பெசேவ மீளளிப்பு நடைமுறை
பதிவு செய்யப்பட்ட ஆளொருவர் அவர் மேற்கொள்கின்ற வரி விதிக்கத்தக்க வழங்கல்களுக்கு மட்டுமே மீளளிப்புக் கோரிக்கையினை விடுப்பதற்கு உரித்துடையவராவார். ஆனால், பதப்படுத்தப்படாமல் மீள் விற்பனை செய்யப்படும் பொருட்களின் இறக்குமதி மீது சுங்கத் திணைக்களத்தினால் சேகரிக்கப்பட்ட பெசேவ மீளளிக்கப்படமாட்டாது. பிரிவு 22(7) இன் கீழ் பதிவு செய்யப்பட்ட எவரேனும் ஆளொருவரெனில், பொருட்கள் அல்லது சேவைகளின் கொள்வனவு மீது செலுத்தப்பட்ட பெறுமதி சேர் வரிக்கான ஏதேனும் தொகையினை அதன் வியாபார தொழிற்பாடுகள் ஆரம்பிக்க முன்னர் (கருத்திட்ட அமுலாக்க காலப்பகுதியில்) வெளியீடு எதுவும் இல்லாத போதிலும் கூட மீளளிப்பாக உரிமை கோர முடியும்.
பதிவு செய்யப்பட்ட ஆளொருவருக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய மீளளிப்பானது செலவின் வவுச்சரின் மூலம் ஒரு பகுதியும் மீதிப் பகுதியானது காசோலை மூலமாகவும் இரண்டு பகுதிகளாக வழங்கப்படலாம்.
வரி தவறவிடலானது இறக்குமதியின் போது இடம்பெறுகின்றது. சட்டத்தின் ஏற்பாடுகளுக்கிணங்க, இந்த வசதியினைப் பெற்றுள்ள அத்தகைய ஆட்கள், இறக்குமதி நேரத்தில் பெசேவ இனைச் செலுத்தாமல் இறக்குமதிகளை மேற்கொள்ள முடியும். தவறவிடப்பட்ட இறக்குமதிகளைக் குறிப்பிடுவதற்கு பெசேவ விபரத்திரட்டில் இறக்குமதிகளைக் காண்பிக்கின்ற கூட்டினுள் தனியானதொரு நிரல் ஒதுக்கிடப்பட்டுள்ளதுடன் செலவின வவுச்சரானது அவ்வாறு தவறவிடப்பட்ட வரித் தொகைக்கு வழங்கப்படுகின்றது.
பின்வரும் வகையீடுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட எவரேனும் ஆள் மீளளிப்புக்கான கோரிக்கையினை விடுக்க முடியும்.
- பெசேவ சட்டத்தின் 7 ஆம் பிரிவின் கீழான ஏற்றுமதியாளர்கள் அல்லது பூச்சிய வீதமளிக்கப்பட்ட சேவை வழங்குனர்கள்.
- ஏற்றுமதியாளரொருவருக்கென அவரினால் தயாரிக்கப்பட்ட பொருட்களை வழங்குகின்ற (ஏற்றுமதியாளர் எனக் கருதப்படும்) தயாரிப்பாளர்.
- ஏற்றுமதிக்காக தயாரிக்கப்பட்ட பொருட்களின் தரம், அம்சம் அல்லது பெறுமதியினை மேம்படுத்துவதற்கு காரணமாகவுள்ள ஏற்றுமதியாளர் ஒருவருக்கான சேவைகளை வழங்குகின்ற பெறுமதி சேர் சேவை வழங்குனர் ஒருவர்.
- பிரிவு 22(7) இன் கீழ் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கருத்திட்டம் – (கருத்திட்ட அமுலாக்க காலப் பகுதியில்)
- ஏதேனும் விதித்துரைக்கப்பட்ட கருத்திட்டத்தில் ஈடுபடுகின்ற ஆளொருவர்.
- விதித்துரைக்கப்பட்ட கருத்திட்டம் அல்லது உபாய அபிவிருத்திக் கருத்திட்டமொன்றிற்கான பொருட்கள் அல்லது சேவைகளை வழங்குகின்ற எவரேனும் வழங்குனர்.
மேலும், இபெசேவ திட்டத்தின் பதிவு செய்யப்பட்டு இனங் காணப்பட்ட ஆட்களாக பதிவு செய்வதற்கு தகைமையுடைய மேற்குறித்த ஆட்கள் மற்றும் பெசேவ இல்லாமல் பொருட்கள் சேவைகளை கொள்வனவு செய்வதற்கு தகைமையுடைய ஆட்கள்.
தேவையில்லாத தாமதங்களின்றி பெசேவ மீளளிப்பினை வழங்கும் பொருட்டு, மேற்படி ஆட்கள் பின்வரும் நடைமுறைகளுடன் இணங்குதல் வேண்டும்.
- முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட பெசேவ விபரத்திரட்டுக்கள் சரியான இடத்தில் உரிய திகதிகளில் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
- உள்நாட்டு இறைவரி திணைக்கள கட்டிடத்தின் 2 ஆவது மாடியிலுள்ள சிரேஷ்ட ஆணையாளருக்கு (பெசேவ) சமர்ப்பிக்கப்பட வேண்டிய விதித்துரைக்கப்பட்ட கருத்திட்டங்கள் அல்லது உபாய அபிவிருத்திக் கருத்திட்டத்துடன் தொடர்புடைய விபரத்திரட்டுக்கள்.
- 7 ஆவது மாடியிலுள்ள தரவு நிரற்படுத்தல் வருமான நிருவாகப் பிரிவுக்கான ஏனைய விபரத்திரட்டுக்கள்.
- SEC 2008/3 மற்றும் SEC 2008/4 இன் கீழ் வழங்கப்படும் வழிகாட்டுதல்கள் விதித்துரைக்கப்பட்ட கருத்திட்டங்கள் மற்றும் அத்தகைய கருத்திட்டங்களின் வழங்குனர்கள் தொடர்பில் பின்பற்றப்படுதல் வேண்டும்.
- பின்வரும் விடயங்கள் விபரத்திரட்டுக்களில் சரியாக குறிப்பிடப்பட்டுள்ளனவா என்பதனை உறுதிப்படுத்துக.
- குறித்த ஆண்டு காலப்பகுதியில் இறக்குமதிகளின் மீதான உள்ளீட்டு பெசேவ.
- குறித்த ஆண்டு காலப்பகுதியில் உள்நாட்டு கொள்வனவுகளின் மீதான உள்ளீட்டு பெசேவ.
- குறித்த ஆண்டு காலப்பகுதியில் ஏற்றுமதிகளின் தொகை
- குறித்த ஆண்டு காலப்பகுதியில் இடைநிறுத்தப்பட்ட விற்பனைத் தொகை
- பெசேவ மீளளிப்பு பிரிவு குறித்த ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு அழைக்கும் வரையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை தாங்கள் தயாரித்து தங்களுடன் வைத்திருத்தல் வேண்டும்.
- இயைபான காலப்பகுதிக்குரிய மூல cus–decs உடனான இறக்குமதிகளின் (தவறவிடப்பட்ட மற்றும் முற்கூட்டிய ) அட்டவணையொன்று
- ஏற்றுமதி அட்டவணை – சுங்க ஏற்றுமதித் தரவுடன் இணங்கும் ஏற்றுமதிகளின் தரவு விபரத்திரட்டாக இருக்குமிடத்து அல்லது வெளிப்படுத்திய ஏற்றுமதிகளின் 10% இற்கும் குறைவான வித்தியாசத்தினைக் கொண்டிருப்பின்,
- ஏற்றுமதி கணக்கிணக்கம் – சுங்க ஏற்றுமதித் தரவுடன் இணங்காத ஏற்றுமதி தரவு விபரத்திரட்டாக இருக்குமிடத்து அல்லது வெளிப்படுத்திய ஏற்றுமதிகள் 10% இற்கு மேற்பட்ட வித்தியாசத்தினைக் கொண்டிருப்பின்,
- இயைபான காலப்பகுதிக்கான மூல வரி விபரப் பட்டியல்களுடனான உள்நாட்டு கொள்வனவுகளின் அட்டவணை
- திணைக்களத்தினால் மேற்குறித்த தகவல் குறித்து அழைக்கப்படும்போது அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதியானவர், மேற்படி அட்டவணைகள் மற்றும் விலை விபரப் பட்டியல்களினை உறுதிப்படுத்துவதற்காக பெசேவ மீளளிப்பு பிரிவுக்கு சமூகமளித்தல் வேண்டும்.
- மீளளிப்பினை வழங்கும் செயற்பாட்டுக்காக பின்வருவன பூர்த்தி செய்யப்பட வேண்டியுள்ளது.
- இடைநிறுத்தப்பட்ட விற்பனை உறுதிப்படுத்துகை
- வியாபார நிலையத்தினை உறுதிப்படுத்துவதற்கு மீளளிப்பு அலுவலரினால் விஜயம் செய்யப்பட்ட இடம்
- வரி விடுவிப்புச் சான்றிதழ்
- வங்கிக் கணக்கின் சரியான விபரங்கள்
- மேற்படி தேவைப்பாடுகள் பூர்த்தி செய்யப்படுமாயின், மீளளிப்பானது எவ்வித சீராக்கங்களுமின்றி மேற்கொள்ளப்படும்.
- ஏற்றுமதிப் பெறுமதிகள், இடைநிறுத்தப்பட்ட விற்பனைகள், இறக்குமதிகள் மீதான உள்ளீடு மற்றும் உள்நாட்டு கொள்வனவுகள் போன்றவற்றில் ஏதேனும் சீராக்கல்கள் இருப்பின், மீளளிப்பானது அதற்கிணங்க சீராக்கப்படும்.
- இறுதியாக காசோலையானது உரியவரின் பெயரிலுள்ள வங்கிக் கணக்கிற்கு வழங்கப்படுவதுடன், செலவின வவுச்சரானது குறித்த பதிவு செய்யப்பட்ட ஆளின் பெயருக்கு வழங்கப்படும்.