இலங்கை உல்லாசப் பயணிகளுக்கான பெறுமதிசேர் வரி மீளளிப்புத் திட்டம்
உல்லாசப் பயணிகளுக்கான பெறுமதிசேர் வரி மீளளிப்பு முறையானது, இலங்கைக்கு வரும் உல்லாசப் பயணிகள் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது அவர்களிடமிருந்து அறவிடப்படும் பெறுமதிசேர் வரியை மீளளிப்புச் செய்வதற்காக இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு திட்டமாகும்.
இந்த “உல்லாசப் பயணிகளுக்கான பெறுமதிசேர் வரி மீளளிப்புத் திட்டம்” (TVRS), 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதிசேர் வரிச் சட்டத்தின் 58அ பிரிவின் ஏற்பாடுகளுக்கு இணங்கவும் அதன் அடிப்படையில் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தினாலும் நிதி அமைச்சரினாலும் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களுக்கு இணங்கவும் 2018 செப்டம்பர் 11 ஆம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படுகிறது.
TVRS திட்டத்தின் கீழ் மீளளிப்பைப் பெறுவதற்கான தகைமை
TVRS திட்டத்துக்குத் தகுதிபெறுவதற்கு உல்லாசப் பயணிகள் பின்வரும் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்:
- இலங்கைப் பிரசை அல்லாதவராகவும் இலங்கையின் வதியாதவராகவும் இருத்தல் வேண்டும்.
- இலங்கையின் குடிவரவு, குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் அதிபதியினால் வழங்கப்பட்ட வீசா விசிட்டர் வீசா வகையாக இருத்தல் வேண்டும்.
- இலங்கைக்கான விஜயத் திகதியின் போது பதினெட்டு வயதுக்குக் குறையாதவராக இருத்தல் வேண்டும்.
- மீளளிப்புக் கோரிக்கை சமர்ப்பிக்கும் திகதியாகும் போது இலங்கையில் தொண்ணூறு நாட்களுக்குக் குறைவாகத் தங்கியிருந்தவராக இருத்தல் வேண்டும்.
TVRS திட்டத்திற்கு ஏற்புடையதாகும் நிபந்தனைகள்
- உல்லாசப் பயணியொருவர் ஒரே நாளில் ஒரே உத்தரவுபெற்ற சில்லறை வியாபாரியொருவரிடமிருந்து பெற்ற குறைந்தபட்சம் இ.ரூபா 50,000 பெறுமதியான பெறுமதிசேர் வரி விதியாகும் (பெறுமதிசேர் வரி நீங்கலாக) கொள்வனவைக் கொண்டுள்ள உச்சளவாக மூன்று (3) வர்த்தகப் பொருள் விபரப்பட்டியல்களையும் (Invoice) கடவுச்சீட்டுடன் அந்த வர்த்தக பொருள் விபரப்பட்டியல்களை (Invoice) அதே சில்லறை வியாபாரியிடம் சமர்ப்பித்து பெற்றுக் கொண்ட பெறுமதிசேர் வரி மீளளிப்பு பொருள் விபரப்பட்டியலையும் (Invoice) (TVRI) வைத்திருத்தல் வேண்டும்.
- உல்லாசப் பிரயாணி, TVRS விண்ணப்பப் படிவமொன்றைப் பயன்படுத்தி பெறுமதிசேர் வரி மீளளிப்புக்கு விண்ணப்பித்திருத்தல் வேண்டும்.
- பொருட்கள் பயணப் பொதியில் (baggage) அல்லது கையில் கொண்டு செல்லும் பயணப் பொதியில் (hand luggage) இலங்கைக்கு வெளியே கொண்டு செல்லப்பட வேண்டும்.
(சுங்க நிலைகளில் பெளதிக ரீதியாக உறுப்படுத்துவதற்கு, மேலே கூறிய இன்வொய்ஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்கள் காணப்பட வேண்டும் என்பதை தயவு செய்து கவனத்திற் கொள்ளவும்.)
பொருட்களைக் கொள்வனவு செய்ய வேண்டிய இடம்
இத்திட்டத்தின் கீழ் பதிவுசெய்துள்ள
உத்தரவுபெற்ற சில்லறை வியாபாரி ஒருவரிடமிருந்து, பொருட்கள் கொள்வனவு செய்யப்பட வேண்டும். அத்தகைய கடைகளை அடையாளம் காண்பதற்குப் பின்வரும் இலட்சினைகள் கடைகளில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
TVRS திட்டத்தின் கீழ் மீளளிப்புக் கோருவதற்கு தகுதியான பொருட்கள்
பின்வருவன தவிர்ந்த, பெறுமதிசேர் வரி அறவிடப்பட்ட (“நிலையான வீதத்திலான பொருட்கள்”) மீளளிப்புக்குத் தகுதியானவையாகும்:
- பாதுகாப்புக் காரணங்களுக்காக விமானங்களில் கொண்டு செல்வது தடைசெய்யப்பட்ட பொருட்கள். (தடைசெய்யப்பட்ட பொருட்களை உங்கள் விமான சேவையின் மூலம் அறிந்து கொள்ளுங்கள்)
- இலங்கைச் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் வெளிக் கொண்டு செல்வதற்குத் தடைசெய்யப்பட்டுள்ள மற்றும் மட்டுப்படுத்தப்பட்டுள்ள பொருட்கள்.
- பெறுமதிசேர் வரி விலக்களிக்கப்பட்ட பொருட்கள் (பெறுமதிசேர் வரி செலுத்தப்படாத விடத்து)
- இலங்கையில் முழுமையாக/ பகுதியளவில் நுகரப்பட்ட பொருட்கள். (உதாரணமாக, உணவு, பானங்கள்)
- நுகரப்பட்ட சேவைகள் (உதாரணமாக: ஹோட்டல் கட்டணங்கள்)
- ஒன்லைனில் கொள்வனவு செய்யப்பட்டு இலங்கைக்கு வெளியில் பெற்றுக்கொள்ளக்கூடிய பொருட்கள்.
- TVRS கருமபீடத்தில் தேவையான விண்ணப்பப் படிவத்துடன் சோதனைக்காகச் சமர்ப்பிக்கப்படாத பொருட்கள்.
TVRS திட்டத்தின் கீழ் மீளளிப்புக் கோரும் இடம்.
கட்டுநாயக்கா, பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தில் புறப்படும் பகுதியில் அமைந்துள்ள TVRS கருமபீடம்.
பதிவிறக்கங்கள்
உல்லாசப் பயணிகளுக்கான TVRS ஆவணங்கள்
வணிகர்களுக்கான TVRS ஆவணங்கள்