆண்டில் ரூபா 2,000 மில்லியனுக்கு மேற்பட்ட இலாபத்தினை உழைக்கின்ற எவரேனும் தனிநபர், கம்பனி அல்லது கம்பனி குழுமத்திற்கான ஒரெ தடவை வரியாக அறிமுகப்படுத்தப்பட்ட “உயர் இலாப வரியானது அவற்றின் இலாபத்தில் 25% ற்கு விதிக்கப்படல்.
|
2017 ஆம் ஆண்டு |
- 2017 ஆம் ஆண்டின் 24 இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம்
|