සිංහලதமிழ்English
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் வழங்கப்படும் கொடுப்பனவு நறுக்கில் (Paying In Slip - PIS) சுட்டிக்காட்டப்பட்டுள்ள, ஒவ்வொரு வரி வகையின் கீழும் செலுத்த வேண்டிய ஒவ்வொரு வரிக்கொடுப்பனவிற்குமான ஆவண அடையாள இலக்கமானது (DIN), வரிக் கொடுப்பனவை மேற்கொள்ளும் செயன்முறையில், கொடுப்பனவுகளை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வரி செலுத்துனர்கள் பேரேட்டில் பதிவு செய்வதற்கு அவசியமாக உள்ளது.
பல்வேறு காரணங்களால், குறிப்பாக தற்போது நிலவும் தொற்றுநோய் நிலைமை காரணமாகவும், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் வழங்கப்படும் ஆவண அடையாள இலக்கம் (DIN) சுட்டிக்காட்டப்பட்ட கொடுப்பனவு நறுக்கானது (PIS) சில வரி செலுத்துனர்களால் உரிய நேரத்தில் பெற்றுகொள்ளாமையை அவதானிக்கப்பட்டுள்ளது.
எனவே, வரி செலுத்துவோரின் வசதிக்காக அந்தந்த வரி செலுத்துனர் அடையாள இலக்கம் (TIN) தொடர்பான செலுத்தவேண்டிய வரிக் கொடுப்பனவுக்குரிய ஆவண அடையாள இலக்கங்கள் (DIN), இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.