සිංහලதமிழ்English
2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 114 ஆம் அல்லது 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 83 ஆம் பிரிவின் நியதிகளின்படி (2018 ஏப்ரல் 1, இருந்து) தொழில் வழங்குனர்கள் உழைப்பூதிய கொடுப்பனவு மேற் கொள்ளப்படும் வேளையில் ஊழியர்களின் ஊழிய வருமானத்தின் மீது வருமான வரியினைக் கழிப்பனவு செய்யுமாறு கேட்கப்படுகின்றனர்.
இந்நோக்கத்திற்காக, உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தினால் அத்தகைய வரிக் கழிப்பனவுகள் மேற்கொள்ளப்படுகையில் பயன்படுத்தப்பட வேண்டிய வரி அட்டவணைகள் குறித்துரைக்கப்பட்டுள்ளது. உழைப்பூதியம் சம்பாதிக்கப்படுகின்ற வேளையில் செலுத்தப்படும வரி என்பதால், இந்த முறைமையானது உழைக்கும் போது செலுத்தும் முறைமை (PAYE) என அழைக்கப்படுகின்றது.