Skip Ribbon Commands
Skip to main content
முகப்பு :: பயனுள்ள தகவல் :: வரி நாட்காட்டி

வரி நாட்காட்டி – 2023
(கொடுப்பனவுகளை மேற்கொள்ளல் மற்றும் விபரத்திரட்டுக்களை நிரப்புவதற்கான இறுதித் திகதிகள்)

ஜனவரி

பெப்ரவரி​

மார்ச்

நாள்
காலப்பகுதிக் கான குறியீடு
விளக்கம்
7
22/23 IV
ந்தய மற்றும் சூதாட்ட மொத்த வசூல் கொடுப்பனவு - புரள்வின் 10% - 2023 பெப்ரவரி
15
23020
முற்பண தனிநபர் வருமான வரிக் கொடுப்பனவு - 2023 பெப்ரவரி
23020
நிறுத்தி வைத்தல் வரி/முற்பண வருமான வரிக்கொடுப்பனவு - 2023 பெப்ரவரி
20
23120
பெறுமதி சேர் வரிக் கொடுப்பனவு - 2023 பெப்ரவரி
23020
நிதிச் சேவையில் பெறுமதி சேர் வரிக் கொடுப்பனவு – 2023 பெப்ரவரி
23102
சமூக பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டுக் கொடுப்பனவு– பெப்ரவரி 2023
31
2212
பெறுமதி சேர் வரி விபரத்திரட்டு – மாதாந்தம் (2023 பெப்ரவரி)​

வரி நாட்காட்டிகளின் பதிவிறக்கம் 2015

வரி நாள்காட்டி 2023

*​ செலுத்த வேண்டிய திகதியானது விடுமுறை நாளொன்றில் (அரசாங்க அல்லது வங்கி விடுமுறை) வருமிடத்து தயவுசெய்து குறித்த திகதியன்று அல்லது அதற்கு முன்பாக செலுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென்பதனைக் கவனத்தில் கொள்க.

தனிநபர்களினால் செலுத்தத்தக்க வருமான வரி மீதான கழிவு
குறித்த திகதிக்கு ஒரு மாதம் முன்னதாக ஏதேனும் காலாண்டு சுய மதிப்பீட்டு வருமான வரிக் கொடுப்பனவினை மேற்கொள்கின்ற எவரேனும் ஆள், அதில் 10% கழிவினைப் பெறுவதற்கு உரித்துடையவர்களாவர். (நடைமுறை ஆண்டு இலாபத்தினை அடிப்படையாகக் கொண்ட தவணைக் கட்டணத்தின் அத்தகைய வீதாசாரத்தினை விஞ்சாத)

விபரணம் – 1
2014/15 வரி மதிப்பீட்டாண்டுக்கான தங்களின் வருமான வரி பொறுப்பினை (தனிநபர் என்ற வகையில்) ரூபா 200,000/- எனக் கருதுக. சாதாரண சூழ்நிலைகளின் கீழ் நீங்கள் மேற்கொள்ளும் 2015/16 வரி மதிப்பீட்டாண்டுக்கான காலாண்டு சுய மதிப்பீட்டு வருமான வரிக் கொடுப்பனவுகள் பின்வருமாறு;

கொடுப்பனவுத் திகதி கணக்கீடு தொகை ( ரூ.)
2015 ஆகஸ்ட் 15 200,000 X ¼ 50,000
2015 நவம்பர் 15 200,000 X ¼ 50,000
2016 பெப்ரவரி 15 200,000 X ¼ 50,000
2016 மே 15 200,000 X ¼ 50,000
மொத்தம் 200,000


எவ்வாறாயினும், நீங்கள் மேற்படி கொடுப்பனவுகளை குறித்துரைக்கப்பட்ட திகதிகளுக்கு ஒரு மாதம் முன்னதாக செலுத்துவீர்களாயின் அதின் 10% இனை கழிவாகப் பெறுவதற்கு உரித்துடையவர்களாவதுடன் (நடைமுறை ஆண்டின் பொறுப்பின் அடிப்படையில்) கொடுப்பனவுகளை பின்வருமாறும் மேற்கொள்ள முடியும்.

கொடுப்பனவுத் திகதி கணக்கீடு தொகை ( ரூ.)
2015 ஜூலை 15 (200,000 x ¼) கழி 200,000 x ¼ x 10% 45,000
2015 ஒக்டோபர் 15 (200,000 x ¼) கழி 200,000 x ¼ x 10% 45,000
2016 ஜனவரி 15 (200,000 X ¼) අඩුකලා 200,000 X ¼X 10% 45,000
2016 ஏப்ரல் 15 (200,000 x ¼) கழி 200,000 x ¼ x 10% 45,000
மொத்தம் 180,000

 

2015/16 வரி மதிப்பீட்டாண்டுக்கான தங்களின் வருமான வரி பொறுப்பானது ரூபா 250,000/- எனில், 2016 செப்ரெம்பர் 30 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னரான வரி மதிப்பீட்டாண்டுக்கான செலுத்தத்தக்க வரி மீதியானது பின்வருமாறு;

கணிப்பு தொகை ( ரூ.)
2015/16 வரி மதிப்பீட்டாண்டுக்கு செலுத்தத்தக்க மொத்த வருமான வரி 250,000
கழி; மேற்கொள்ளப்பட்ட காலாண்டு சுய மதிப்பீட்டு வரி கொடுப்பனவுகளின் மொத்தம் (180,000)
கழிவு 200,000 x 10% (ஏற்கனவே கழிக்கப்பட்டது) (20,000)
2016 செப்ரெம்பர் 30 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் செலுத்தத்தக்க வரி மீதி 50,000


​விபரணம் II
2012/13 வரி மதிப்பீட்டாண்டுக்கான தங்களின் வருமான வரி பொறுப்பானது (தனிநபர் என்ற வகையில்) ரூபா 200,000/- எனக் கருதுக. பின்னர், 2012/14 வரி மதிப்பீட்டாண்டுக்கான பொறுப்பின் அடிப்படையில் சாதாரண சூழ்நிலையின்கீழ் நீங்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய காலாண்டு சுய மதிப்பீட்டு வருமான வரி கொடுப்பனவுகள் பின்வருமாறு;

கொடுப்பனவுத் திகதி கணக்கீடு தொகை ( ரூ.)
2015 ஆகஸ்ட் 15 200,000 X ¼ 50,000
2016 நவம்பர் 15 200,000 X ¼ 50,000
2016 பெப்ரவரி 15 200,000 X ¼​ 50,000
2016 மே 15 200,000 X ¼ 50,000
மொத்தம் 200,000


எவ்வாறாயினும், நீங்கள் உரிய குறித்துரைக்கப்பட்ட திகதிகளுக்கு ஒரு மாதம் முன்னதாக மேற்படி கொடுப்பனவுகளை செய்வீர்களாயின், அத்தொகையில் 10% கழிவினை பெறுவதற்கு நீங்கள் உரித்துடையவர்களாவீர்கள் (நடைமுறை ஆண்டின் பொறுப்பின் அடிப்படையில்) என்பதுடன் கொடுப்பனவுகளை பின்வருமாறு மேற்கொள்ள முடியும்.

கொடுப்பனவுத்​ திகதி கணக்கீடு தொகை ( ரூ.)
2015 ஜூலை 15 (200,000 x ¼) கழி 200,000 x ¼ x 10% 45,000
2015 ஒக்டோபர் 15 (200,000 x ¼) கழி 200,000 x ¼ x 10% 45,000
2016 ஜனவரி 15 (200,000 x ¼) கழி 200,000 x ¼ x 10% 45,000
2016 ஏப்ரல் 15 (200,000 x ¼) கழி 200,000 x ¼ x 10% 45,000
மொத்தம் 180,000

 

தங்களின் 2015/16 வரி மதிப்பீட்டாண்டுக்கான வருமான வரி பொறுப்பு ரூபா 150,000 எனின், வரி மதிப்பீட்டாண்டுக்கான மீளளிப்பானது பின்வருமாறு கணிப்பிடப்படுகின்றது.

கணிப்பு தொகை ( ரூ.)
2015/16 வரி மதிப்பீட்டாண்டுக்கு செலுத்தத்தக்க மொத்த வருமான வரி 150,000
கழி; காலாண்டு சுய மதிப்பீட்டு வரிக் கொடுப்பனவுகளின் மொத்தம் (180,000)
கழிவு 150,000 x 10% (ஏற்கனவே கழிக்கப்பட்டது) (15,000)
2015/16 வரி மதிப்பீட்டாண்டுக்குரிய மீளளிப்பு (45,000)
​​

 கழிவானது நடைமுறை ஆண்டின் 10% இற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
​​

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது: 07-03-2023