முகப்பு :: வெளியீடுகள் ::
உரைபெயர்ப்பும் சட்ட விதியாக்கமும்
உரைபெயர்ப்பும் சட்ட விதியாக்கமும்
2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழான பொருள்கோடல் குழு
2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 107 ஆம் பிரிவில் விதித்துரைக்கப்பட்டவாறு, வரி செலுத்துனரொருவர் இச்சட்டத்தின் ஏற்புடமை தொடர்பில் தனிப்பட்ட விதிப்பொன்றுக்காக ஆணையாளர் நாயகத்திற்கு (CGIR) விண்ணப்பிக்கலாம்.
இதனால், ஆணையாளர் நாயகமானவர் அத்தகைய வேண்டுகோளினை பரிசீலனை செய்வதற்கும், தோதானதாகவுள்ள தனிப்பட்ட விதிப்புக்களைஅவர் சார்பில் வழங்குவதற்குமென, “பொருள்கோடல் குழு” என அறியப்படுகின்றதான திணைக்களத்தின் சிரேஷ்ட அலுவலர்களினைக் கொண்ட குழுவொன்றினை நியமிப்பதற்கான நியதிச்சட்ட அதிகாரத்தினைக் கொண்டுள்ளார்.
பொருள்கோடல் குழுவின் தொழிற்பாடு
பொருள்கோடல் குழுவானது, எதிர்கால நிகழ்வுகள் அல்லது பொருத்தமான முறையில் கருத்தில் கொள்ளப்பட்டவாறான ஏனைய விடயங்கள் பற்றிய கருதுகோள்களின் அடிப்படையில், சட்டத்தின் 107,108, 109, 110 மற்றும் 111 ஆம் பிரிவுகளின் ஏற்பாடுகளுக்கமைவாக வரி செலுத்துனர் அல்லது தனிப்பட்ட விதிப்புக்கள் தொடர்பான சட்டத்தினால் செய்து கொள்ளப்பட்ட அல்லது செய்து கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ள கொடுக்கல் வாங்கலொன்றிற்கான இச்சட்டத்தின் ஏற்புடமை தொடர்பில் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தின் நிலைப்பாட்டினை எடுத்துக் காட்டுகின்ற தனிப்பட்ட விதிப்புக்களை வழங்கும்.
குழுவின் உறுப்பினர்கள்
குழுவானது உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தினால் நியமிக்க்ப்பட்ட தலைவர் ஒருவரையும் பத்து உறுப்பினர்களினையும் கொண்டிருக்கும்.
குழு
பெயர் |
பதவி |
குழுப் பதவி நிலை |
திரு பி.கே. சமன் சாந்தா |
பிரதி ஆணையாளர் நாயகம் |
தலைவர் |
திரு. ஜே.எம்.எஸ்.எஸ். ரத்னவர்தன |
சிரேஷ்ட ஆணையாளர் |
உறுப்பினர் |
திருமதி டி.எம்.எஸ்.எம். தென்னகோன் |
ஆணையாளர் |
உறுப்பினர் |
திருமதி எஸ். ஓ. சி. ஆர். நிவுஹெல்லா |
ஆணையாளர் |
உறுப்பினர் |
திரு.ஏ.எம்.நஃபீல் |
ஆணையாளர் |
உறுப்பினர் |
திரு ஏ.எல்.டி சஞ்சீவ |
ஆணையாளர் |
உறுப்பினர் |
திரு. எஸ். டபிள்யூ. பி. சில்வா |
ஆணையாளர் |
உறுப்பினர் |
திருமதி. எஸ்.ஐ. அசந்தி |
ஆணையாளர் |
உறுப்பினர் |
திரு. டி.ஐ.யு.கே. டயஸ் |
சிரேஷ்ட பிரதி ஆணையாளர் |
உறுப்பினர் |
திரு என்.சி. விஜயவர்த்தன |
சிரேஷ்ட பிரதி ஆணையாளர் |
உறுப்பினர் |
செல்வி. எம்.ஏ.சி.டி. சந்திரசிறி |
சிரேஷ்ட பிரதி ஆணையாளர் |
உறுப்பினர் |
|
திருமதி எம். சி. குணதிலக |
சிரேஷ்ட பிரதி ஆணையாளர் |
குழுவின் செயலாளர் |
விண்ணப்பிக்கும் நடைமுறை
-
விண்ணப்பமானது எழுத்து மூலம் கீழக்காணும் வகையில் முகவரியிடப்படுதல் வேண்டும்:
தலைவர் Iபொருள்கோடல் குழு உள்நாட்டு இறைவரித் திணைக்களம், கொழும்பு 02.
-
விண்ணப்பமானது கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும்:
செயலாளர் பொருள்கோடல் குழு செயலகம், 14 ஆவது மாடி, உள்நாட்டு இறைவரித் திணைக்களம், கொழும்பு 02.
-
விண்ணப்பமானது பின்வருவனவற்றினை உள்ளடக்கியிருத்தல் வேண்டும்;
- வரி செலுத்துனரின் பெயர்
- வரி செலுத்துனர் அடையாள இலக்கம் (TIN)
- வியாபாரத்தின் தன்மை
- ஏற்புடைய விதிப்புக்கான வரி வகை அல்லது ஏனைய பதிவு செய்யப்பட்ட வரி வகைகள்
- விதிப்பு மூலம் உள்ளடக்கப்பட வேண்டிய வரி மதிப்பாண்டு அல்லது வரி விதிக்கத்தக்க காலப்பகுதி
- தேவைப்படும் விதிப்பனவு தொடர்பில் சுருக்கமாக விதித்துரைக்கும் வினா.
- விண்ணப்பத்துடன் தொடர்புடைய ஏதேனுமொரு விடயத்திற்கெதிராக ஏற்கனவே எடுக்கப்பட்ட வரி மதிப்பீடொன்று தொடர்பான ஏதேனுமொரு மேன்முறையீடு அல்லது ஆட்சேபனை.
- சட்டத்தின் ஏற்பாடுகளின் (ஏதேனுமிருப்பின்) அடிப்படையில் அதனுடன் தொடர்புடைய விண்ணப்பதாரி ஒருவரின் விண்ணப்பத்தினைப் பொறுத்த வரையில்.
- வரி சார்ந்த உயர் தொழிலர் ஒருவரினூடாக விண்ணப்பமானது அனுப்பி வைக்கப்பட்டிருக்குமாயின், பதிவு செய்யப்பட்ட முகவரின் இலக்கம் மற்றும் தொழிற்பாட்டுப் பெயர்.
- விண்ணப்பதாரி அல்லது அதிகாரமளிக்கப்பட்ட ஆளின் தொடர்பு விபரங்கள்
(விண்ணப்பத்தின் ஏற்புடமை குறித்து தனிப்பட்ட விதிப்புச் செயல்முறையினை முன்னெடுப்பதற்கான விண்ணப்பக் கட்டணத்தினை உடனடியாகச் செலுத்துமாறு தொலைபேசி அழைப்பு மூலமாக அறியத்தரப்படும்.)
-
விண்ணப்பக் கட்டணம்
- வரி செலுத்துனர்கள் அனுமதிக்கத்தக்க கோரிக்கைகள் தொடர்பான விண்ணப்பக் கட்டணமாக ரூபா.25,000 இனைச் செலுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளனர்.
- கொடுப்பனவானது காசாகவோ அல்லது “உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தின்” பெயரில் வரையப்பெற்ற வங்கி வரைபின் மூலமாகவோ மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.
- இது அறிவித்தல் வழங்கப்பட்ட திகதியிலிருந்து 3 நாட்களினுள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.
- இதனை கொழும்பு 02 இல் அமைந்துள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் நிதி அலகின் (13 ஆவது மாடி) காசாளரிடம் மேற்கொள்ளலாம்.
- கொடுப்பனவு நறுக்கின் பிரதியானது தனிப்பட்ட விதிப்பினை வழங்கம் செயல்முறையினை ஆரம்பிப்பதற்காக பொருள்கோடல் குழுவின் செயலாளருக்கு சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
- அத்தகைய கொடுப்பனவு நறுக்கு சமர்ப்பிக்கப்பட்ட திகதியானது விண்ணப்பம் பெற்றுக்கொள்ளப்பட்ட திகதியாகக் கருதப்படும்.
-
மேலதிக தகவல்கள்
- வரி மேன்முறையீட்டு ஆணைக்குழு அல்லது ஏதேனும் நீதிமன்றத்தின் முன் நிலுவையிலுள்ள வழக்கான்றின் ஏதேனுமொரு விடயம் அல்லது பிரச்சனை தொடர்பான பொருள்கோடலுக்கான ஏதேனும் கோரிக்கையானது குழுவிற்கு குறித்துரைக்கப்படுதலாகாது.
- குழுவானது அதன் அனுமதிக்கத்தக்க நோக்கத்திற்கான ஒவ்வொரு கோரிக்கை மீதும் பூர்வாங்க மீளாய்வினை மேற்கொள்கின்றது.
- குழுவானது கோரிக்கையினை ஏற்றுக்கொள்வதில்லையென முடிவெடுக்குமிடத்து, குழு எழுத்து மூலம் அறிவித்தலினை வழங்கும்.
பதிவிறக்கங்கள்
|
|
|
|
|
|
|
|