Skip Ribbon Commands
Skip to main content
Customer Service_Promotion Units
முகப்பு :: பிரிவு மற்றும் சேவைகள் :: வாடிக்கையாளர் சேவை மற்றும் ஊக்குவிப்பு

வாடிக்கையாளர் சேவை மற்றும் ஊக்குவிப்பு

உள்நாட்டு இறைவரித் திணைக்களமானது வரி செலுத்துனர்கள் மற்றும் பொது மக்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் சேவைகளினை, சேர் சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்தை, கொழும்பு 02 எனும் முகவரியில் அமைந்துள்ள தலைமையலுவகத்தின் நிலத் தளம் மற்றும் 1 ஆவது தளத்தில் அமைந்துள்ள வாடிக்கையாளர் சேவை மற்றும் ஊக்குவிப்பு அலுகுகளினூடாக வழங்கி வருகின்றது.

வரி செலுத்துனர்கள் மற்றும் பொதுமக்கள் தமக்குத் தேவையான சேவைகளினை இத்தகைய அலகுகளினூடாக பெற்றுக் கொள்ளலாம். இங்கே இரண்டு பிரிவுகள் ஆறு அலகுகளாக பிரிக்கப்பட்டுள்ளதுடன் ஒரே கூரையின் கீழ் பல்வேறு சேவைகளும் வழங்கப்படுகின்றன.

அலகுகள்​
  1. வாடிக்கையாளர் பதிவு செய்தலும் இற்றைப்படுத்தலும்.
  2. இணக்க ஆதரவு சேவை மற்றும் வாடிக்கையாளர் ஊக்குவிப்புப் பிரிவு

வரி செலுத்துனர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் வரி சார்ந்த விடயங்கள் தொடர்பில் மேலதிக தகவல்கள் மற்றும் விளக்கங்களினைப் பெற்றுக் கொள்வதற்கு உள்நாட்டு இயைவரித் திணைக்களத்தின் அழைப்பு நிலையத்துடன் தொடர்பு கொள்ளலாம்.

அழைப்பு நிலையம்
சுருக்கக் குறியீடு : 1944
மின்னஞ்சல் : callcentreservice@ird.gov.lk
அழைப்பு மேற்கொள்ளக் கூடிய நேரங்கள்: :

திங்கள் முதல் வெள்ளி வரை : மு.ப.9:00 இலிருந்து பி.ப. 7:00 வரை
சனிக்கிழமை : மு.ப.9:00 இலிருந்து பி.ப. 1:00 வரை

IRD Call Center


​​

ஆரம்ப பதிவு செய்தல் அலகு

ஆரம்ப பதிவு செய்தல் அலகானது வாடிக்கையாளர்களை வரி செலுத்துனர்களாக பதிவு செய்வதற்கான அலகாகும்

ஆரம்ப பதிவு செய்தல் அலகின் பிரதான நடவடிக்கைகள்
  • வரி செலுத்துனர் அடையாள இலக்கத்தினை (TIN) வழங்குதல்
  • தனிப்பட்ட அடையாள இலக்கத்தினை (PIN) வழங்குதல்
  • SSID (விதித்துரைக்கப்பட்ட பதவியினர் அடையாள) இலக்கத்தினை வழங்குதல்
  • நகல் வரி செலுத்துனர் அடையாள இலக்க (TIN) சான்றிதழினை வழங்குதல்
  • வரி முகவரினைப் பதிவு செய்தல்
ஆரம்ப பதிவு செய்தல் அலகின் அமைவிடம்
  • 2 ஆவது தளம்
  • உள்நாட்டு இறைவரித் திணைக்களம்
  • சேர் சிற்றம்பலம் கார்டினர் மாவத்தை
  • கொழும்பு 02
தொடர்புகளுக்கு :
  • சிரேஷ்ட ஆணையாளர்​​
    தொலைபேசி : 011 - 213 4200
    மின்னஞ்சல் : priyanka.ma@ird.gov.lk
  • ஆணையாளர்கள்
    தொலைபேசி : 011 - 213 4203
    மின்னஞ்சல் : pr@ird.gov.lk
​​​ மேல்


வரி பதிவு செய்தல் அலகு

வரி பதிவு செய்தல் பிரிவானது வரி வகைகளுக்கான வரி செலுத்துனர்களினைப் பதிவு செய்யும் அலகாகும்.

வரி பதிவு செய்தல் அலகின் பிரதான நடவடிக்கைகள்
  • வரிகளினைப் பதிவு செய்தல்: –
    • வருமான வரி
      • கூட்டிணைவு நிறுவனங்கள் (CIT)
      • பங்குடமை (PIT)
      • தனிநபர்கள் (IIT)
      • களரிகள் போன்றவை.
    • பெறுமதி சேர் வரி (VAT)
      • நிரந்தர பெசேவ
      • தற்காலிக பெசேவ
    • இலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி திட்டம் (SVAT)
    • நாட்டினைக் கட்டியெழுப்பும் வரி (NBT)
    • உழைக்கும் போது செலுத்தும் வரி (PAYE)
    • பிடித்து வைத்தல் வரி (WHT)
    • பொருளாதார சேவைக் கட்டணம் (ESC)
    • விசேட கருத்திட்ட பதிவு செய்தல், பிரிவு 22.7 இன் கீழ் நீடிப்புச் செய்தலும் முடிவுறுத்துதலும் போன்றவை.
  • நிரந்தரப் பெசேவ பதிவு செய்தலுக்கான நகல் சான்றிதழ்களினை வழங்குதல்
  • சுங்க நோக்கங்களுக்காக ஆட்சேபனையற்ற கடிதத்தினை வழங்குதல்
வரி பதிவு செய்தல் பிரிவின் அமைவிடம்
  • 2 ஆவது தளம்
  • உள்நாட்டு இறைவரித் திணைக்களம்
  • சேர் சிற்றம்பலம் கார்டினர் மாவத்தை
  • கொழும்பு 02
தொடர்புகளுக்கு :
  • சிரேஷ்ட ஆணையாளர்
    தொலைபேசி : 011 - 213 4200
    மின்னஞ்சல் : priyanka.ma@ird.gov.lk
  • ஆணையாளர்கள்
    தொலைபேசி : 011 - 213 4201
    மின்னஞ்சல் : tr@ird.gov.lk
மேல்


வாடிக்கையாளர் தகவல் இற்றைப்படுத்தல் அலகு

வாடிக்கையாளர் தகவல் இற்றைப்படுத்தல் அலகானது வரி செலுத்துனர்கள் தொடர்பான விபரங்களை இற்றைப்படுத்துகின்றது அல்லது அவற்றில் மாற்றங்களை மேற்கொள்கின்றது.

வாடிக்கையாளர் தகவல் இற்றைப்படுத்தல் அலகின் பிரதான நடவடிக்கைகள்
  • கம்பனி, நிறுவனம், பங்காளர், பணிப்பாளர், தனிநபர் போன்றவற்றின் பெயர் மற்றும் முகவரியில் மாற்றங்களை மேற்கொள்கின்றது
  • வரி செலுத்துனர் அடையாள இலக்கப் பதிவினை அல்லது வரி வகைப் பதிவு செய்தலினை பதிவு செய்தல், செயற்பாட்டினை இடைநிறுத்துதல் மற்றும் மீளச் செயற்படுத்துதல் என்பவற்றினை இரத்துச் செய்வதன் மூலம் வாடிக்கையாளர் தகுதிநிலையினை இற்றைப்படுத்துதல்
  • இலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி திட்டத்தின் கீழ் இற்றைப்படுத்துதல் அல்லது மாற்றங்களை மேற்கொள்ளுதல்
வாடிக்கையாளர் தகவல் இற்றைப்படுத்தல் அலகின் அமைவிடம்
  • 2 ஆவது தளம்
  • உள்நாட்டு இறைவரித் திணைக்களம்
  • சேர் சிற்றம்பலம் கார்டினர் மாவத்தை
  • கொழும்பு 02
தொடர்புகளுக்கு :
  • சிரேஷ்ட ஆணையாளர்
    தொலைபேசி : 011 - 213 4200
    மின்னஞ்சல் : priyanka.ma@ird.gov.lk
  • ஆணையாளர்கள்
    தொலைபேசி : 011 - 213 4202
    மின்னஞ்சல் : ci@ird.gov.lk
மேல்


இசைவாணை மற்றும் பணிப்புரை அலகு

இசைவாணை மற்றும் பணிப்புரை அலகானது, வாடிக்கையாளர்கள் தமது பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, குடியகல்வு மற்றும் இலங்கைக்கு வெளியே கொடுப்பனவுகளை அனுப்பும் நோக்கங்களுக்காக, உரிய அனைத்து இசைவாணைச் சான்றிதழ்களை வழங்குகிறது.

இசைவாணை மற்றும் பணிப்புரை அலகின் பிரதான நடவடிக்கைகள்
  • பின்வருவனவற்றிற்கான வரிப் பொறுப்பினைக் கணிப்பிடுதலும் இசைவாணைச் சான்றிதழ்களினை வழங்குதலும்
    • இலங்கைக்கு வெளியே கொடுப்பனவுகளினை மேற்கொள்ளுதல்
    • குடியகல்வு கொடுப்பனவு
    • இறுதிப் பயன்கள்
இசைவாணை மற்றும் பணிப்புரை அலகின் அமைவிடம்
  • 2 ஆவது தளம்
  • உள்நாட்டு இறைவரித் திணைக்களம்
  • சேர் சிற்றம்பலம் கார்டினர் மாவத்தை
  • கொழும்பு 02
தொடர்புகளுக்கு :
  • சிரேஷ்ட ஆணையாளர்
    தொலைபேசி : 011 - 213 4250
    மின்னஞ்சல் : jayaratne.iv@ird.gov.lk
  • ஆணையாளர்கள்
    தொலைபேசி : 01​1 - 213 4204
    மின்னஞ்சல் : cd@ird.gov.lk
மேல்


ஆலோசனை மற்றும் ஊக்குவிப்பு அலகு

ஆலோசனை மற்றும் ஊக்குவிப்பு அலகானது, நேரடியாக வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கு, அவர்களின் வரி விடயங்களுக்கு ஆலோசனை சேவையை வழங்குதல் , உள்நாட்டு இறைவரி திணைக்களத்தால் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து இசைவாணைச் சான்றிதழ்களை வழங்குதல் மற்றும் திணைக்கள வெளியீடுகளை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்தல் போன்ற சேவைகளை வழங்குகின்றது.

ஆலோசனை மற்றும் ஊக்குவிப்பு அலகின் பிரதான நடவடிக்கைகள்
  • வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனை சேவையினை வழங்குவதில் உதவுதல்
  • வரி இசைவாணைச் சான்றிதழினை வழங்குதல்
    • விசா நோக்கத்திற்காக
    • வெளிநாட்டுக் கடன்பெறுவதற்கு
    • பொதுத் துறையில் உயர் பதவிகளில் உள்ளவர்களுக்கு
    • வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு
    • மதுபான உரிமத்தை புதுப்பிப்பதற்கு
    • வற் அல்லாதவர்களுக்கு
    • கம்பனிப் பதிவினை இரத்துச்செய்வதற்கு
    • பணத்தினை உள்நோக்கி அனுப்புவதற்கு
  • இசைவாணைச் சான்றிதழ்கள், வரவு வவுச்சர்கள், நகல் வரி விபரத்திரட்டுக்கள் மற்றும் அனைத்து வரி வகைகளுக்குமான கொடுப்பனவு நறுக்குகள் என்பவற்றினை வழங்குதல்.
  • வரி செலுத்துனர் விழிப்புணர்வு மற்றும் பொதுமக்கள் தொடர்புகள்.
  • திணைக்கள வெளியீடுகளினை விற்பனை செய்தல்.
ஆலோசனை மற்றும் ஊக்குவிப்புப் பிரிவின் அமைவிடம்
  • 2 ஆவது தளம்
  • உள்நாட்டு இறைவரித் திணைக்களம்
  • சேர் சிற்றம்பலம் கார்டினர் மாவத்தை
  • கொழும்பு 02
தொடர்புகளுக்கு :
  • சிரேஷ்ட ஆணையாளர்
    தொலைபேசி : 011 - 213 4250
    மின்னஞ்சல் : ranasinghe.hsj@ird.gov.lk
  • ஆணையாளர்கள்
    தொலைபேசி : 011 - 213 4205
    மின்னஞ்சல் : csp@ird.gov.lk
மேல்


மத்திய ஆவண முகாமைத்துவ அலகு

மத்திய ஆவண முகாமைத்துவ அலகானது உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு வரி செலுத்துனர்களினால் அனுப்பி வைக்கப்படும் அனைத்து ஆவணங்களினையும் சேகரிக்கின்றது.

மத்திய ஆவண முகாமைத்துவ அலகின் பிரதான நடவடிக்கைகள்
  • வரி விபரத்திரட்டுக்களினை சேகரித்தலும் அனைத்து வரி வகைகளுக்குமான பெற்றுக் கொண்டமைக்கான கடிதங்களினை வழங்குதலும்
  • மேன்முறையீடுகள், ஆட்சேபனைகள் மற்றும் விசாரணைகள் தொடர்பான வரி மதிப்பீடுகளினைச் சேகரித்தல்.
  • வரியுடன் தொடர்புடைய ஏனைய அனைத்து ஆவணங்களினையும் சேகரித்தல்.
வாடிக்கையாளர் தகவல் இற்றைப்படுத்தல் அலகின் அமைவிடம்
  • 1 ஆவது தளம்
  • உள்நாட்டு இறைவரித் திணைக்களம்
  • சேர் சிற்றம்பலம் கார்டினர் மாவத்தை
  • கொழும்பு 02
தொடர்புகளுக்கு :
  • சிரேஷ்ட ஆணையாளர்
    தொலைபேசி : 011 - 213 4250
    மின்னஞ்சல் : jayaratne.iv@ird.gov.lk
  • ஆணையாளர்கள்
    தொலைபேசி : 011 - 213 4751
    மின்னஞ்சல் : cdm@ird.gov.lk
மேல்
​​
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது: 29-08-2024
Thank You! Tell Us More !!