முகப்பு ::
வரி வகைகள் ::
நாட்டைக் கட்டியெழுப்பும் வரி (NBT)
நாட்டைக் கட்டியெழுப்பும் வரி (NBT)
நாட்டைக் கட்டியெழுப்பும் வரியானது 2019.12.01 ஆம் திகதிக்கு முன்னர் இச் சட்டம் ஏற்புடைய ஒவ்வொரு ஆளிடமிருந்தும் மற்றும் பங்குடமையிலிருந்தும் அறவிடப்பட்டது. —
நாட்டைக் கட்டியெழுப்பும் வரியானது, 2009 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க நாட்டைக் கட்டியெழுப்பும் வரி (திருத்தச்) சட்டம், 2011 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க நாட்டைக் கட்டியெழுப்பும் வரி (திருத்தச்) சட்டம், 2012 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நாட்டைக் கட்டியெழுப்பும் வரி (திருத்தச்) சட்டம், 2013 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நாட்டைக் கட்டியெழுப்பும் வரி (திருத்தச்) சட்டம், 2014 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க நாட்டைக் கட்டியெழுப்பும் வரி (திருத்தச்) சட்டம், 2015 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க நாட்டைக் கட்டியெழுப்பும் வரி (திருத்தச்) சட்டம், 2016 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க நாட்டைக் கட்டியெழுப்பும் வரி (திருத்தச்) சட்டம், 2017 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க நாட்டைக் கட்டியெழுப்பும் வரி (திருத்தச்) சட்டம், 2018 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க நாட்டைக் கட்டியெழுப்பும் வரி (திருத்தச்) சட்டம், 2019 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க நாட்டைக் கட்டியெழுப்பும் வரி (திருத்தச்) சட்டம், 2020 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க நாட்டைக் கட்டியெழுப்பும் வரி (திருத்தச்) சட்டம் ஆகியவற்றினால் திருத்தப்பட்டவாறு 2009 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நாட்டைக் கட்டியெழுப்பும் வரிச் சட்டத்தின் மூலம் 2009 பெப்ரவரி 1 இலிருந்து பயனுறுதியாகும் வகையில் விதிக்கப்படுகின்றது.
வரியுரித்தாகும் நோக்கெல்லை
நாட்டைக் கட்டியெழுப்பும் வரியானது,
- இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் ஏதேனும் பொருட்கள் (தனிப்பட்டவர்களின் பொதிகளிலுள்ள ஏதேனும் பொருட்கள் தவிர்ந்தவை), அல்லது
- ஏதேனும் பொருளின் தயாரிப்பு வியாபாரத்தினைக் கொண்டு நடாத்துகையில் (தவிர்க்கப்பட்ட பொருட்கள் அல்லாதவை),
- ஏதேனும் பொருள் ஒன்றின் மொத்த மற்றும் சில்லறை விற்பனை வியாபாரத்தினைக் கொண்டு நடாத்துகையில் (மேலே (ii) இல் குறிப்பிடப்பட்ட தயாரிப்பாளர்களினால் மேற்கொள்ளப்படும் அப்பொருளின் வியாரம் அல்லாத)
- ஏதேனும் விலக்களிக்கப்பட்ட சேவையல்லாத, வங்கி அல்லது நிதி வியாபாரம் உள்ளடங்கலான ஏதேனும் சேவை விபரணத்தினை வழங்குகின்ற வியாபாரத்தினை நடாத்துதல்.
வரியுரித்துடைய புரள்வு
பொறுப்பாகக்கூடிய புரள்வானது நாட்டைக் கட்டியெழுப்பும் வரிக்கு ஏற்புடைய உரிய ஆட்களின் வகையீடு தொடர்பில் பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது.
- ஏதேனும் பொருளின் இறக்குமதியிலிருந்து எழுகின்ற, விலக்களிப்புப் பெற்ற பொருளின் பெறுமதி தவிர்ந்த, (பெசேவ சட்டத்தின் 6 ஆம் பிரிவின் கீழ்) பெசேவ நோக்கங்களுக்காக அறியப்பட்ட பொருளின் பெறுமதியினைக் குறிப்பிடுகின்றது.
-
எவரேனும் தயாரிப்பாளர் தொடர்பில், ஏதேனும் தொடர்புடைய காலாண்டொன்றுக்கானது என்பது, ஏதேனும் விலக்களிப்புப் பெற்ற பொருள் தவிர்ந்த, காலாண்டொன்றில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட ஏதேனும் பொருளின் விற்பனையிலிருந்து பெறப்படும் அல்லது பெறத்தக்கதான தொகையினைக் குறிப்பிடுகின்றது.
- ஏதேனும் சேவை வழங்கும் எவரேனும் ஆள் தொடர்பில், ஏதேனும் தொடர்புடைய காலாண்டொன்றுக்கானது என்பது ஏதேனும் விலக்களிப்புப் பெற்ற சேவையல்லாத, இலங்கையிலுள்ள ஏதேனும் சேவை வழங்கலிலிருந்து பெறப்படும் அல்லது பெறத்தக்க தொகையினைக் குறிக்கிறது. எவ்வாறொனிலும்,
- இலங்கையிலுள்ள ஏதேனும் நிதிச் சேவைகளை அளிக்கின்ற வியாபாரத்தை நடாத்துகின்ற ஆள் தொடர்பில், அத்தகைய சேவைகளுக்குச் சேரக் கூடிய பெறுமதி சேர்ப்பின் கணிப்பீடு 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் 25 அ பிரிவின் உட்பிரிவு (2) இல் குறிப்பீடு செய்யப்பட்ட இயைபான முறைமையின் கீழ் கணிப்பிடப்பட்ட வழங்கல் பெறுமதியினைக் குறிக்கும்;
(தயவுசெய்து பெசேவ சட்டத்தின் பிரிவு 25 இ இன் உட்பிரிவு (8) இன் கீழ் விநியோகிக்கப்பட்ட
2014, ஜூன் 23 ஆம் திகதிய 1868/10 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டவாறான நாட்டினைக் கட்டியெழுப்பும் வரி நோக்கங்களுக்கான கணிப்பீட்டு முறையினைப் பார்க்கவும்)
நிதிச் சேவைகளல்லாத சேவைகளிலிருந்து அத்தகைய ஆளின் பொறுப்பாகக் கூடிய புரள்வானது (நிதிச் சேவைகள் மீது நாட்டினைக் கட்டியெழுப்பும் வரிக்கு பொறுப்பாகக் கூடிய வழங்கலொன்றாக கருதப்பட்டிருக்கப்படாத) பிரிவு 3 இல் குறித்துரைக்கப்பட்ட வழமையான முறையின் கீழ் நாட்டைக் கட்டியெழுப்பும் வரிக்கு உட்படுதலும் வேண்டும்.
- ஆதன வாங்கி விற்றல் வியாபாரம் மற்றும் அவற்றின் மேம்படுத்தல் வியாபாரங்களிலிருந்து எழுகின்ற பெறுமதியானது 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் (2015.01.01 இலிருந்து பயனுறுதியாகும்) 5 ஆம் பிரிவின் (7) ஆம் உட்பிரிவின் கீழ் பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் நோக்கத்திற்காக உறுதிப்படுத்தப்படுகின்ற சேவைப் பெறுமதியினைக் குறிப்பிடுகின்றது.
-
ஏதேனும் இயைபான காலாண்டொன்றுக்கு ஏதேனும் பொருளின் மொத்த விற்பனை அல்லது சில்லறை விற்பனை வியாபாரத்தினைக் கொண்டு நடாத்துகின்ற எவரேனும் ஆள் தொடர்பில், ஏதேனும் காலாண்டொன்றிற்கானது பின்வருவன தவிர்ந்த ஏனைய விற்பனையிலிருந்து பெறப்படுகின்ற அல்லது பெறத்தக்கதான தொகையினைக் குறிக்கின்றது.
-
- மருந்தாக்கல் பொருட்கள்;
- 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட பண்ட வரிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் விசேட பண்ட வரி விதித்தலுக்குட்படுகின்ற ஏதேனும் பொருளானது, விற்பனைக்கான தயார்படுத்தலைத் தவிர்ந்த ஏதேனும் செயல்முறைக்கு உட்படாத, அத்தகைய பொருளின் இறக்குமதியாளரினால் 2014 ஜனவரி 1 ஆம் திகதியன்று அல்லது அதன் பின்னர் விற்பனை செய்யப்படுகின்ற அத்தகைய பொருளாக இருக்குமிடத்து;
- வெளிநாட்டு நாணய வடிவில், கொடுப்பனவினை ஏற்றுக் கொள்வதற்கு இலங்கை மத்திய வங்கியினால் அதிகாரமளிக்கப்பட்ட எவரேனும் ஆளினால் வெளிநாட்டு நாணய கொடுப்பனவு மீது விற்பனை செய்யப்பட்ட; இரத்தினக்கற்களும் ஆபரணங்களும்;
- ஏதேனும் அச்சடிக்கப்பட்ட புத்தகம்;
- ஏற்றுமதி செய்யப்பட்ட ஏதேனும் பொருள்;
- ஏற்றுமதிக்காக எவரேனும் ஏற்றுமதியாளருக்கு விற்பனை செய்யப்படும் ஏதேனும் பொருள்
- எவரேனும் தயாரிப்பாளர் அல்லது உற்பத்தியாளரிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் பசும்பால், கொழுந்திலை, கறுவா அல்லது இரப்பர்; (இரப்பர் பால், கிரேப் அல்லது சீற் இரப்பர் )
- எரிபொருள் நிரப்பு நிலையங்களில் விற்பனை செய்யப்படும் பெற்றோல், டீசல் அல்லது மண்ணெண்ணெய்;
- வெளிநாட்டு நாணயங்களில் கொடுப்பனவு செய்வதற்காக சுங்கத் தீர்வையற்ற கடைகளிலுள்ள ஏதேனும் பொருளின் சில்லறை விற்பனை; மற்றும்
- எல்.பி சமையல் எரிவாயுவின் விநியோகம்
- இறக்குமதியாளரினால் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் ஏதேனும் மோட்டார் வாகனம்;
- இறக்குமதியாளரினால் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்ற சிகரட்டுக்கள்;
- இறக்குமதியாளரினால் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்ற மதுபானங்கள்;
இவை தவிர பொதுவாக, மேலே பந்தி (2), (3) அல்லது (4) இல் குறிப்பிடப்பட்ட வியாபாரங்கள் தொடர்பில், வரிப் பொறுப்புடைய புரள்வு பின்வருவனவற்றையும் உள்ளடக்கமாட்டாது.
- ஏற்பட்ட ஏதேனும் அறவிடமுடியாக் கடன்கள்
- செலுத்தப்பட்ட ஏதேனும் பெசேவ (பதிவு செய்யப்பட்டிருப்பின்)
- சுங்கச் சாவடியில் செலுத்தப்பட்ட மதுவரி தவிர்ந்த, மதுவரித் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட ஏதேனும் மதுவரி
- நிதி அமைச்சரினால் அங்கீகரிக்கப்பட்டவாறான ஏதேனும் சர்வதேச நிகழ்வொன்றுடன் தொடர்புடைய ஏற்றுமதி அபிவிருத்தி வரிக் கழிவின் கீழ் செலுத்தப்படும் வரிக் கழிவு
- நிதி அமைச்சரினால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் சர்வதேச நிகழ்வுடன் தொடர்புடைய ஏதேனும் பொருட்கள் அல்லது சேவைகள் வழங்கலிலிருந்தான ஏதேனும் புரள்வு
வரியுரித்தாகும் புரள்வு எல்லை (காலாண்டுக்கு)
- ரூபா 3,000,000 - ஏதேனும் காலண்டுக்கானது
- ரூபா 25,000,000 - விற்பனைக்கான தயாரிப்பில் உள்நாட்டில் பெறப்படும் ஏதேனும் விவசாய உற்பத்தியினைப் பதப்படுத்துதல்
வரி வீதங்கள்
- வரியுரித்தாகும் புரள்வின் மீது (மொத்த விற்பனை அல்லது சில்லறை விற்பனை தவிர்ந்த) - 2%
- பின்வரும் ஆட்களின், ஏதேனும் பொருளின் மொத்த அல்லது சில்லறை விற்பனையிலிருந்து வரியுரித்தாகும் புரள்வின் மீது;
- எவரேனும் விநியோகஸ்தராயின், வரியுரித்தாகும் புரள்வின் நான்கில் மூன்று பகுதிக்கு
- இல்லை
- மொத்த அல்லது சில்லறை விற்பனையாளராயின் வரியுரித்தாகும் புரள்வின் அரைப்பகுதிக்கு - இல்லை
- மேலே “அ ”மற்றும் “ஆ ” வில் குறிப்பிடப்பட்டோரின் மீதி வரியுரித்தாகும் புரள்வு மீது
-2%
சுய மதிப்பீட்டு அடிப்படையிலான நாட்டைக் கட்டியெழுப்பும் வரிக் கொடுப்பனவு
நாட்டினைக் கட்டியெழுப்பும் வரியானது மூன்று மாதாந்த தவணைக் கட்டணங்களில் சுய மதிப்பீட்டு அடிப்படையில் செலுத்தப்படற்பாலதாகும். ஒவ்வொரு தவணைக் கட்டணமும் காலாண்டுக்கு செலுத்தத்தக்க நாட்டினைக் கட்டியெழுப்பும் வரியின் மூன்றில் ஒன்றிற்கு குறையாத தொகையினைக் கொண்டதாக இருக்கும். கொடுப்பனவு செய்யப்பட வேண்டிய திகதிகள் பின்வருமாறு.
தவணை |
கொடுப்பனவுத் திகதி |
முதலாவது தவணைக் கட்டணம் |
தொடர்புடைய காலாண்டின் இரண்டாவது மாதத்தின் 20 ஆம் நாளன்று அல்லது அதற்கு
முன்பாக |
இரண்டாவது தவணைக் கட்டணம் |
தொடர்புடைய காலாண்டின் மூன்றாவது மாதத்தின் 20 ஆம் நாளன்று அல்லது அதற்கு முன்பாக |
மூன்றாவது தவணைக் கட்டணம் |
தொடர்புடைய காலாண்டின் முடிவினைத் தொடர்ந்து உடனடுத்து வரும் மாதத்தின் 20 ஆம் நாளன்று அல்லது அதற்கு முன்பாக |
கொடுப்பனவானது இலங்கை வங்கியின் ஏதேனுமொரு கிளையில் செலுத்தப்படுதல் வேண்டும்.
ஏனையோருக்குச் செலுத்தப்பட்ட நா.க.வரிக்கான வரி வரவு
ஓர் தயாரிப்பாளருக்கு, நாட்டைக் கட்டியெழுப்பும் வரிக்கு பதிவு செய்யப்பட்ட ஏனைய தயாரிப்பாளரிடமிருந்து மேற்கொள்ளப்பட்ட கொள்வனவுகளின் மீதான நாட்டைக் கட்டியெழுப்பும் வரிக்கே வரி வரவு வழங்கப்படும்.
நாட்டைக் கட்டியெழுப்பும் வரி விபரத்திரட்டு ளினைச் சமர்ப்பித்தல் (2019 நவம்பர் 30 ஆம் திகதி முடிவடைந்த காலப்பகுதி )
- விபரத்திரட்டுக்களினைச் சமர்ப்பிக்க வேண்டிய திகதி :
- தொடர்புடைய காலாண்டின் இறுதி மாதத்தினைத் தொடர்ந்து வரும் 20 ஆம் நாளன்று அல்லது அதற்கு முன்னதாக சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
- பின்வருமாறு சமர்ப்பிக்கலாம் :
|
|
|
|
|
|
|
|