வரிப் பொறுப்பு
பொருளாதார சேவைக் கட்டணமானது, எவரேனும் ஆள் அல்லது பங்குடமையானது வரி விலக்களிப்பினை அல்லது வரி விதிக்கத்தக்க நட்டங்களைக் கொண்டிருக்கின்ற எவரேனும் ஆள் அல்லது பங்குடமையினால் மாத்திரம் செலுத்தத்தக்கதாகும்.
எவ்வாறாயினும், கூட்டுறவுச் சங்கங்கள், வதிவல்லா விமானப் போக்குவரத்து மற்றும் கப்பல்துறைக் கம்பனிகள், உள்ளூராடச்சி சபைகள், அரசாங்க திணைக்களங்கள், லொத்தர் சபையின் எவரேனும் விநியோகஸ்தர், எவரேனும் வியாபாரி , நம்பிக்கை நிதியம் அல்லது பரஸ்பர நிதியத்தின் மற்றும் லக் சத்தோச பொருளதார சேவைக் கட்டணத்திற்குப் பொறுப்ப்புடையதல்ல.
வரி அடிப்படையும் எல்லைக்குறு மட்டமும்
2011.04.01 இலிருந்து 2017.03.31 வரையிலான காலப்பகுதிக்குரிய காலாண்டென்றிற்கு ரூபா. 50 மில்லியனை அல்லது அதனை விட விஞ்சுகின்ற புரள்வினைக் கொண்டுள்ள ஒவ்வொரு ஆளும் அல்லது பங்குடமையும் பொருளாதார சேவைக் கட்டணத்திற்குப் பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும். அத்துடன் 2017.0401 இலிருந்து அல்லது அதன்பின்னர் ஆரம்பமாகும் ஏதேனுமொரு காலாண்டொன்றிற்கு ரூபா 12.5 மில்லியனுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
வரி வீதம்
2016.01.01 இலிருந்து பயனுறுதியாகும் வகையில் உரிய புரள்வின் மீது பொறுப்பாகும் வரி வீதம் 0.5% ஆகும்.
வரி விதியாகும் புரள்வு
உண்மையில் கிடைக்கப்பெற்றிருப்பினும் அல்லது கிடைக்கப்பெறாவிடினும், ஒவ்வொரு கொடுக்கல் வாங்கல் தொகை புரள்வு ஆகும். ஆனால், ஏற்புடைய புரள்வில் பின்வருவன உள்ளடக்கப்படுவதில்லை
- பெசேவ (பதிவு செய்யப்பட்டவராயின்)
- மூலதன சொத்துக்களின் விற்பனையிலிருந்தான சம்பாத்தியங்கள்
- அறவிடமுடியாக் கடன்கள்
எவ்வாறாயினும், வியாபாரத்தின் குறித்த சில வகையீடுகளுக்கான புரள்வினைப பொறுத்த வரையில், சட்டமானது 2007.06.20 ஆம் திகதிய 1502/10, 2007.07.18 ஆம் திகதிய 1506/06 மற்றும் 2008.04.22 ஆம் திகதிய 1546/9 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானிகளினால் பிரசுரிக்கப்பட்டவாறாறு பொறுப்பாகும் புரள்வு தொடர்பில் விசேட கவனம் செலுத்துகின்றது. (இத்தகைய அனைத்து வர்த்தமானி அறிவித்தல்களினையும் ஒன்றிணைத்து புதியதொரு வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியடப்படும்).
அத்தகைய வியாபாரங்கள் பின்வருவனவற்றினை உள்ளடக்குகின்றன:
- கேழ்வு அனுப்புனர்கள்
- இரத்தினக்கல் மற்றும் வைரக்கல் ஏற்றுமதியாளர்கள்
- ஆடை ஏற்றுமதிகள் அல்லது வெளிநாட்டல்லா நாணயமாற்றின் அடிப்படையில் இறக்குமதி செய்யப்பட்ட மூலப் பொருட்கள் தவிர்ந்த வேறு ஏதேனும் பொருளின் தயாரிப்பாளர்
- முதன்மை வியாபாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிணையங்களின் விற்பனை
எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பொருளாதார சேவைக்கட்டணப் பொறுப்பு
ஏதேனும் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் பெற்றோல், டீசல் அல்லது மண்ணெய் விற்பனை மூலமான புரள்வானது, 2016.04.01 இலிருந்து 2017.03.31 வரையிலான காலப்பகுதியின் ஏதேனுமொரு காலாண்டிற்கு ரூபா.50 மில்லியன் அதற்கு மேற்பட்ட மொத்தப் புரள்விற்குப் பொறுப்புடையதெனில், 2016.04.01 இலிருந்து பயனுறுதியாகும் வகையில் பொருளாதார சேவைக்கட்டணத்திற்குப் பொறுப்புடையதாகும். அத்துடன் 2017.04.01 இலிருந்து அல்லது அதன் பின்னர் ஆரம்பமாகும் ஏதேனுமொரு காலப்பகுதிக்கு ரூபா.12.5 மில்லியனுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது
எவ்வாறாயினும், பொருளாதார சேவைக் கட்டமானது, பெற்றோல், டீசல் அல்லது மண்ணெய்யின் உரிய மொத்தப் புரள்வின் 1/10 இலும், ஏனைய உற்பத்திகள் (உராய்வு நீக்கிகள் போன்ற) மற்றும் சேவைக் கட்டணங்களிலிருந்தான (ஏதேனுமிருப்பின்) புரள்வின் மொத்த தொகையிலும் கணிப்பிடப்படுதல் வேண்டும்.
வரிக் கொடுப்பனவு
பொருளாதார சேவைக் கட்டணமானது நான்கு காலாண்டுகளில் சுய வரி மதிப்பீட்டடிப்படையில் செலுத்தத்தக்கதாகும். கொடுப்பனவுகள் அதற்குரிய படிவங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுவதுடன் வரிக் காலப்பகுதியானது சரியாக குறிப்பிடப்படுதலும் வேண்டும். (உ- ம்; 2017/06/30 காலாண்டு 17181)
காலாண்டு |
கொடுப்பனவுத் திகதி |
1 ஆவது காலாண்டு |
– ஜூலை 20 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்பாக |
2 ஆவது காலாண்டு |
– ஒக்டோபர் 20 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்பாக |
3 ஆவது காலாண்டு |
– ஜனவரி 20 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்பாக |
4 ஆவது காலாண்டு |
– ஏப்ரல் 20 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்பாக |
பொருளாதார சேவைக் கட்டண முற்கொடுப்பனவும் பொருளாதார சேவைக் கட்டண தீர்ப்பனவும்
பொருளாதார சேவைக் கட்டணமானது சுங்கப் பணிப்பாளர் நாயகத்தினால் சான்றுப்படுத்தப்பட்ட (எல்லைக் குறுமட்டத்தினைக் கவனத்தில் கொள்ளாது) கப்பல் கேழ்வுப் பெறுமதியில் சுங்கத்தினால் குறித்த சில பொருட்களின் இறக்குமதியில் முற்பணமாக பின்வரும் முறையில் அறவீடு செய்யப்படுகின்றது;
- விசேட வியாபாரப் பண்ட விதிப்பனவுக்குட்படும் ஏதேனும் பொருளின் மீது, 2016.04.01 இலிருந்து பயனுறுதியாகும் வகையில்,
- தங்கம், விலை உயர்ந்த உலோகங்கள் மீது, 2014.11.24 இலிருந்து பயனுறுதியாகும் வகையில்,
- மோட்டார் வகனங்களின் மீது, 2017.04.01 இலிருந்து பயனுறுதியாகும் வகையில்,
குறித்த கப்பல் சரக்கானது விடுவிப்புத் திகதியினுள் வருமாயின், சுங்கத்திற்க முற்பணமாக செலுத்தப்பட்ட பொருளாதார சேவைக் கட்டமானது, குறித்த காலாண்டின் பொருளாதார சேவைக் கட்டண பொறுப்பிற்கு எதிராக வரவு வைக்கப்பட முடியும். எவ்வாறாயினும், பொருளாதார சேவைக் கட்டணத்தின் மீதிப் பொறுப்பானது (ஏதேனுமிருப்பின்), காலண்டு முடிவடையும் மாதத்தினை உடனடுத்து வரும் 20 ஆம் நாளன்று அல்லது அதற்கு முன்னதாக செலுத்தப்படுதல் வேண்டும்.
எவ்வாறயினும், 2016.03.31 இல் முடிவடையும் காலப்பகுதி வரையில் செலுத்தப்பட்ட பொருளாதார சேவைக் கட்டணத்தில், ஏதேனும் மிகையிருப்பின், வரி மதிப்பீட்டாண்டினை உடனடுத்து வரும் நான்கு ஆண்டுகளின் வரிப் பொறுப்பிற்கு எதிராகப் பதிவளிப்புச் செய்வதற்காக முன்கொண்டு செல்லப்பட முடியும்.
விபரத்திரட்டினைச் சமர்ப்பித்தல் (2019/2020 வரி மதிப்பீட்டாண்டு வரை)
சமர்ப்பிக்க வேண்டிய திகதி :
- பொருளாதார சேவைக் கட்டண விபரத்திரட்டுக்கள் குறித்த வரி மதிப்பீட்டாண்டின் இறுதியில் அதனை உடனடுத்து வரும் மாதத்தின் 20 ஆம் நாளன்று அல்லது அதற்கு முன்பாக.
சமர்ப்பிக்க வேண்டிய இடம்: