Skip Ribbon Commands
Skip to main content
Issuing of Privilege Cards
முகப்பு :: பயனுள்ள தகவல் :: சிறப்புரிமை அட்டைகளை வழங்குதல்

சிறப்புரிமை அட்டைகளை வழங்குதல்

  • முன்னைய வரி மதிப்பீட்டாண்டில் செலுத்தப்பட்ட வருமான வரியின் அடிப்படையில் வருடாந்தம் வழங்கப்படுகின்றது.
தகைமை
  • வரி மதிப்பீட்டாண்டிற்கு ரூபா 500,000 இற்கு மேற்பட்ட வருமான வரியினைச் செலுத்தி கொடுப்பனவையும் விபரத்திரட்டினையும் உரிய திகதியன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ சமர்ப்பித்த தனிநபர்கள்.
சிறப்புரிமை அட்டைகள்
  • தங்கம்- ரூபா 1000,000 இற்கும் மேல் செலுத்துகின்ற தனிப்பட்ட நபர்களுக்கு வழங்கப்படுகின்றது.
  • வெள்ளி – ரூபா 500,000 இற்கும் மேல் செலுத்துகின்ற தனிப்பட்ட நபர்களுக்கு வழங்கப்படுகின்றது.


நன்மைகள்

தொ/இல. நன்மைகள்
பொதுவானவை
1. அனைத்து அரச முகவராண்மைகள், அரச வங்கிகள், இலங்கை விமான நிலைய அதிகாரசபை மற்றும் துறைமுக அதிகாரசபை என்பவற்றில் முன்னுரிமை
2.         கொழும்பு விமான நிலையத்தினை வந்தடையும் போது விசேட வழிப்பாதை
3.         புறப்பட்டுச் செல்லுதல் மற்றும் வந்து சேருதல் தளங்களில் நிறைவேற்றுத்தர ஓய்வு பெறும் இடத்தின் கட்டணமின்றிய பயன்பாடு X
மக்கள் வங்கியிடமிருந்து
1.        மக்கள் வங்கியின் வீசா தங்க கடன் அட்டை  (இணைப்புக் கட்டணமின்றி  ரூபா 500,000/-  ரூபா 250,000/-
2.        பயணிகள் காசோலையினை வழங்குதல் தரகுப் பணமின்றி 50% கழிவுடன்
3.        மக்கள் வங்கியின் முழுமையான துணைக் கம்பனியான பீப்பள்ஸ் ட்ரவல்ஸ் கம்பனி லிமிட்டிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் விமானச் சீட்டுக்கான கழிவு 7% 5%
4.        கட்டணமின்றி தமது வியாபார / வர்த்தக விடயங்கள் குறித்து கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கு கொழும்பில் வங்கியின் கடல் கடந்த வாடிக்கையாளர் பிரிவிலுள்ள வங்கியின் மிக முக்கியமான நபர்கள் ஓய்வு பெறும் அறையினைப் பயன்படுத்துதல்
5.        தரகுப்பணமின்றி தெரிவு செய்யப்பட்ட வங்கி வலையமைப்பு கிளைகளுக்கிடையிலான நிதிப்பரிமாற்றங்கள் (129 கிளைகளினைக் கொண்டிருக்கின்ற பட்டியல்)
6.        அனைத்து இலங்கை ரூபா மற்றும் வெளிநாட்டு நாணய நிலையான வைப்புக்கள் மற்றும் அழைப்பு வைப்புக்களுக்கான விசேட வரி வீதங்கள்
7.        தலைமை அலுவலகத்தினூடாக 2 வாரங்களினுள் (கொழும்பும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களிலும் அமைந்துள்ள ஆதனங்கள் மட்டும்) செயல்முறைப்படுத்தப்பட்டு வீடமைப்புக் கடன்கள் வழங்கப்படும் (வங்கிகளின் கடன் வழங்கல் வழிகாட்டிகளின்படி)
8.        கணக்கு வைத்திருப்போருக்கான வதிவிடங்களிலிருந்து காசு / காசு சேகரிப்பு வழங்குதல்
9.        75% சாதாரண வீதங்களிலான பாதுகாப்பு பெட்டகங்கள்
10.     “காத்திருக்காமல்” கிளை முகாமையாளரை நேரடியாக சந்தித்தல்
இலங்கை வங்கியிடமிருந்து
1.         இணைப்புக்கான கட்டணம் அறவிடப்பட மாட்டாது ரூபா. 1.0 மி இதனைத் தொடர்ந்து இது பிளாற்றினம் அட்டையாக தரமுயரத்தப்படும் ரூபா 0.5 மி
2.         கடன் வசதிகளை முன்னுரிமை வீதங்களில் கருத்தில் கொள்ளுதல்
3.         சலுகை வட்டி வீதங்கிளல் மத்திய குத்தகைப் பிரிவிலிருந்து அலுவலக உபகரணங்கள் உள்ளடங்கலான வாகனங்களின் கொள்வனவுக்கான கடன் வசதிகள்
4.         சலுகை வட்டி வீதங்களில் வீட்டுக் கடன் பிரிவிலிருந்தான வீடமைப்புக் கடன்கள்
5.         அநுராதபுரம், கதிர்காம்ம் மற்றும் மேல் / தாழ் கிலெயின்கெயிம், டிக்காயா சீபாங் பங்களாக்களில்முன்னுரிமை அடிப்படையில் அறைகளுக்கான கொடுப்பனவின் அரைவாசியைச் செலுத்தும் சலுகை. மீதி 50% சந்தைப்படுத்தல் திட்டத்தின் கீழ் ஹொலிடே ஹோம்ஸ் லிமிட்டட் மீள நிரப்புதல்
6.         வர்த்தக மாநாடுகளுக்காக இலங்கை வங்கி தலைமையகத்தின் 30 ஆவது மாடியிலுள்ள வர்த்தக மத்திய நிலையத்தினை பல் ஊடக வசதி மற்றும் பொது மக்களுக்கு விளக்கமளிக்கும் முறைமைகளுடன் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு √ ​​​​​​​​
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது: 28-04-2016