Skip Ribbon Commands
Skip to main content
Issuing of Privilege Cards
முகப்பு :: பயனுள்ள தகவல் :: சிறப்புரிமை அட்டைகளை வழங்குதல்

சிறப்புரிமை அட்டைகளை வழங்குதல்

  • முன்னைய வரி மதிப்பீட்டாண்டில் செலுத்தப்பட்ட வருமான வரியின் அடிப்படையில் வருடாந்தம் வழங்கப்படுகின்றது.
தகைமை
  • வரி மதிப்பீட்டாண்டிற்கு ரூபா 500,000 இற்கு மேற்பட்ட வருமான வரியினைச் செலுத்தி கொடுப்பனவையும் விபரத்திரட்டினையும் உரிய திகதியன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ சமர்ப்பித்த தனிநபர்கள்.
சிறப்புரிமை அட்டைகள்
  • தங்கம்- ரூபா 1000,000 இற்கும் மேல் செலுத்துகின்ற தனிப்பட்ட நபர்களுக்கு வழங்கப்படுகின்றது.
  • வெள்ளி – ரூபா 500,000 இற்கும் மேல் செலுத்துகின்ற தனிப்பட்ட நபர்களுக்கு வழங்கப்படுகின்றது.


நன்மைகள்

தொ/இல. நன்மைகள்
பொதுவானவை
1. அனைத்து அரச முகவராண்மைகள், அரச வங்கிகள், இலங்கை விமான நிலைய அதிகாரசபை மற்றும் துறைமுக அதிகாரசபை என்பவற்றில் முன்னுரிமை √ √
2.         கொழும்பு விமான நிலையத்தினை வந்தடையும் போது விசேட வழிப்பாதை √ √
3.         புறப்பட்டுச் செல்லுதல் மற்றும் வந்து சேருதல் தளங்களில் நிறைவேற்றுத்தர ஓய்வு பெறும் இடத்தின் கட்டணமின்றிய பயன்பாடு √ X
மக்கள் வங்கியிடமிருந்து
1.        மக்கள் வங்கியின் வீசா தங்க கடன் அட்டை  (இணைப்புக் கட்டணமின்றி)   ரூபா 500,000/-  ரூபா 250,000/-
2.        பயணிகள் காசோலையினை வழங்குதல் தரகுப் பணமின்றி 50% கழிவுடன்
3.        மக்கள் வங்கியின் முழுமையான துணைக் கம்பனியான பீப்பள்ஸ் ட்ரவல்ஸ் கம்பனி லிமிடட்டிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் விமானச் சீட்டுக்கான கழிவு 7% 5%
4.        கட்டணமின்றி தமது வியாபார / வர்த்தக விடயங்கள் குறித்து கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கு கொழும்பில் வங்கியின் கடல் கடந்த வாடிக்கையாளர் பிரிவிலுள்ள வங்கியின் மிக முக்கியமான நபர்கள் ஓய்வு பெறும் அறையினைப் பயன்படுத்துதல் √ √
5.        தரகுப்பணமின்றி தெரிவு செய்யப்பட்ட வங்கி வலையமைப்பு கிளைகளுக்கிடையிலான நிதிப்பரிமாற்றங்கள் (129 கிளைகளினைக் கொண்டிருக்கின்ற பட்டியல்) √ √
6.        அனைத்து இலங்கை ரூபா மற்றும் வெளிநாட்டு நாணய நிலையான வைப்புக்கள் மற்றும் அழைப்பு வைப்புக்களுக்கான விசேட வரி வீதங்கள் √ √
7.        தலைமை அலுவலகத்தினூடாக 2 வாரங்களினுள் (கொழும்பும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களிலும் அமைந்துள்ள ஆதனங்கள் மட்டும்) செயல்முறைப்படுத்தப்பட்டு வீடமைப்புக் கடன்கள் வழங்கப்படும்​ (வங்கிகளின் கடன் வழங்கல் வழிகாட்டிகளின்படி) √ √
8.        கணக்கு வைத்திருப்போருக்கான வதிவிடங்களிலிருந்து காசு / காசு சேகரிப்பு வழங்குதல் √ √
9.        75% சாதாரண வீதங்களிலான பாதுகாப்பு பெட்டகங்கள் √ √
10.     “காத்திருக்காமல்” கிளை முகாமையாளரை நேரடியாக சந்தித்தல் √ √
இலங்கை வங்கியிடமிருந்து
1.         இணைப்புக்கான கட்டணம் அறவிடப்பட மாட்டாது ரூபா. 1.0 மி இதனைத் தொடர்ந்து இது பிளாற்றினம் அட்டையாக தரமுயரத்தப்படும் ரூபா 0.5 மி
2.         கடன் வசதிகளை முன்னுரிமை வீதங்களில் கருத்தில் கொள்ளுதல் √ √
3.         சலுகை வட்டி வீதங்கிளல் மத்திய குத்தகைப் பிரிவிலிருந்து அலுவலக உபகரணங்கள் உள்ளடங்கலான வாகனங்களின் கொள்வனவுக்கான கடன் வசதிகள் √ √
4.         சலுகை வட்டி வீதங்களில் வீட்டுக் கடன் பிரிவிலிருந்தான வீடமைப்புக் கடன்கள் √ √
5.         அநுராதபுரம், கதிர்காம்ம் மற்றும் மேல் / தாழ் கிலெயின்கெயிம், டிக்காயா சீபாங் பங்களாக்களில்​முன்னுரிமை அடிப்படையில் அறைகளுக்கான கொடுப்பனவின் அரைவாசியைச் செலுத்தும் சலுகை. மீதி 50% சந்தைப்படுத்தல் திட்டத்தின் கீழ் ஹொலிடே ஹோம்ஸ் லிமிட்டட் மீள நிரப்புதல் √ √
6.         வர்த்தக மாநாடுகளுக்காக இலங்கை வங்கி தலைமையகத்தின் 30 ஆவது மாடியிலுள்ள வர்த்தக மத்திய நிலையத்தினை பல் ஊடக வசதி மற்றும் பொது மக்களுக்கு விளக்கமளிக்கும் முறைமைகளுடன் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு √ √ ​​​​​​​​
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது: 28-04-2016