சமூக பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (SSCL)
2022 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க சமூக பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டுச் சட்டத்தினால், 2022, ஒக்டோபர் 01 ஆம் திகதி செயற்படும் வகையில் சமூக பாதுகாப்பு உதவுதொகை அறவீடானது அமுல்படுத்தப்பட்டுள்ளது. பதிவுசெய்துள்ள ஒவ்வொரு ஆளும் திரட்டிய அடிப்படையில் அறவீட்டுக்கு பொறுப்புடையவர் ஆதல் வேண்டும்.
பொறுப்பின் நோக்கம்
சமூக பாதுகாப்பு உதவுதொகை அறவீடானது
- ஏதேனும் பொருட்களை இறக்குமதி செய்யும்;
- ஏதேனும் பொருட்களை உற்பத்தி செய்யும் வியாபாரத்தை மேற்கொள்ளும்;
- எந்தவொரு வகையிலான சேவையை வழங்கும் வியாபாரத்தை மேற்கொள்ளும்;
- (பந்தி (2) இன் ஏற்பாடுகள் ஏற்புடைய உற்பத்தியாளராக காணப்பட்டு, அந்த பொருட்களின் உற்பத்தியாளரின் விற்பனை தவிர்த்து) ஏதேனும் பொருட்களின் இறக்குமதி மற்றும் விற்பனை அடங்கலாக அத்தகைய பொருட்களின் மொத்த அல்லது சில்லறை விற்பனையின் வியாபாரத்தை மேற்கொள்ளும்.
என்பவற்றில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு நபரினாலும் (தனிநபர் ஒருவரினால் அல்லது கூட்டிணைக்கப்பட்ட அல்லது கூட்டிணைக்கப்படாத அமைப்புகள் அடங்கலான உருவகத்தினால், நிறைவேற்றுநர் ஒருவரினால், அரச சார்பற்ற அமைப்பினால் மற்றும் தரும நிறுவனத்தினால்) செலுத்தப்படுதல் வேண்டும்
புரள்வு
சமூக பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டுச் சட்டம் ஏற்புடைய ஒவ்வொரு வகை ஆளுக்கும் வரையறுக்கப்பட்டுள்ள புரள்வு பின்வருமாறு:-
-
ஏதேனும் பொருட்களின் இறக்குமதி தொடர்பில் –முதலாம் அட்டவணையின் பாகம் 1 அ இல் குறிப்பிட்டுள்ள ஏதேனும் விலக்களிக்கப்பட்ட பொருட்களின் பெறுமதி நீங்கலாக 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் பிரிவு 6 இன் கீழ் பெறுமதி சேர் வரியின் தேவைப்பாட்டிற்கு பெறப்பட்ட அப்பொருளின் பெறுமதி
-
ஏதேனும் பொருட்களின் உற்பத்தி வியாபாரம் தொடர்பில் – முதலாம் அட்டவணையின் பாகம் 1அ இல் குறிப்பிட்டுள்ள விலக்களிக்கப்பட்ட பொருட்கள் நீங்கலாக அத்தகைய நபரினால், இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனையாகும் எந்தவொரு பொருளிற்கும் அந்த காலாண்டில் பெறப்பட்ட அல்லது பெறப்படாத ஆனால் பெறப்பட வேண்டிய தொகை.
-
ஏதேனும் விபரணமுடைய சேவை ஒன்றை வழங்குவதுடன் தொடர்புடைய -
- 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் 25 இ ஆம் பிரிவின் கீழ் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமான அறிவித்தலில் குறிப்பீடு செய்யப்பட்டுள்ள முறைமையினை பிரயோகிப்பதன் மூலம் கணிக்கப்பட்டவாறான, முதலாம் அட்டவணையின் பாகம் II இல் குறிப்பிடப்பட்டுள்ள விலக்களிக்கப்பட்ட சேவைகள் தவிர்ந்த, இலங்கையில் ஏதேனும் நிதிச் சேவைகளை வழங்கும் வியாபாரத்தினை மேற்கொள்ளும் எவரேனும் நபரினால் ஏதேனும் நிதிச் சேவைகளில் இலங்கையில் வழங்குவதிலிருந்து பெறப்பட்ட அல்லது பெறப்படாத ஆனால் பெறப்பட வேண்டிய தொகை
- முதலாம் அட்டவணையின் பாகம் II இல் குறிப்பிடப்பட்டுள்ள விலக்களிக்கப்பட்ட சேவைகள் தவிர்ந்த, 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் 5 ஆம் பிரிவின் (7) ஆம் உப பிரிவின் கீழ் பெறப்பட்ட காணி மற்றும் சீராக்கல் வியாபாரத்திலிருந்து எழும் ஏதேனும் சேவை
- விலக்களிக்கப்பட்ட சேவைகள் தவிர்த்து, மேலே (அ) மற்றும் (ஆ) இல் குறிப்பிடப்பட்டுள்ள சேவைகள் தவிர்ந்த, இலங்கையில் சேவையின் வழங்குகையில் இருந்து பெறப்பட்ட அல்லது பெறப்படாத ஆனால் பெறப்பட வேண்டிய தொகை
-
ஏதேனும் பொருட்களின் இறக்குமதி மற்றும் வியாபாரம் அடங்கலாக அத்தகைய பொருளின் மொத்த அல்லது சில்லறை வியாபாரம் தொடர்பில் – முதலாம் அட்டவணையின் பாகம் II அ இல் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் விலக்களிக்கப்பட்ட பொருட்கள் தவிர்ந்த, இலங்கையில் ஏதேனும் பொருள் ஒன்றின் மொத்த விற்பனை அல்லது சில்லறை விற்பனையிலிருந்து பெறப்பட்ட அல்லது பெறப்படாத ஆனால் பெறப்பட வேண்டிய தொகை
- மருந்துகள் (pharmaceuticals);
- விற்பனைக்காக இணைவாக்கம் செய்யப்படுவதை தவிர்ந்த பதனிடுகை எதுவும் இன்றி ஏதேனும் பொருள் இறக்குமதியாளரினால் விற்பனை செய்யுமிடத்து, 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபார பண்ட அறவீட்டுச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழான விசேட வியாபார பண்ட அறவீட்டுக்கு உட்படும் ஏதேனும் பொருட்கள்;
- ஏற்றுமதி செய்யப்படும் எந்தவொரு பொருளும்;
- எரிபொருள் நிரப்பு நிலையத்தில் விற்பனையாகும் பெற்றோல், டீசல் அல்லது மண்ணெண்ணெய்;
- எல். பி. எரிவாயு;
- எவரேனும் உள்ளூர் தயாரிப்பாளர் அல்லது உள்ளூர் உற்பத்தியாளரிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட தூய்மையான பால் (Fresh milk), பச்சை இலை, கறுவா அல்லது இரப்பர் (பால், கீரீப் அல்லது இரப்பர் தாள்).
வரியிடற்பாலதான எவரேனும் நபரினது ஏற்புடைய காலாண்டிற்கான புரள்வானது பின்வருவனவற்றை கொண்டிருத்தல் ஆகாது;
- அந் நபரினால் அந்த காலாண்டில் உறப்பட்ட ஏதேனும் அறவிடமுடியாக்கடன்,(ஏதேனும் காலாண்டில் மீளப்பெறப்பட்ட ஏதேனும் அறவிடமுடியாக்கடனானது, ஏற்புடைய காலாண்டின் புரள்வில் உள்ளடக்கப்படுதல் வேண்டும்)
- செலுத்தப்பட்ட ஏதேனும் பெறுமதி சேர் வரி (பதிவு செய்யப்பட்டிருப்பின்)
- அமைச்சரினால் அனுமதியளிக்கப்பட்ட ஏதேனும் சர்வதேச நிகழ்வு தொடர்பில் ஏற்றுமதி அபிவிருத்தி தள்ளுபடியின் கீழ் செலுத்தப்பட்ட ஏதேனும் தள்ளுபடி.
பதிவு செய்தலுக்கான எல்லை
- 2021.10.01 முதல் 2022.09.30 வரையிலான பன்னிரண்டு மாதங்களுக்கு ரூபா 120,000,000/- இனை விஞ்சும் மொத்த புரள்வு
- 2022.01.10 அன்று அல்லது அதற்கு பின்னர் ஆரம்பிக்கும் காலாண்டிற்கு ரூபா 30,000,000/- இனை விஞ்சும் அல்லது விஞ்சக்கூடிய மொத்த புரள்வு.
அறவிடுகை
சமூக பாதுகாப்பு உதவுதொகை அறவீடானது, வரிக்கு பொறுப்புள்ள புரள்வு தொடர்பில் 2022, ஒக்டோபர் 1 ஆம் திகதி அன்று அல்லது அதற்கு பின்னரான ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒவ்வொரு வரியிடத்தக்க ஆளிடமிருந்தும் அறவிடப்படும்
வீதம்
பின்வரும் வகையில் சமூக பாதுகாப்பு உதவுதொகை அறவீடானது வரிக்கு பொறுப்புள்ள புரள்வு தொடர்பில் 2.5 வீதத்தில் அறவிடப்படுதல் வேண்டும்.
1
|
ஏதேனும் பொருளொன்றின் இறக்குமதி |
புரள்வின் 100% |
2
|
ஏதேனும் பொருள் ஒன்றின் உற்பத்தி |
புரள்வின் 85% |
3
|
கீழ்வரும் சேவைகளுக்கு |
(a)
|
நிதிச் சேவை வழங்குகை |
பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் 25C ஆம் பிரிவின் கீழ் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமான அறிவித்தலில் குறிப்பீடு செய்யப்பட்டுள்ள சேவைகளுக்கு சாற்றப்படத்தக்க பெறுமதி சேர்ப்பின் 100% |
(b)
|
நிலைச் சொத்து மற்றும் மேம்படுத்துகை |
வரிக்கு பொறுப்புள்ள புரள்வின் 100% (2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் 5 ஆம் பிரிவின் (7) ஆம் உப பிரிவில் குறிப்பீடு செய்யப்பட்டுள்ள மேம்படுத்துகையின் பெறுமதி (விற்பனை பெறுமதி – விற்பனை திகதி அன்றுள்ளவாறு வெறிதான காணியின் சந்தைப் பெறுமானம்) |
(c)
|
(அ) மற்றும் (ஆ) தவிர்ந்த ஏனைய சேவை
|
சட்டத்தின் 3(2)(இ)(iii) பிரிவின் கீழ் குறிப்பீடு செய்யப்பட்டுள்ள புரள்வின் 100%
|
4
|
மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனை |
(a)
|
இலங்கையில் எவரேனும் உற்பத்தியாளர் அல்லது தயாரிப்பாளர் தொடர்பில் ஏதேனும் பண்டங்களிற்கு பதிவுசெய்யப்பட்டுள்ள வியாபாரியினால் விற்கப்படும் ஏதேனும் பொருள் |
சட்டத்தின் 3(2)(ஊ)ஆம் பிரிவில் குறிப்பீடு செய்யப்பட்டுள்ள புரள்வின் 25% |
(b)
|
இறக்குமதி மற்றும் விற்பனை அடங்கலாக மேலே (அ) விடயம் தவிர்ந்த மொத்த விற்பனை அல்லது சில்லறை விற்பனை |
சட்டத்தின் 3(2)(ஊ)ஆம் பிரிவில் குறிப்பீடு செய்யப்பட்டுள்ள புரள்வின் 50% |
சுய மதிப்பீட்டு அடிப்படையில் சமூக பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டின் கொடுப்பனவு
சமூக பாதுகாப்பு உதவுதொகை அறவீடானது சுய மதிப்பீட்டின் அடிப்படையில் மாதாந்தம் செலுத்தப்படலாம். கொடுப்பனவுகளுக்கான இறுதி திகதிகள் பின்வருமாறு.
மாதம் |
கொடுப்பனவு செலுத்தப்படுவதற்கான திகதி |
காலாண்டின் முதல் மாதத்திற்கு |
ஏற்புடைய காலாண்டின் இரண்டாம் மாதத்தின் இருபதாம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் |
காலாண்டின் இரண்டாம் மாதத்திற்கு |
ஏற்புடைய காலாண்டின் மூன்றாம் மாதத்தின் இருபதாம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் |
காலாண்டின் மூன்றாம் மாதத்திற்கு |
ஏற்புடைய காலாண்டினை உடன் தொடர்ந்து வரும் மாதத்தின் இருபதாம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் |
சமூக பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டு (SSCL) விபரத்திரட்டுகளை சமர்ப்பித்தல்
ஏற்புடைய காலாண்டின் இறுதி மாதத்தைத் தொடர்ந்து வரும் மாதத்தின் 20 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்ளர்
-
விபரத்திரட்டுக்களினைச் சமர்ப்பிக்க வேண்டிய திகதி :
- தொடர்புடைய காலாண்டின் இறுதி மாதத்தினைத் தொடர்ந்து வரும் 20 ஆம் நாளன்று அல்லது அதற்கு முன்னதாக சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
-
பின்வருமாறு சமர்ப்பிக்கலாம் :
குறிப்பு