2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழான பொருள்கோடல் குழு
ஏனைய சட்டவாக்கங்கள் எவ்வாறிருந்த போதிலும், 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் (2011 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டம்) 208அ பிரிவில் விதித்துரைக்கப்பட்டவாறு, உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட குழுவானது (சிரேஷ்ட அலுவலர்களைக் கொண்ட) உள்நாட்டு இறைவரி திணைக்களத்தினால் நிருவகிக்கப்படும் ஏதேனும் சட்டவாக்கத்தின் ஏற்பாடுகளை கருத்துரைப்பதற்கான நியதிச்சட்ட தத்துவமளிக்கப்படுகின்றது. அத்தகைய ஆணைக்கு அமைவாக சட்ட ஏற்பாடுகளின் ஒருமுகத்தன்மையை உறுதிப்படுத்தும் முகமாக அவசியமான வழிகாட்டல்களை, அறிவுறுத்தல்களை வழங்குவதற்கு அல்லது பிரயோகிப்பதற்கு அக்குழு வேண்டப்படுகின்றது.
குழு
பெயர் |
பதவி |
குழுப் பதவி நிலை |
திரு. எம். ஜி.சோமசந்திர |
பிரதி ஆணையாளர் நாயகம் |
தலைவர் |
திருமதி. எச்.எம்.டி.முனசிங்க |
பிரதி ஆணையாளர் நாயகம் |
உறுப்பினர் |
திருமதி. கே. எஸ். பி. ஆர். டி. எஸ். கருணாரத்ன |
பிரதி ஆணையாளர் நாயகம் |
உறுப்பினர் |
திரு. ஏ.ஏ.தயாரத்ன |
பிரதி ஆணையாளர் நாயகம் |
உறுப்பினர் |
திரு. டி.ஆர்.எஸ்.ஹப்புஆரச்சி |
சிரேஷ்ட ஆணையாளர் |
உறுப்பினர் |
திரு. ஆர்.எம் ஜயசிங்க |
சிரேஷ்ட ஆணையாளர் |
உறுப்பினர் |
திருமதி. ஆர்.பீ. எச். பெர்னாண்டோ |
ஆணையாளர் |
உறுப்பினர் |
திருமதி. எஎஸ்.எம் விக்கிரமாராச்சி |
ஆணையாளர் (செயலகம்) |
குழுவின் செயலாளர் |
உள்ளடக்கப்பட்ட சட்டவாக்கங்கள்
குழுவின் ஆணையானது உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தின் நோக்கெல்லையின் கீழ் தற்போது நிருவகிக்கப்பட்டு வரும் பின்வரும் சட்டவாக்கங்கள் (அனைத்து திருத்தம் செய்கின்ற சட்டங்களும் உள்ளடங்கலாக) பின்வரும் சட்டவாக்கங்களிலிருந்து எழுகின்ற விடயங்களை உள்ளடக்குகின்றது.
- 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம்
- 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச் சட்டம்
- 2006 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க பொருளாதார சேவைக் கட்டண சட்டம்
- 2006 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க தேசக் கட்டுமான வரிச் சட்டம்
- 2006 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க முத்திரை தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டம்
- 1982 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க முத்திரை தீர்வை சட்டம்
- 1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க பந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு சட்டம்
- 2005 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழான பகுதி II (பங்கு பரிமாற்ற விதிப்பனவு) மற்றும் பகுதி III (நிருமாண கைத்தொழில் உத்தரவாத நிதிய விதிப்பனவு)
- அமுல்படுத்தப்பட்டு தற்போது நீக்கப்பட்ட ஏனைய சட்டவாக்கங்கள் (ஆணையாளர் நாயகத்தினால் நிருவகிக்கப்படுகின்ற) மற்றும் அதன் கீழ் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்ற வரி மதிப்பீடு அல்லது சேகரிப்புடன் தொடர்புடைய விடயங்கள்.
கோரிக்கையொன்றுக்கான நடைமுறை
கோரிக்கை கடிதங்கள் குழுவுக்கு முகவரியிடப்பட்டு பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும்.
-
செயலாளர்,
-
உரைபெயர்ப்புக் குழு,
-
செயலகம்,
-
உள்நாட்டு இறைவரித் திணைக்களம்,
-
கொழும்பு – 02.
ஏனைய தொடர்புடைய அனைத்து தகவல்களும் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
மதிப்பீடொன்றுக்கெதிராக மேன்முறையீடு அல்லது ஆட்சேபனையானது ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வரும் விடயம் அல்லது பிரச்சனையாயினும், குழுவுக்கு எடுத்துரைக்கலாம். ஏதேனும் சட்டவிதியுடன் தொடர்புபட்டிருப்பின், (எவ்வாறாயினும், உரிய அனைத்து விபரங்களுடனும் அவ்வாறே கோவை இலக்கம், வரி செலுத்துனர் அடையாள இலக்கம், உரிய காலப்பகுதி போன்ற விபரங்கள் வழங்கப்படுதல் வேண்டும்.)
ஏதேனும் சட்டக் கேள்வியுடன் தொடர்புபட்டிருப்பின், வரி மேன்முறையீட்டு ஆணைக்குழு அல்லது ஏதேனும் நீதிமன்றம் முன்பாக நிலுவையிலுள்ள வழக்கொன்றின் ஏதேனும் விடயம் அல்லது பிரச்சனையுடன் தொடர்புடைய உரைபெயர்ப்புக்கான ஏதேனும் கோரிக்கையை சமர்ப்பித்தலாகாது.
அதற்கிணங்க, தொடர்புடைய சட்டவாக்கங்களின் ஏற்பாடுகளுக்கு அமைவாக குழுவினால் வழங்கப்பட்ட உரைபெயர்ப்புகள் வருமான அதிகாரிகள், வரி செலுத்துனர்கள், வரி செயற்பாட்டாளர்களால் மதிப்பீடு செய்யப்படுதல் அவசியமெனக் கருதப்படுகின்றது.
ஆகையால், அத்தகைய உரைபெயர்ப்புக்கள் தொகுக்கப்பட்டு பொதுமக்களின் தேவைகருதி வெளியிடப்பட்டு வருகின்றன.